கோபால தாசன் (Gopala Dasa) (1721–1769) 18ஆம் நூற்றாண்டின் கன்னட மொழி கவிஞரும், ஹரிதாச பக்தி இயக்கத்தின் சாதுவும் ஆவார்.இவர் மத்துவாச்சாரியின் துவைத தத்துவத்தை கீர்த்தனைகள் மூலம் தென்னிந்தியாவில் பரப்பியவர். இவர் மத்வ பிராமணக் குடும்பத்தில் தற்கால கர்நாடகா மாநிலத்தின் ராய்ச்சூர் மாவட்டத்தில் பிறந்தவர். வித்தியா தாசரின் சீடரான கோபால தாசன் இசை மற்றும் ஜோதிடத்தை கற்றார். பின்னர் பகவான் கிருஷ்ணர் குறித்து கீர்த்தனைகள் இயற்றிப் பாடினார்.[1]