கோராபாக்ரசு | |
---|---|
கோராபாக்ரசு பிராக்கிசோமா | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | கோராபாக்ரசு |
மாதிரி இனம் | |
சூடோபகாரசு பிராக்கிசோமா குந்தர், 1864 |
கோராபாக்ரசு (Horabagrus) என்ற கெளிறு மீன் கோராபாகிரிடேகுடும்பத்தில் உள்ள பேரினமாகும். இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் கர்நாடக, கேரளப் பகுதிகளில் பாயும் ஆறுகளில் மட்டுமே காணக்கூடியது.[1] கோ. பிராக்கிசோமா முக்கியமான உணவு மீனாகும், இந்தப் பேரினத்தின் சிற்றினங்களைள் நீர்வாழ் மீன்காட்சி வர்த்தகத்தில் காணலாம்.
கோராபாக்ரசு பேரினம் பகாரிடே குடும்பத்தின்கீழ் வகைப்படுத்தப்பட்ட போதிலும் இதில் கருத்து வேறுபாடுகளும் இருக்கின்றன. இந்திய விலங்கியல் நிபுணர் சுந்தர் லால் கோராவின் பெயரிலேயே இந்தப் பேரினத்தின் பெயர் உள்ளது. பக்ரிடேயின் கீழ் பட்டியலிடப்பட்டிருந்தாலும், அனைத்து பூனை மீன் சிற்றினத்தில் வகைப்பாட்டில் கோரபக்ரசு பகாரிடே துணைக் குடும்பங்களின் கீழ் பட்டியலிடப்படவில்லை.[2] நெல்சனின் (2006), கூற்றுப்படி இந்த வகை தற்காலிகமாக சில்பெய்டே குடும்பத்தில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு சில நேரங்களில் தனிக்துணைக் குடும்பமாக அங்கீகரிக்கப்படுகிறது. டி பின்னாவினால் (1998), இந்த பேரினமானது, பங்காசிடேவின் சகோதர இனமாக வகைப்படுத்தப்பட்டது. இது தனிக் குடும்பமாக[3] கோராபக்ரிடே என வகைப்படுத்தப்பட்டது.[4] 2007ல் ஆய்வறிக்கையின் படி, இது எந்த ஓரு பூனை மீன் குடும்பத்தின் கீழும் கோராபக்ரசு வகைப்படுத்தப்படவில்லை.[5] 2016ல், வாங் மற்றும் பலர் கோராபக்ரிடே குடும்பத்தில் இந்த இனத்தை வைத்தார்.[1]
இந்த இனத்தில் தற்போது 2 அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:[6]
2013ல் மூன்றாவது இனமாக, கோராபக்ரசு மெலனோசோமா விவரிக்கப்பட்டது.[7] ஆனால் மீனியலாளர்கள் கோ. பிராக்கிசோமாவிலிருந்து பிரிக்கமுடியாததாகக் கருதினர்.[8]
கோ பிராக்கிசோமா என்பது மீன் காட்சி வணிகத்தில் பொதுவான மீனாகும். கோ. நிக்ரிகொல்லாரிசு மிகவும் அரிதாகவே காணப்படுகிறது.[9] இந்த இரண்டு இனங்களின் பராமரிப்பு ஒரே மாதிரியானவை. இந்த மீன்கள் நீர் நிலைகளின் தன்மைக்கேற்ப மாறிக்கொள்பவை. மேலும் உணவளிக்க எளிதானவை. இருப்பினும், இந்த மீன்களுக்கு மறைவிடங்களாகத் தாவரங்கள் அல்லது அலங்காரங்கள் தேவைப்படுகின்றன. இந்த மீன்கள் பகலில் ஒப்பீட்டளவில் மறைந்தே இருக்கும்.[10]