கோரக்கநாதர் மடம் | |
---|---|
கோரக்கநாதர் கோயில் நுழைவாயில் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம்: | கோரக்பூர் |
கோயில் தகவல்கள் | |
இணையதளம்: | gorakhnathmandir.in |
கோரக்கநாதர் மடம் (Gorakhnath Mutt), சாய்ந்த எழுத்துக்கள இந்து சமயத்தில் நாத சைவம் பிரிவை நிறுவிய மச்சேயந்திரநாதர் கோரக்கநாதர் மடத்தை, கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோரக்பூரில் நிறுவினார். இம்மடத்தின் பூசகர்களாக பிராமணர் அல்லாதோர் உள்ளனர்.[1] 18 சித்தர்களில் ஒருவரான கோரக்கருக்கு, 12-ஆம் நூற்றாண்டில் கோரக்கர் மடம் மற்றும் கோயில் நிறுவப்பட்டது. இம்மடத்தில் சித்தரான கோரக்கநாரின் சமாதி உள்ளது. இம்மடம் கிழக்கு உத்தரப் பிரதேசம் மாநிலத்தின், தராய் பகுதியில் உள்ள கோரக்பூர் எனும் நகரத்தில் உள்ளது. துறவியான யோகி ஆதித்தியநாத் தற்போது இம்மடத்தின் தலைவராக 14 செப்டம்பர் 2014-இல் பொறுப்பேற்றார்.[2] கோரக்கநாதர் மடம் சார்பில், நேபாள நாட்டின் கோர்க்கா மாவட்டத்தில் உள்ள கோரக்கநாதர் மடத்தில் கோரக்கநாதருக்கு ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது.
இம்மடத்தின் தலைவராக இருந்த மகந்த் திக்விஜய் நாதர் 1921 முதல் இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்றார். பின்னர் 1937 முதல் 1950 வரை இந்து மகாசபையில் இணைந்து பணியாற்றினார்.
1949-இல் ராம ஜென்ம பூமியில் இராமர்–சீதை திருவுருவச் சிலைகளை நிறுவினார். திக்விஜய் நாதருக்குப் பின்னர் மடத்தின் தலைவராக பொறுப்பேற்ற மகந்த் அவைத்தியநாதர், 1962, 1967, 1969, 1974 மற்றும் 1977 ஆண்டுகளில் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்ற உறுப்பினராகவும், 1970 மற்றும் 1989 ஆண்டுகளில் கோரக்பூர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து 1991 மற்றும் 1996 ஆண்டுகளில் கோரக்பூர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
பின்னர் கோரக்கபூர் மடத்தின் தலைவராக பொறுப்பேற்ற யோகி ஆதித்தியநாத், உத்தரப் பிரதேச முதல்வராக தேர்ந்தெடுக்கப்படும் வரை, 1998 முதல் கோரக்பூர் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். யோகி ஆதித்தியநாத், 2002 இந்து யுவ வாகினி எனும் இளைஞர் படையை நிறுவி,[4] யோகி ஆதித்தியநாத் உத்தரப் பிரதேசத்தில் இந்துத்துவா கொள்கைகளைப் பரவச் செய்தார்.[5]