கோத்தா பாரு (P021) மலேசிய மக்களவைத் தொகுதி கிளாந்தான் | |
---|---|
Kota Bharu (P021) Federal Constituency in Kelantan | |
கோத்தா பாரு மக்களவைத் தொகுதி (P021 Kota Bharu) | |
மாவட்டம் | கோத்தா பாரு மாவட்டம் கிளாந்தான் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 115,466 (2023)[1] |
வாக்காளர் தொகுதி | கோத்தா பாரு தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோத்தா பாரு, பெங்காலான் செப்பா, குபாங் கிரியான், பாசிர் மாஸ், கெத்தேரே, பாசிர் பூத்தே, பாச்சோக் |
பரப்பளவு | 33 ச.கி.மீ |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | தகியுதீன் அசன் (Takiyuddin Hassan) |
மக்கள் தொகை | 130,801 (2020) [2] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[3] |
கோத்தா பாரு மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kota Bharu; ஆங்கிலம்: Kota Bharu Federal Constituency; சீனம்: 哥打峇鲁国会议席) என்பது மலேசியா, கிளாந்தான், கோத்தா பாரு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P021) ஆகும்.[5]
கோத்தா பாரு மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து கோத்தா பாரு மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
கோத்தா பாரு நகரம் கோத்தா பாரு மாவட்டத்தில் அமைந்துள்ள கிளாந்தான் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். தீபகற்ப மலேசியாவின் வடகிழக்குப் பகுதியில், தாய்லாந்து எல்லைக்கு அருகில், கிளாந்தான் ஆற்றின் முகத்துவாரத்தில் கோத்தா பாரு மாநகரம் அமைந்து உள்ளது.
கோத்தா பாரு 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிறுவப்பட்டது. இந்த நகரம் நிறுவப்படுவதற்கு முன்பு, கோத்தா பாருவில் கிளாந்தானின் அரச அரண்மனை இருந்தது. 1844-ஆம் ஆண்டில் கிளாந்தான் சுல்தான் முகமது II (Sultan Muhammad II), கோத்தா பாருவைக் கிளாந்தான் மாநிலத் தலைநகரமாக மாற்றி அமைத்தார்.
இரண்டாம் உலகப் போரின் போது, கோத்தா பாருவில் இருந்து சுமார் 10 கி.மீ. (6.2 மைல்) தொலைவில் இருந்த பந்தாய் சபாக் எனும் கடற்கரை கிராமம்தான், சப்பானியப் படையெடுப்புப் படைகளின் தரையிறங்கும் இடமாக இருந்தது.[7]
கோத்தா பாருவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையான மக்கள் கிளாந்தானிய மலாய் இனத்தவர்கள் ஆவர். கோத்தா பாருவில் பேசப்படும் மொழியைக் கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழி என்று அழைக்கிறார்கள். இந்த நகரில் சீன மக்களும் ஓரளவிற்கு அதிகமாக உள்ளனர். இந்தியர்கள் மிகவும் குறைவு.
கோத்தா பாரு மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1974-ஆம் ஆண்டில் கோத்தா பாரு ஈலிர் தொகுதியில் இருந்து கோத்தா பாரு தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
4-ஆவது மக்களவை | P019 | 1974–1978 | தெங்கு அகமத் ரிதாவுடீன் (Tengku Ahmad Rithauddeen) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | |||
6-ஆவது மக்களவை | 1982–1986 | |||
7-ஆவது மக்களவை | 1986–1990 | |||
8-ஆவது மக்களவை | 1990–1995 | இலானி இசாக் (Ilani Isahak) |
செமாங்காட் 46 | |
9-ஆவது மக்களவை | P021 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | ரம்லி இப்ராகிம் (Ramli Ibrahim) |
மாற்று முன்னணி (கெஅடிலான்) | |
11-ஆவது மக்களவை | 2004–2008 | சையத் இப்ராகிம் (Zaid Ibrahim) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | |
12-ஆவது மக்களவை | 2008–2013 | வான் அப்துல் ரகீம் வான் அப்துல்லா (Wan Abdul Rahim Wan Abdullah) |
பாக்காத்தான் ராக்யாட் (மலேசிய இசுலாமிய கட்சி) | |
13-ஆவது மக்களவை | 2013–2018 | தகியுதீன் அசன் (Takiyuddin Hassan) | ||
14-ஆவது மக்களவை | 2018–2020 | மலேசிய இசுலாமிய கட்சி | ||
2020–2022 | பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
115,450 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
79,028 | 67.58% | ▼ - 9.42% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
78,019 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
288 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
721 | ||
பெரும்பான்மை (Majority) |
22,613 | 28.99% | + 20.23 |
வெற்றி பெற்ற கட்சி | மலேசிய இசுலாமிய கட்சி | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[8] |
கட்சி | வேட்பாளர் | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
மலேசிய இசுலாமிய கட்சி | தகியுதீன் அசன் (Takiyuddin Hassan) |
78,019 | 41,869 | 53.67% | + 11.43% | |
பாக்காத்தான் அரப்பான் | அபிட்சா முசுதகிம் (Hafidzah Mustakim) |
- | 19,256 | 24.68% | - 8.80 % ▼ | |
பாரிசான் நேசனல் | ரோசுமதி இஸ்மாயில் (Rosmadi Ismail) |
- | 16,168 | 20.72% | - 3.55% ▼ | |
பூமிபுத்ரா கட்சி | செ மூசா செ ஒமார் (Che Musa Che Omar) |
- | 528 | 0.68% | + 0.68% | |
மலேசிய மக்கள் கட்சி | அன்டி தான் அவாங் (Andy Tan @ Awang) |
- | 107 | 0.14% | + 0.14% | |
சுயேச்சை | இசாட் புகாரி (Izat Bukhary) |
- | 91 | 0.12% | + 0.12% |