கோனசு பிளவிசென்சு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | நியோகேசுட்ரோபோடா
|
குடும்பம்: | கோனிடே
|
பேரினம்: | கோனசு
|
இனம்: | கோ. பிளவிசென்சு
|
இருசொற் பெயரீடு | |
கோனசு பிளவிசென்சு சவர்பை 1, 1834 |
கோனசு பிளவிசென்சு (Conus flavescens) என்பது சுடர் கூம்பு என பொதுவாக அறியப்படும் கடல் நத்தைகளில் ஓர் வகையாகும். இது கோனிடே குடும்பத்தினைச் சார்ந்தது. வயிற்றுக்காலி வகையினைச் சார்ந்த இதன் உறவுகள் கூம்பு நத்தைகளாகும்.[1]
இதில் ஓர் துணைச் சிற்றினம் உள்ளது: கோனசு பிளவிசென்சு கரிப்பியசு கிளைஞ்ச் 1942 (வேறு பெயர்கள்: கோனசு கரிப்பியசு கிளைஞ்ச் 1942, கிராடிகோனசு பிளவிசென்சு கரிப்பியசு (கிளைஞ்ச் 1942) டக்கேரிகோனசு கரிப்பியசு (கிளைஞ்ச் 1942) டக்கேரிகோனசு பிளவிசென்சு கரிப்பியசு (கிளைஞ்ச் 1942)
கோனசு பேரினத்தின் பிற சிற்றினங்கள் போலவே, இந்த நத்தைகளும் கொன்று தின்னும் தன்மை உடையது. விசத்தன்மையுடைய இந்த நத்தைகள் மனிதர்களை "கொட்டும்" திறன் கொண்டவை, எனவே உயிருடன் கூடிய உயிரிகளைக் கவனமாகக் கையாள வேண்டும்.
கடல் நீரில் காணப்படும் இந்த இனம், கரீபியன் கடல் மற்றும் மெக்சிகோ வளைகுடாவில் அமெரிக்காவின் புளோரிடா, பெரிய அண்டிலிசு மற்றும் பகாமாசு பகுதிகளில் காணப்படும்.
இதனுடைய ஓட்டின் நீளம் நீளம் 25மிமீ பதிவுசெய்யப்பட்டுள்ளது.[2] மென்மையான ஓடு அடித்தளத்தை நோக்கி வரிப்பள்ளத்துடன் காணப்படும். மஞ்சள் நிறமுடையது. பெரிய ஒழுங்கற்ற வெள்ளை கறைகளால் மாறுபட்டது, பெரும்பாலும் தோள்பட்டை கோணத்திற்குக் கீழேயும், உடல் சுழல் நடுப்பகுதிக்குக் கீழேயும் அமைக்கப்பட்டுள்ளது, இதனால் இரண்டு குறுக்கீடு பட்டைகள் உருவாகின்றன. [3]
இந்த நத்தை 122 மீட்டர் வரை ஆழமுள்ள பகுதிகளில் காணப்படுகிறது.
பல வண்ணங்களில் காணப்படும் கோனசிஸ்.