கோத்தா பெலுட் மாவட்டம் Kota Belud District | |
---|---|
![]() கோத்தா பெலுட் மாவட்ட மன்ற அலுவலகம். | |
![]() | |
ஆள்கூறுகள்: 6°21′00″N 116°26′00″E / 6.35000°N 116.43333°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
பிரிவு | மேற்கு கரை |
மாவட்டம் | கோத்தா பெலுட் மாவட்டம் |
தலைநகரம் | கோத்தா பெலுட் |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | முகமது நஜிப் முன்டோக் (Mohd Najib Muntok) |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,386 km2 (535 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 91,272 |
• அடர்த்தி | 66/km2 (170/sq mi) |
இணையதளம் | www |
கோத்தா பெலுட் மாவட்டம்; (மலாய்: Daerah Kota Belud; ஆங்கிலம்: Kota Belud District) என்பது மலேசியா, சபா மாநிலம், மேற்கு கரை பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். இந்தக் கோத்தா பெலுட் மாவட்டத்தின் தலைநகரம் கோத்தா பெலுட் நகரம் (Kota Belud Town) ஆகும்.
சபா, மேற்கு கரை பிரிவில் உள்ள ஏழு மாவட்டங்களில் கோத்தா பெலுட் மாவட்டமும் ஒன்றாகும். சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து 77 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.
சபா மாநிலத்தின் மேற்கு கரை பிரிவில் உள்ள மாவட்டங்கள்:
கோத்தா பெலுட் எனும் பெயர் பஜாவ் மொழியில் இருந்து வந்தது. "கோத்தா" என்றால் கோட்டை; "பெலுட்" என்றால் மலை என்று பொருள். எனவே, கோத்தா பெலுட் என்றால் "மலையில் உள்ள கோட்டை" என்று பொருள் படுகிறது.[1]
கோத்தா பெலுட் முன்னோர்களின் கதைகளின்படி, பழங்காலத்தில் கோத்தா பெலுட் மாவட்டத்தில் இருந்த இனங்களுக்கும்; கிராமங்களுக்கும் இடையே பகைகள் இருந்தன. அந்த வகையில் தங்களின் பாதுகாப்பை வலுப்படுத்த, அவர்கள் தஞ்சம் அடைவதற்கு பாதுகாப்பான ஓர் இடத்தை நாடினர்.
பஜாவு மக்கள் ஒரு மலையைத் தற்காப்பு நகரமாகத் தேர்ந்து எடுத்தார்கள். அந்த மலைக்குக் கோத்தா பெலுட் என்று பெயர் வைத்தார்கள். அவ்வாறுதான் கோத்தா எனும் பெயர் வந்தது.[1]
கடந்த 2010-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கோத்தா பெலுட் மாவட்டத்தின் மக்கள் தொகை சுமார் 91,272. முக்கியமாக பஜாவ், இல்லானுன் மக்கள் மற்றும் டூசுன் என மதிப்பிடப்பட்டுள்ளது. சபாவின் மற்ற மாவட்டங்களைப் போலவே, அருகிலுள்ள தெற்கு பிலிப்பீன்சு நாட்டில் இருந்தும்; முக்கியமாக சூலு தீவுக்கூட்டம் (Sulu Archipelago) மற்றும் மிண்டனாவோ (Mindanao) தீவில் இருந்தும்; கணிசமான எண்ணிக்கையில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் உள்ளனர். அவர்களில் பலர் மக்கள்தொகை புள்ளிவிவரத்தில் சேர்க்கப்படவில்லை.
கோத்தா பெலுட் மாவட்டம் 20 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.
கோத்தா பெலுட் நகரம், கோத்தா பெலுட் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து 77 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.[2]
சபாவின் வடக்கு முனையில் உள்ள கோத்தா கினபாலு மற்றும் கூடாட் நகரங்களை இணைக்கும் கூட்டாட்சி நெடுஞ்சாலையின் நடுப்பகுதியில் உள்ளது. அதே வேளையில், இந்தக் கோத்தா பெலுட் நகரம் கூடாட் பிரிவுக்குச் செல்லும் முக்கிய நகரமாகவும் விளங்குகிறது. இந்த நகரம் மேற்கு கடற்கரையில் பஜாவ் (Bajau) மக்கள் வாழும் மையப் பகுதிக்கான நுழைவாயிலாகவும் கருதப் படுகிறது.
கோத்தா பெலுட் நகரமும்; கோத்தா பெலுட் மாவட்டமும், சபா மாநிலத்தின் மிக அழகான நிலப் பகுதிகளில் ஒன்றாகும். கினபாலு மலையின் அழகியக் காட்சிகளைக் கோத்தா பெலுட் நகரத்தில் இருந்து பார்க்கலாம்.[3]
கோத்தா பெலுட் நிலப் பகுதி, கினபாலு தேசியப் பூங்கா வரை பரந்து விரிந்து உள்ளது. கோத்தா பெலுட் கடற்கரையோரப் பகுதிகள், பஜாவு மக்களின் வாழ்விடமாகக் கருதப் படுகிறது. கோத்தா பெலுட் உட்புறப் பகுதிகளில் டூசுன் மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.
கோத்தா பெலூட்டின் மக்கள் தொகை, பஜாவ் - சாமா (Bajau-Sama); டூசுன் (Dusun) மற்றும் இலானும் (Illanun) இனக் குழுகளிடையே இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. சீனர்கள் சிறுபான்மையினராக உள்ளனர்; முக்கியமாக ஹக்கா இனத்தைச் சேர்ந்த மக்கள்.[2]
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் கோத்தா பெலூட்டில் நடைபெறும் திறந்தவெளிச் சந்தைக்குப் பெயர் பெற்றது. தாமு (Tamu) என்று பெயர். ஆண்டுக்கு ஒருமுறை, மிகப் பெரிய அளவிலும் தாமு நடைபெறுகிறது.[3]