கோத்தா மருடு நகரம் | |
---|---|
Kota Marudu Town | |
சபா | |
ஆள்கூறுகள்: 6°29′23″N 116°44′10″E / 6.48972°N 116.73611°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சபா |
பிரிவு | கூடாட் பிரிவு |
மாவட்டம் | கோத்தா மருடு மாவட்டம் |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 69,528 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 89100 |
தொலைபேசி | +6-087 |
வாகனப் பதிவெண்கள் | SY |
கோத்தா மருடு (மலாய்: Pekan Kota Marudu; ஆங்கிலம்: Kota Marudu Town) என்பது மலேசியா, சபா மாநிலம், கூடாட் பிரிவு, கோத்தா மருடு மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். 2020-ஆம் ஆண்டில் அதன் மக்கள்தொகை 69,528.[1]
மாநிலத் தலைநகர் கோத்தா கினபாலுவில் இருந்து 130 கி.மீ. தொலைவில்; கிழக்கு போர்னியோவின் வடக்கு முனைக்கு அருகில் உள்ள கூடாட் கூட்டாட்சி நெடுஞ்சாலையில் அமைந்து உள்ளது.[2]
கோத்தா மருடுவில் உள்ள முக்கிய இடங்களில் சொரின்சிம் நீர்வீழ்ச்சி (Sorinsim Waterfall) குறிப்பிடத்தக்கது. கோத்தா மருடுவில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
பியாட் ஏரியில் (Buyut Lake) உள்ள சகாபோன் பூங்கா (Sagabon Park) எனும் விவசாய ஆராய்ச்சி நிலையமும் ஒரு முக்கியமான இடமாகும். தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சூரிய சக்தி நிலையத்தையும் கோத்தா மருடு கொண்டுள்ளது.
மாவட்டத்தின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கு, விவசாயப் பொருட்களின் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில், கோத்தா மருடு நகரம் ஆண்டுதோறும் மக்காச் சோளத் திருவிழாவைக் (Maize Festival) கொண்டாடுகிறது.
மேலும் பல்வேறு கண்காட்சிகள், போட்டிகள், பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் அழகுப் போட்டிகளும் இந்த நகரத்தில் நடைபெற்று வருகின்றன.
கோத்தா மருடு நகரம் எப்போது நிறுவப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் 1632-ஆம் ஆண்டில் ஜோகன்னஸ் குளோப்பன்பர்க் (Johannes Cloppenburgh) என்பவரும்; 1631-ஆம் ஆண்டில் பெஞ்சமின் ரைட் (Benjamin Wright) என்பவரும் வரைந்த போர்னியோ வரைப் படங்களில், கோத்தா மருடு எனும் பெயர் இடம் பெற்று உள்ளது.[3][4]
அவற்றில் "மருடோ" (Marudo) என்ற பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது. தவிர பழைய வரைப் படங்களில் "மல்லூடு" (Malloodoo) என்றும் குறிப்பிடப் படுகிறது.[5]