கோத்தா பெலுட் (P169) மலேசிய மக்களவைத் தொகுதி சபா | |
---|---|
Kota Belud (P169) Federal Constituency in Sabah | |
கோத்தா பெலுட் மக்களவைத் தொகுதி (P169 Kota Belud) | |
மாவட்டம் | கோத்தா பெலுட் மாவட்டம் மேற்கு கரை பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 79,885 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | கோத்தா பெலுட் மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோத்தா பெலுட் மாவட்டம் |
பரப்பளவு | 1,372 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1966 |
கட்சி | சபா பாரம்பரிய கட்சி |
மக்களவை உறுப்பினர் | இசுனாரயிசா முனிரா (Isnaraissah Munirah) |
மக்கள் தொகை | 107,243 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1969 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
கோத்தா பெலுட் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kota Belud; ஆங்கிலம்: Kota Belud Federal Constituency; சீனம்: 哥打毛律联邦选区) என்பது மலேசியா, சபா மாநிலத்தின் மேற்கு கரை பிரிவின், கோத்தா பெலுட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P169) ஆகும்.[5]
கோத்தா பெலுட் மக்களவைத் தொகுதி 1966-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1969-ஆம் ஆண்டில் இருந்து கோத்தா பெலுட் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
கோத்தா பெலுட் மாவட்டம் என்பது சபா மாநிலம், மேற்கு கரை பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் கோத்தா பெலுட்.
சபா, மேற்கு கரை பிரிவில் உள்ள ஏழு மாவட்டங்களில் கோத்தா பெலுட் மாவட்டமும் ஒன்றாகும். சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து 77 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. கோத்தா பெலுட் மாவட்டம் 20 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
கோத்தா பெலுட் எனும் பெயர் பஜாவ் மொழியில் இருந்து வந்தது. "கோத்தா" என்றால் கோட்டை; "பெலுட்" என்றால் மலை என்று பொருள். எனவே, கோத்தா பெலுட் என்றால் "மலையில் உள்ள கோட்டை" என்று பொருள் படுகிறது.
கோத்தா பெலுட் நகரமும்; கோத்தா பெலுட் மாவட்டமும், சபா மாநிலத்தின் மிக அழகான நிலப் பகுதிகளில் ஒன்றாகும். கினபாலு மலையின் அழகியக் காட்சிகளைக் கோத்தா பெலுட் நகரத்தில் இருந்து பார்க்கலாம். கோத்தா பெலுட் நிலப் பகுதி, கினபாலு தேசியப் பூங்கா வரை பரந்து விரிந்து உள்ளது.[7] [8]
கோத்தா பெலுட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1969 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
கோத்தா பெலுட் தொகுதி 1966-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
1969-1971 | நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[10] | |||
3-ஆவது மக்களவை | P107 | 1971-1973 | முகமட் சாயிட் கெருவாக் (Mohammad Said Keruak) |
அசுனோ |
1973-1974 | பாரிசான் நேசனல் (அசுனோ) | |||
4-ஆவது மக்களவை | P117 | 1974-1978 | ||
5-ஆவது மக்களவை | 1978-1982 | |||
6-ஆவது மக்களவை | 1982-1986 | யகயா லம்போங் (Yahya Lampong) |
சுயேச்சை | |
7-ஆவது மக்களவை | P136 | 1986-1990 | பால் மாயிடோம் பான்சாய் (Paul Maidom Pansai) |
பாரிசான் நேசனல் (ஐக்கிய சபா கட்சி) |
8-ஆவது மக்களவை | 1990-1995 | காகாசான் ராக்யாட் (அசுனோ) | ||
9-ஆவது மக்களவை | P148 | 1995-1999 | சாலே சாயிட் கெருவாக் (Salleh Said Keruak) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
10-ஆவது மக்களவை | 1999-2004 | |||
11-ஆவது மக்களவை | P169 | 2004-2008 | ||
12-ஆவது மக்களவை | 2008-2013 | அப்துல் ரகுமான் டாலான் (Abdul Rahman Dahlan) | ||
13-ஆவது மக்களவை | 2013-2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | இசுனாரயிசா முனிரா (Isnaraissah Munirah Majilis) |
வாரிசான் | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
இசுனாரயிசா முனிரா (Isnaraissah Munirah) | சபா பாரம்பரிய கட்சி (Heritage) | 25,148 | 46.54 | 4.28 ▼ | |
அப்துல் ரகுமான் டாலான் (Abdul Rahman Dahlan) | பாரிசான் நேசனல் (BN) | 20,566 | 38.06 | 3.52 ▼ | |
மாடலி பின் பங்காலி (Madeli @ Modily bin Bangali) | பாக்காத்தான் அரப்பான் (PH) | 8,323 | 15.40 | 15.40 | |
மொத்தம் | 54,037 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 54,037 | 97.77 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 1,235 | 2.23 | |||
மொத்த வாக்குகள் | 55,272 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 79,885 | 67.64 | 14.48 ▼ | ||
Majority | 4,582 | 8.48 | 0.77 ▼ | ||
சபா பாரம்பரிய கட்சி கைப்பற்றியது | |||||
மூலம்: [11] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)