கோலா கிராய் (P031) மலேசிய மக்களவைத் தொகுதி கிளாந்தான் | |
---|---|
Kuala Krai (P031) Federal Constituency in Kelantan | |
கோலா கிராய் மக்களவைத் தொகுதி (P031 Kuala Krai) | |
மாவட்டம் | கோலா கிராய் மாவட்டம் கிளாந்தான் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 92,494 (2023)[1][2] |
வாக்காளர் தொகுதி | கோலா கிராய் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோலா கிராய் மாவட்டம், கோலா கிராய், பத்து மெங்கேபாங், பாசிர் மாஸ் |
பரப்பளவு | 2,288 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | அப்துல் லத்தீப் அப்துல் ரகுமான் (Abdul Latiff Abdul Rahman) |
மக்கள் தொகை | 105,007 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1995 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
கோலா கிராய் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kuala Krai; ஆங்கிலம்: Kuala Krai Federal Constituency; சீனம்: 瓜拉吉赖国会议席) என்பது மலேசியா, கிளாந்தான், கோலா கிராய் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P031) ஆகும்.[8]
கோலா கிராய் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து கோலா கிராய் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9]
கோலா கிராய் மாவட்டம், கிளாந்தான் மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு மாவட்டம் ஆகும். 1940-ஆம் ஆண்டுகளில் பிரித்தானியர்களின் பாதுகாப்பில் இருந்த போது கோலா லெபிர் (Kuala Lebir) என்று அழைக்கப்பட்டது.
இந்த மாவட்டம் கடல் மட்டத்தில் இருந்து 53 மீட்டர் (177 அடி) உயரத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தின் தலைநகரம் கோலா கிராய் [10]
முற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட கோலா கிராய் மாவட்டம்; கிளந்தான் மாநிலத்தின் மையத்தில் உள்ளது. மலைப்பாங்கான இந்த மாவட்டம் 20-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு, அதன் முழுப் பகுதியும் வெப்பமண்டல மழைக்காடாக இருந்தது. இப்பகுதியில் இரண்டு பெரிய ஆறுகள் உள்ளன. லெபிர் ஆறு; மற்றும் கலாஸ் ஆறு.
இந்த ஆறுகளும் ஒன்றிணைந்து கிளாந்தான் ஆறு (Kelantan River) எனும் ஒரு பெரிய ஆற்றை உருவாக்குகின்றன. பின்னர் இந்த கிளாந்தான் ஆறு 70 கி.மீ. வடக்கு நோக்கிப் பாய்ந்து; மாநிலத்தின் தலைநகரமான கோத்தா பாருவிற்கு அருகில் தென்சீனக் கடலில் சேர்கிறது.
2014-ஆம் ஆண்டு பா குனிங் (Bah Kuning) எனப்படும் கிளாந்தான் பெரும் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கோலா கிராய் மாவட்டமும் ஒன்றாகும். இதன் விளைவாக சொத்து இழப்புகள் அதிகம் ஏற்பட்டது; அத்துடன் மலேசிய மத்திய அரசு அவசரகால நிலையையும் அறிவித்தது.
கோலா கிராய் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1974-ஆம் ஆண்டில் கோலா கிராய் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
4-ஆவது மக்களவை | P026 | 1974–1978 | முகமது சகாரி அவாங் (Mohd. Zahari Awang) |
பாரிசான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | நிக் உசைன் வான் அப்துல் ரகுமான் (Nik Hussein Wan Abdul Rahman) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | |
6-ஆவது மக்களவை | 1982–1986 | |||
7-ஆவது மக்களவை | P028 | 1986–1990 | முகமது ஈசா (Mohamed Isa) | |
8-ஆவது மக்களவை | 1990–1995 | இப்ராகிம் மகமூத் (Ibrahim Mahmood) |
மலேசிய இசுலாமிய கட்சி | |
9-ஆவது மக்களவை | P031 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | முகமது நசீர் சே தாவுத் (Mohamed Nasir Che Daud) |
மாற்று முன்னணி (மலேசிய இசுலாமிய கட்சி) | |
11-ஆவது மக்களவை | 2004–2008 | முகமது ரசாலி சே மாமத் (Mohamed Razali Che Mamat) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | |
12-ஆவது மக்களவை | 2008–2013 | முகமது த்தா ரம்லி (Mohd Hatta Md. Ramli) |
பாக்காத்தான் ராக்யாட் (மலேசிய இசுலாமிய கட்சி) | |
13-ஆவது மக்களவை | 2013–2015 | |||
2015–2018 | அமாணா | |||
14-ஆவது மக்களவை | 2018–2020 | அப்துல் லத்தீப் அப்துல் ரகுமான் (Abdul Latiff Abdul Rahman) |
மலேசிய இசுலாமிய கட்சி | |
2020–2022 | பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ∆% | |
---|---|---|---|---|---|
மலேசிய இசுலாமிய கட்சி | அப்துல் லத்தீப் அப்துல் ரகுமான் (Abdul Latiff Abdul Rahman) |
42,740 | 66.08% | + 13.52 % | |
பாரிசான் நேசனல் | முகமது சுல்கேப்லி உமர் (Mohd Zulkepli Omar) |
17,552 | 27.14% | - 10.89 % ▼ | |
பாக்காத்தான் அரப்பான் | முகமது இசாமுதீன் கசாலி (Mohamad Hisyamuddin Ghazali) |
4,148 | 6.41% | - 3.00 % ▼ | |
தாயக இயக்கம் | நோராசிகின் சே உமார் (Norashikin Che Umar) |
241 | 0.37% | + 0.37% | |
செல்லுபடி வாக்குகள் (Valid) | 64,681 | 100% | |||
செல்லாத வாக்குகள் (Rejected) | 796 | ||||
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) | 207 | ||||
வாக்களித்தவர்கள் (Turnout) | 65,684 | 70.05% | - 9.95% ▼ | ||
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) | 92,335 | ||||
பெரும்பான்மை (Majority) | 25,188 | 38.94% | + 24.41% | ||
மலேசிய இசுலாமிய கட்சி | வெற்றி பெற்ற கட்சி (Hold) | ||||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[11] |