கோயா மொழி

கோயா
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்ஆந்திரப் பிரதேசம், சட்டிஸ்கர், மஹாராஷ்டிரம்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
330,000 (1997)  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3kff

கோயா மொழி கூய்-குவி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 330,000 மக்களால் பேசப்படுகிறது. இது கோய், கோய் கோண்டி, காவோர், கோவா, கோய்த்தார், கோயாட்டோ, காயா, கோயி, ராஜ் கோயா ஆகிய பெயர்களாலும் குறிப்பிடப்படுவதுண்டு.

மலக்கனகிரி கோயா, போடியா கோயா, ஜகநாதபுரம் கோயா, தோர்லி, என்பன இதன் கிளை மொழிகளாகும்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]