கோத்தா மலாக்கா மக்களவைத் தொகுதி

கோத்தா மலாக்கா (P138)
மலேசிய மக்களவைத் தொகுதி
மலாக்கா
Kota Melaka (P138)
Federal Constituency in Malacca
கோத்தா மலாக்கா மக்களவைத் தொகுதி
(P138 Kota Melaka)
மாவட்டம்மத்திய மலாக்கா மாவட்டம்
வாக்காளர்களின் எண்ணிக்கை164,140 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிகோத்தா மலாக்கா தொகுதி
முக்கிய நகரங்கள்கோத்தா லக்சுமணா, கெசிடாங், டூயோங், பண்டார் ஈலிர், தெலுக் மாஸ்
பரப்பளவு66 ச.கி.மீ[3]
முன்னாள் நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1974
கட்சி      பாக்காத்தான் அரப்பான்
மக்களவை உறுப்பினர்கூ போவே தியோங்
(Khoo Poay Tiong)
மக்கள் தொகை215,409[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1974
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

கோத்தா மலாக்கா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kota Melaka; ஆங்கிலம்: Kota Melaka Federal Constituency; சீனம்: 马六甲市区国会议席) என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தின் மத்திய மலாக்கா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P138) ஆகும்.[5]

கோத்தா மலாக்கா மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1974-ஆம் ஆண்டில் இருந்து கோத்தா மலாக்கா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

மத்திய மலாக்கா மாவட்டம்

[தொகு]

மத்திய மலாக்கா மாவட்டம் என்பது மலாக்கா மாநிலத்தில் மத்திய மலாக்கா மாவட்டம்; ஜாசின் மாவட்டம்; அலோர் காஜா மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்களில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு புதிய மாவட்டம் ஆகும். இருப்பினும் கோத்தா மலாக்கா மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டு விட்டது. அதன் பின்னர்தான் மத்திய மலாக்கா மாவட்டம் உருவாக்கம் பெற்றது.

மத்திய மலாக்கா மாவட்டத்தில் ஆங் துவா ஜெயா நகரம் என்பது புதிதாக உருவாக்கப்பட்ட நகரம். பொருளாதார, சமூக, உள்கட்டமைப்பு மற்றும் பொழுதுபோக்கு மேம்பாடுகளுடன், மலாக்கா மாநிலத்தின் நிர்வாக மையமாகவும்; அறிவார்ந்த மாநகரமாகவும், மலாக்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது. இந்த நகரம் நிலத்தால் சூழப்பட்ட ஒரே நகராட்சியாகும்.[7]

மலாக்கா மாநிலத்தைப் பொருத்த வரையில் ஆங் துவா ஜெயா புறநகப்பகுதி மிகவும் முக்கியமானது. ஏனெனில் மலாக்கா மாநில அரசின் நிர்வாக மையம் இந்த ஆங் துவா ஜெயா நகராட்சி நிர்வாகத்திற்குள் தான் அமைந்துள்ளது.

கோத்தா மலாக்கா மக்களவைத் தொகுதி

[தொகு]




2022-இல் கோத்தா மலாக்கா மக்களவைத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[8]

  சீனர் (54.2%)
  இதர இனத்தவர் (1.2%)
கோத்தா மலாக்கா மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1974-ஆம் ஆண்டில் கோத்தா மலாக்கா தொகுதி உருவாக்கப்பட்டது
4-ஆவது மக்களவை P098 1974–1978 லிம் கிட் சியாங்
(Lim Kit Siang)
ஜனநாயக செயல் கட்சி
5-ஆவது மக்களவை 1978–1982 சான் தெக் சான்
(Chan Teck Chan)
6-ஆவது மக்களவை 1982–1986 லிம் கிட் சியாங்
(Lim Kit Siang)
7-ஆவது மக்களவை P113 1986–1990 லிம் குவான் எங்
(Lim Guan Eng)
8-ஆவது மக்களவை 1990–1995 காகாசான் ராக்யாட்
(ஜனநாயக செயல் கட்சி)
9-ஆவது மக்களவை P123 1995–1999
1999 காலி
10-ஆவது மக்களவை 1999–2004 கெர்க் கிம் கோக்
(Kerk Kim Hock)
மாற்று முன்னணி
(ஜனநாயக செயல் கட்சி)
11-ஆவது மக்களவை P138 2004–2008 ஓங் நய் சி
(Wong Nai Chee)
பாரிசான் நேசனல்
(மலேசிய சீனர் சங்கம்)
12-ஆவது மக்களவை 2008–2013 சிம் தோங் கிம்
(Sim Tong Him)
பாக்காத்தான் ராக்யாட்
(ஜனநாயக செயல் கட்சி)
13-ஆவது மக்களவை 2013–2017
2017–2018 சுயேச்சை
14-ஆவது மக்களவை 2018–2022 கூ போவே தியோங்
(Khoo Poay Tiong)
பாக்காத்தான் அரப்பான்
(ஜனநாயக செயல் கட்சி)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

கோத்தா மலாக்கா தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
கூ போவே தியோங்
(Khoo Poay Tiong)
பாக்காத்தான் அரப்பான்73,99560.0712.62
சுகாய்மி போர்கான்
(Suhaime Borhan)
பெரிக்காத்தான் நேசனல்27,57522.3922.39 Increase
கோன் கி யாவோ
(Kon Qi Yao)
பாரிசான் நேசனல்20,68616.798.18
நோராசுலான் சா கசாலி
(Norazlanshah Hazali)
சுயேச்சை9250.750.75 Increase
மொத்தம்1,23,181100.00
செல்லுபடியான வாக்குகள்1,23,18198.69
செல்லாத/வெற்று வாக்குகள்1,6351.31
மொத்த வாக்குகள்1,24,816100.00
பதிவான வாக்குகள்1,64,14076.048.38
      பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது
மூலம்: [9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 20 ஜூலை 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  7. "Hang Tuah Jaya situated amidst State Malacca cover Pusat Pentadbiran area State Government and include 3 District namely part of Daerah Melaka Tengah, Alor Gajah and Jasin". பார்க்கப்பட்ட நாள் 7 February 2024.
  8. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  9. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF PAHANG" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]