கோயம்புத்தூர் புறவழிச்சாலை | |
---|---|
Coimbatore bypass | |
வழித்தட தகவல்கள் | |
பராமரிப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், கோயம்புத்தூர் மாநகராட்சி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை எல் & டி (கட்டு இயக்கு மாற்றுத் திட்டம்) | |
நீளம்: | 28 km (17 mi) |
பயன்பாட்டு காலம்: | 2000[2] – |
முக்கிய சந்திப்புகள் | |
தொடக்கம்: | நீலாம்பூர் |
முடிவு: | மதுக்கரை, |
அமைவிடம் | |
முக்கிய நகரங்கள்: | ஈச்சனாரி |
நெடுஞ்சாலை அமைப்பு | |
கோயமுத்தூர் புறவழிச்சாலைகள் என்பன கோயம்புத்தூர் நகரின் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பல்வேறு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் பல்வேறு புறவழிச்சாலைகள் ஆகும். கிழக்கில் இருந்து மேற்காக நீலாம்பூரிலிருந்து மதுக்கரை வரையும் தெற்கிலிருந்து வடக்காக பொள்ளாச்சியிலிருந்து அன்னூர் வரையும் வடமேற்கில் உள்ள மேட்டுப்பாளையத்திலிருந்து சூலூர் வரையும் புறவழிச்சாலைகள் திட்டமிடப்பட்டுள்ளன. இவற்றில் நீலாம்பூரிலிருந்து மதுக்கரை வரை எல் & டி நிறுவனத்தால் கட்டுஇயக்குமாற்றுத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட புறவழிச்சாலை மட்டுமே, பெப்ரவரி, 2012 நிலவரப்படி, இயக்கத்தில் உள்ளது.இத்திட்டத்தின் கீழ் ஆத்துப்பாலத்தின் அகலம் கூட்டப்பட்டுள்ளது.
மேலும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆறு இரயில்பாதை மேம்பாலங்களை தென்னக இரயில்வேயின் ஒத்துழைப்புடன் மாநகரில் கட்டிக்கொண்டிருக்கிறது.[3]
தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத்துறை 2008ல் அவினாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை ஆகிய சாலைகளின் நெரிசலை குறைக்க பீளமேடு சாலை, காளப்பட்டி சாலை, சரவணம்பட்டி சாலை, குரும்பம்பாளையம் சாலை ஆகியவற்றின் வழியாக செல்லக்கூடிய சுற்றுச்சாலை அமைக்கும் திட்ட முன்வரைவை கொண்டுவந்தது. இந்த 12 கிமீ பாதை பீளமேட்டில் உள்ள சித்ராவிலிருந்து (தென்னிந்திய ஜவுளி மற்றும் ஆராய்ச்சிக் கழகம்) காளப்பட்டி சாலை வழியாக சத்தியமங்கலம் சாலையை சரவணம்பட்டியில் இணைக்கிறது. மேலும் இது மேட்டுப்பாளையம் சாலையை குரும்பம்பாளையத்தில் இணைக்கிறது.[4] இந்தத் திட்டத்திற்கு விவசாயிகளிடமிருந்து பலத்த எதிர்ப்பு இருப்பதால் திட்ட மேசையிலேயே தங்கி உள்ளது.
