கோம்பாக் (P098) மலேசிய மக்களவைத் தொகுதி சிலாங்கூர் | |
---|---|
Gombak (P098) Federal Constituency in Selangor | |
மாவட்டம் | கோலா சிலாங்கூர் மாவட்டம் சிலாங்கூர் |
வாக்காளர் தொகுதி | கோம்பாக் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோம்பாக்; வங்சா மாஜு; செதாபாக் |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1994 |
கட்சி | பாக்காத்தான் |
இதற்கு முன்னர் நடப்பில் இருந்த தொகுதி | (2022) |
மக்களவை உறுப்பினர் | அமிருதீன் சாரி (Amirudin Shari) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 209,237 (2023)[1] |
தொகுதி பரப்பளவு | 265 ச.கி.மீ[2] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022[3] |
கோம்பாக் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Gombak; ஆங்கிலம்: Gombak Federal Constituency; சீனம்: 鹅唛联邦选区) என்பது மலேசியா, சிலாங்கூர், கோம்பாக் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P098) ஆகும்.
கோம்பாக் மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1994-ஆம் ஆண்டில் முதலாவது மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதன் பின்னர், இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
அத்துடன் 1994-ஆம் ஆண்டில் இருந்து கோம்பாக் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
கோம்பாக் மாவட்டம் கிள்ளான் பள்ளத்தாக்கில் அமைந்து உள்ளது. கோலாலம்பூர் பெருநகரம்; மற்றும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள வேறு சில மாவட்டங்களும் இந்தக் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ளன.
கோம்பாக் மாவட்டத்தில் அமைந்துள்ள பிற பகுதிகள்:
1974 பிப்ரவரி 1-ஆம் தேதி கோலாலம்பூர் ஒரு கூட்டாட்சி பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. அதே நாளில் தான் இந்தக் கோம்பாக் மாவட்டமும் உருவாக்கப்பட்டது. 1997-ஆம் ஆண்டு வரை, ரவாங் நகரம் கோம்பாக் மாவட்டத்தின் தலைநகரமாக இருந்தது. அதன் பின்னர் பண்டார் பாரு செலாயாங், இந்த மாவட்டத்தின் தலைநகரமாக மாற்றப்பட்டது.
கோம்பாக் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1994 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
(செலாயாங் மக்களவைத் தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது | ||||
9-ஆவது | P091 | 1995–1999 | சலேகா இசுமாயில் (Zaleha Ismail) |
பாரிசான் (அம்னோ) |
10-ஆவது | 1999–2004 | |||
11-ஆவது | P099 | 2004–2008 | ரகுமான் இசுமாயில் (Rahman Ismail) | |
12-ஆவது | 2008–2013 | அசுமின் அலி (Azmin Ali) |
பாக்காத்தான் ராக்யாட் (பி.கே.ஆர்) | |
13-ஆவது | 2013–2018 | |||
14-ஆவது | 2018–2020[4] | பாக்காத்தான் அரப்பான் (பி.கே.ஆர்) | ||
2020–2022 | பெரிக்காத்தான் (பெர்சத்து) | |||
15-ஆவது | 2022–தற்போது | அமிருடின் சாரி (Amirudin Shari) |
பாக்காத்தான் அரப்பான் (பி.கே.ஆர்) |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
206,744 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
167,047 | 80.80% | ▼ 4.63 |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
165,426 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
499 | ||
செல்லாத வாக்குகள் (Rejected Ballots) |
1,122 | ||
பெரும்பான்மை (Majority) |
12,729 | 7.70% | ▼ 33.23 |
வெற்றி பெற்ற கட்சி: | பாக்காத்தான் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[5] |
சின்னம் | வேட்பாளர் | கட்சி | வாக்குப்பதிவு | % | ∆% |
---|---|---|---|---|---|
அமிருடின் சாரி (Amirudin Shari) |
பாக்காத்தான் | 72,267 | 43.69% | -21.41 ▼ | |
அசுமின் அலி (Azmin Ali) |
பெரிக்காத்தான் | 59,538 | 35.99% | +35.99 | |
மெகாட் சுல்கர்னைன் ஒமர்டின் (Megat Zulkarnain Omardin) |
பாரிசான் | 30,723 | 18.57% | -3.60 ▼ | |
அசீஸ் சமாலுதீன் முகமது தாகிர் (Aziz Jamaludin Mohd Tahir) |
உள்நாட்டு போராளிகள் கட்சி | 2,223 | 1.34% | +1.34 | |
சுல்கிப்லி அகமத் (Zulkifli Ahmad) |
சுயேச்சை | 675 | 0.41% | +0.41 |