கோரிபர்த்தி நரசிம்ம ராசு யாதவ் | |
---|---|
பிறப்பு | குதுரூ, கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
பணி | விவசாயி |
விருதுகள் | பத்மஸ்ரீ கிரிஷ்கா ரத்னா கிரிஷி ரத்னா கிரிஷி சாம்ராட் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் ஜெகசீவன்ராம் கிசான் புரஸ்கார் |
கோரிபர்த்தி நரசிம்ம ராசு யாதவ் (Goriparthi Narasimha Raju Yadav) இந்திய விவசாயி ஆவார். விவசாயத்தில் இவரது சாதனைக்காகப் பெயர் பெற்றவர்.[1] தென்னிந்திய மாநிலமான ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குதுரு கிராமத்தினைச் சார்ந்த இவர், ஹெக்டேர் ஒன்றுக்கு 7.5 முதல் 8.3 டன் பூசா பாஸ்மதி 1 அரிசியினையும், ஒரு ஹெக்டேருக்கு 3 டன் உளுந்தினையும், ஒரு ஹெக்டேருக்கு 4 முதல் 5 டன் நிலக்கடலையினையும் விளைவித்து சாதனைப் படைத்துள்ளார்.[2] 10,000க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட கொள்ளினையும் மா மரம் ஒன்றில் ஒரே பருவத்தில் 22,000 மாம்பழங்களையும் விளைவித்ததாகவும் அறியப்படுகிறார். இவர் இந்திய நெல் மேம்பாட்டுக் குழுமம் (ஐ.ஆர்.டி.சி) மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் (ஐ.சி.ஏ.ஆர்) ஆகியவற்றின் நிபுணர் குழுவில் உறுப்பினராகச் சேர்ந்துள்ளார். கிருஷ்க ரத்னா, கிருஷி ரத்னா, கிருஷி சாம்ராட் மற்றும் ஜெகசீவன்ராம் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் கிசான் புராஸ்கர் (1999) விருதுகளைப் பெற்றுள்ளார்.[3] இந்திய அரசு இவருக்கு 2009 ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மஸ்ரீயினை இவருக்கு வழங்கியது. [4]