கோவையின் நகரினுள்ளே செல்லும் பொள்ளாச்சியையும் பண்ணாரியையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 584 (முந்தைய தே.நெ.209)யை தரமுயர்த்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இயலுமை ஆய்வுகள் நடத்த ஒப்பந்தப்புள்ளிகளை வரவேற்றது.[5][6] 2009இல் இந்த ஆணையம் ஏற்கெனவே உள்ள நெடுஞ்சாலையை விரிவுபடுத்த நிதி ஒதுக்கியது. இதில் கணபதியில் தொடர்வண்டிப்பாதை மேம்பாலமும் அடங்கும். பின்னர் இந்தத் திட்டங்களை பொதுத்துறை-தனியார்துறை கூட்டுறவில் கட்டமைக்கத் திட்டமிட்டதால் இந்த நிதியை திரும்ப்ப் பெற்றுக் கொண்டது.[7]
தேசிய ஆணையம் நிதியை திரும்பப்பெற்றநிலையில் மாநில அரசின் நெடுஞ்சாலைத்துறை இந்த தரமுயர்த்தல் பணிகளை மேற்கொண்டுள்ளது. 2010இல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போது, காந்திபுரத்தில் ₹ 148 கோடி செலவில் மூன்றடுக்கு மேம்பாலம் ஒன்று இரண்டாண்டுகளில் கட்டப்படும் என்று அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி அறிவித்தார். மத்தியப் பேருந்து நிலையத்தில் துவங்கி சத்தியமங்கலம் சாலையில் மாநகராட்சி கட்டிய ஓம்னி பேருந்து நிலையம் வரை அமைந்திருக்கும். இந்தத் திட்டத்தில் நூறடிச் சாலை சந்திப்பிலிருந்து நவஇந்தியா சந்திப்பு வரை நான்குவழி சுரங்கப்பாதையும் நகரப் பேருந்து நிலையம், மாநில விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து நிலையம், மத்தியப் பேருந்து நிலையம், சத்தியமங்கலம் சாலையில் திட்டமிடப்பட்டுள்ள பேருந்து நிலையங்களை இணைக்கும் மேலான நான்குவழிப்பாதையும் இரு சந்திப்புக்களையும் இணைக்கும் மேம்பாலமும் அடங்கும்.[8] இதன் திட்டச்செலவை ₹100 கோடியாகக் குறைத்து சனவரி 2011இல் மேம்பாலப் பணி துவங்குவதாக இருந்தது.[9] ஆனால் சத்தியமங்கலம் சாலையிலும் டாக்டர் நஞ்சப்பா சாலையிலும் உள்ள நான்கு கோவில்கள் இடிக்கப்பட விருந்ததை எதிர்த்து இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர்.[10]
2011இல் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா பாலக்காடு சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உக்கடம் மற்றும் ஆத்துப்பாலம் மேலாக புதிய மேம்பாலங்களை கட்டவிருப்பதாக அறிவித்தார்.[11]
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேட்டுப்பாளையத்திலிருந்து சூலூர் வரை தேசிய நெடுஞ்சாலை 181 (முன்பு தே.நெ.67)யை ஒட்டி ஓர் புறவழிச்சாலையை கட்டமைக்க ஆய்வு மேற்கொண்டுள்ளது. ₹ 601 கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ள இந்தச் சாலையின் நீளம் 53.95 கிலோமீட்டர்கள் (33.52 mi) ஆகும்.[12] இந்த திட்டத்திற்கான பாதை செழிப்பான வயல்வெளிகள் மூலமாக செல்வதாக எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மாற்றுவழியில் திட்டமிட கோரினர். தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எம்.ஆர்.சிவசாமி திட்டமிடப்படும் வழி நீலாம்பூரிலிருந்தே துவங்கி வெள்ளையணைப்பட்டி, கள்ளிப்பாளையம், குன்னத்தூர், காட்டம்பட்டி, குப்பேபாளையம், சிக்காரம்பாளையம், ஓடன்துறை வழியே மேட்டுப்பாளையம் செல்ல மாற்றுப் பாதையை பரிந்துள்ளார்.[13][14]
2010ஆம் ஆண்டு மாநில நிதி அறிக்கையில் கோவையின் மேற்குப் பகுதிகளின் வழியே ஓர் மேற்கு சுற்றுச்சாலையை ₹ 284 கோடி திட்டச்செலவில் 26கி.மீ தொலைவிற்கு அமைக்க அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்டுள்ள சாலை கோவைப்புதூரில் பாலக்காடு சாலையிருந்து பேரூர் சாலை, மருதமலைச் சாலை, தடாகம் சாலை வழியாக மேட்டுப்பாளையம் சாலையை இணைக்கும்.[15]
2011இல் தமிழக அரசு குனியமுத்தூர் முதல் துடியலூர் வரை 26-கிலோமீட்டர் (16 mi) நீளமுள்ள மேற்கு புறவழிச்சாலை அமைக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்தச் சாலை பாலக்காட்டிலிருந்து மதுக்கரை வரும் போக்குவரத்து மருதமலை, தடாகம், துடியலூர் மற்றும் ஆனைகட்டி செல்ல ஏதுவாயிருக்கும்.[16] திட்டமிடப்பட்டுள்ள சாலை 45 மீட்டர்கள் (148 அடி) அகலத்தில் இரு ஓரங்களும் பாவப்பட்டு கட்டமைக்கப்படும்; இதன் திட்டச்செலவு ₹ 130 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.[17]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)