கோர்வா | |
---|---|
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி மாவட்டத்தில் கோர்வா நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 26°13′N 81°49′E / 26.217°N 81.817°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | அமேதி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 6,524 |
மொழி | |
• அலுவல் மொழி | இந்தி மொழி[1] |
• கூடுதல் மொழி | உருது[1] |
• வட்டார மொழி | அவதி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | UP 36 |
கோர்வா (Korwa), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அமேதி மாவட்டத்தில் உள்ள கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இங்குள்ள இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் நிறுவனம் மிக்-27 மற்றும் ஜாகுவார் போர் விமானங்களுக்கு மின்னணுக் கருவிகள் தயாரிக்ககிறது. மேலும் இங்குள்ள இராணுவப் போர்ப் படைக்கலன்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஏகே-203 ரக தாக்குதல் துப்பாக்கிக்கள் தயாரிக்கப்படுகிறது.[2]
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 1,612 வீடுகள் கொண்ட கோர்வா நகரத்தின் மக்கள் தொகை 6,524 ஆகும். அதில் ஆண்கள் 3,430 மற்றும் பெண்கள் 3,094 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 902 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 8% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 92.4% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,043 மற்றும் 1 ஆகவுள்ளனர்.இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 94.94%, இசுலாமியர் 3.69%, சமணர்கள் 0.18%, சீக்கியர்கள் 0.26%, கிறித்தவர்கள் 0.41% மற்றும் பிறர் 0.50% ஆகவுள்ளனர்.[3]