கோயம்புத்தூர் நாராயண ராவ் இராகவேந்திரன் Coimbatore Narayana Rao Raghavendran | |
---|---|
பிறப்பு | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | தொழில்நுட்ப வல்லுநர் |
பெற்றோர் | சி. ஆர். நாராயண ராவ் |
விருதுகள் | பத்மசிறீ |
கோயம்புத்தூர் நாராயண ராவ் இராகவேந்திரன் என்பவர், தமிழ்நாட்டின், சென்னையினைச் சேர்ந்த இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர் ஆவார். இவர் சென்னையில் உள்ள சி.ஆர்.நாராயண ராவ் கட்டிடக் கலைஞர்கள் மற்றும் பொறியாளர்கள் நிறுவன பங்காளியும் ஆவார்.[1][2] இவர் கரக்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் பட்டம் பெற்றார்[சான்று தேவை] மற்றும் அமெரிக்காவில் உள்ள கோர்னெல் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயின்றார்.[சான்று தேவை] பாஸ்டனில் குறுகிய காலம் பணிபுரிந்த இராகவேந்திரன், 1945இல் தனது தந்தை சி.ஆர்.நாராயண ராவால் நிறுவப்பட்ட குடும்பத் தொழிலைக் கவனித்துக்கொள்ள இந்தியா திரும்பினார்.[3][4] 2011ஆம் ஆண்டில், நான்காவது மிக உயரிய குடைமை விருதான பதமசிறீயினை இந்திய அரசு, வழங்கி கவுரவித்தது.[5]