பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
கோபால்ட் ஈரைதரைடு, கோபால்ட்டசு ஐதரைடு
| |
இனங்காட்டிகள் | |
ChemSpider | 464927 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 22450701 |
| |
பண்புகள் | |
CoH2 | |
வாய்ப்பாட்டு எடை | 60.94888 கி/மோல் |
தோற்றம் | அடர் சாம்பல் நிறப் படிகங்கள் |
அடர்த்தி | 0.533 g/cm3 |
வினைபுரியும் | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தீவிர வினை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கோபால்ட்(II) ஐதரைடு (Cobalt(II) hydride) என்பது CoH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அடர் சாம்பல் நிறப் படிகங்களாகக் காணப்படும் இச்சேர்மம் காற்றில் மெல்ல ஆக்சிசனேற்றம் அடைகிறது. தண்ணிருடன் வினைபுரிகிறது.[1][2]
உயர் அழுத்தங்களில் கோபால்ட்(II) ஐதரைடு இரண்டு வடிவங்களில் காணப்படுகிறது. 4 முதல் 45 கிகா பாசுக்கல் அழுத்தத்தில் முகமைய்ய கனசதுர வடிவம் கொண்டு CoH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படுகிறது. இவ்வடிவம் குறைந்த வெப்பநிலையில் வளிமண்டல அழுத்தத்தில் சிதைவடைந்து சிற்றுறுதி நிலை சேர்மத்தை உருவாக்குகிறது. 45 கிகா பாசுக்கலுக்கு மேலான அழுத்தத்தில் கோபால்ட்(II) ஐதரைடு வடிவம் CoH2 என்ற வாய்ப்பாட்டுடன் இதே முகமைய்ய கனசதுர வடிவில் படிகமாகிறது.[3]
பீனைல்மக்னீசியம் புரோமைடுடன் கோபால்ட்(II) குளோரைடை ஐதரசன் வாயுச் சூழலில் சேர்த்து வினைபுரியச் செய்தால் கோபால்ட்(II) ஐதரைடைத் தயாரிக்கலாம்.