கோத்தா சமரகான் (P197) மலேசிய மக்களவைத் தொகுதி ![]() | |
---|---|
Kota Samarahan (P197) Federal Constituency in Sarawak | |
![]() கோத்தா சமரகான் மக்களவைத் தொகுதி (P197 Kota Samarahan) | |
மாவட்டம் | சமரகான் மாவட்டம்; அசா செயா மாவட்டம்; செரியான் மாவட்டம்; கூச்சிங் மாவட்டம்; |
வட்டாரம் | சமரகான் பிரிவு; செரியான் பிரிவு; கூச்சிங் பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 82,909 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | கோத்தா சமரகான் மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கூச்சிங்; அசா செயா, கோத்தா சமரகான்; செரியான் |
பரப்பளவு | 745 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1987 |
கட்சி | சரவாக் கட்சிகள் கூட்டணி |
மக்களவை உறுப்பினர் | ரூபியா வாங் (Rubiah Wang) |
மக்கள் தொகை | 158,521 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1990 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
கோத்தா சமரகான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kota Samarahan; ஆங்கிலம்: Kota Samarahan Federal Constituency; சீனம்: 哥打三马拉汉国会议席) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தின், சமரகான் பிரிவு, செரியான் பிரிவு, கூச்சிங் பிரிவு ஆகிய 3 பிரிவுகளில்; சமரகான் மாவட்டம்; அசா செயா மாவட்டம்; செரியான் மாவட்டம்; கூச்சிங் மாவட்டம் ஆகிய 4 மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P197) ஆகும்.[5]
கோத்தா சமரகான் மக்களவைத் தொகுதி 1987-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1990-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1990-ஆம் ஆண்டில் இருந்து கோத்தா சமரகான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
சமரகான் மாவட்டம் என்பது மலேசியா, சரவாக், மாநிலத்தில் சமரகான் பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கோத்தா சமரகான் நகரம்.[7][8]
சமரகான் மாவட்டம்; அசா ஜெயா மாவட்டம்; சாடோங் ஜெயா துணை மாவட்டம்; ஆகியவை கோத்தா சமரகான் நகராண்மைக் கழக (Kota Samarahan Municipal Council) அதிகாரத்தின் கீழ் வருகின்றன.[9]
1983 ஆகஸ்டு 19-ஆம் தேதி முவாரா துவாங் எனும் துணை மாவட்டம்; முழு மாவட்ட நிலைக்குத் தகுதி உயர்த்தப் பட்டது. அதன் பின்னர் சமரகான் மாவட்டம் என புதுப் பெயரில் மாற்றம் கண்டது.
மாவட்டத் தகுதி உயர்வுக்கு ஏற்ற வகையில், சமரகான் நகர்ப் பகுதியில் இருந்த முவாரா துவாங் சந்தையும் (Muara Tuang bazaar) ஒரு நகரம் எனும் தகுதிக்கு நிலை உயர்த்தப்பட்டது. அந்த வகையில் கோத்தா சமரகான் என்று இப்போது அனைவராலும் அறியப் படுகிறது.
கோத்தா சமரகான் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)
கோத்தா சமரகான் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)
கோத்தா சமரகான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1999 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
கோத்தா சமரகான் தொகுதி 1996-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
8-ஆவது மக்களவை | P159 | 1990-1995 | அப்துல் தாயிப் மகமூத் (Abdul Taib Mahmud) |
பாரிசான் நேசனல் (ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி) (PBB) |
9-ஆவது மக்களவை | P171 | 1995-1999 | ||
10-ஆவது மக்களவை | 1999-2004 | |||
11-ஆவது மக்களவை | P197 | 2004-2008 | ||
12-ஆவது மக்களவை | 2008-2013 | சுலைமான் அப்துல் ரகுமான் டாயிப் (Sulaiman Abdul Rahman Taib) | ||
13-ஆவது மக்களவை | 2013-2018 | ரூபியா வாங் (Rubiah Wang) | ||
14-ஆவது மக்களவை | 2018 | |||
2018-2022 | சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS) (ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி) (PBB) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
ரூபியா வாங் (Rubiah Wang) | சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS) | 56,211 | 79.99 | 79.99 ![]() | |
அபாங் அப்துல் அலீல் (Abg Abdul Halil Abg Naili) | பாக்காத்தான் அரப்பான் (PH) | 14,061 | 20.01 | 0.77 ![]() | |
மொத்தம் | 70,272 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 70,272 | 98.42 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 1,127 | 1.58 | |||
மொத்த வாக்குகள் | 71,399 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 82,229 | 86.83 | 7.89 ![]() | ||
Majority | 42,150 | 59.98 | 12.60 ![]() | ||
சரவாக் கட்சிகள் கூட்டணி கைப்பற்றியது | |||||
மூலம்: [11] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)