கோலா குபு பாரு | |
---|---|
Kuala Kubu Bharu | |
ஆள்கூறுகள்: 3°34′N 101°39′E / 3.567°N 101.650°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சிலாங்கூர் |
மாவட்டம் | உலு சிலாங்கூர் மாவட்டம் |
முக்கிம் | அம்பாங் பெச்சா |
உருவாக்கம் | 1780 |
நிறுவப்பட்டது | 1925 |
அரசு | |
• நிர்வாகம் | உலு சிலாங்கூர் நகராட்சி Hulu Selangor Municipal Council (MPHS) |
• சுல்தான் | சுல்தான் இப்ராகிம் சா |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,756.301 km2 (678.112 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,94,387 |
• அடர்த்தி | 111/km2 (290/sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 44xxx |
மலேசியத் தொலைபேசி எண் | +6-03-60 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | B, W |
இணையதளம் | [1] |
கோலா குபு பாரு (மலாய்: Kuala Kubu Bharu; ஆங்கிலம்: Kuala Kubu Bharu; சீனம்: 新古毛) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு சிலாங்கூர் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். கோலாலம்பூர் மாநகருக்கு வடக்கே 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இந்த நகருக்கு கே.கே.பி. (KKB) எனும் அடைமொழி சுருக்கப் பெயரும் உள்ளது. சிலாங்கூரில் தூங்கும் நகரம் என்று சொல்லப்படுவதும் உண்டு.[2]
1925-ஆம் ஆண்டில் மலாயா பிரித்தானியா கூட்டாட்சி அரசாங்கத்தால் (British Federated Malay States) திட்டமிட்டு உருவாக்கப்பட்ட முதல் மலேசிய நகரம் எனும் பெருமை இந்த நகரத்தைச் சார்கிறது. நகரத் திட்டமிடல் வல்லுநர் சார்லஸ் குரோம்ப்டன் ரீட் (Charles Crompton Reade) என்பவரால் திட்டமிடப்பட்டு இந்தக் கோலா குபு பாரு நகரம் உருவாக்கப்பட்டது.[3]
கோலா குபு பாரு நகரத்தில் இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய கட்டிடங்கள் நிறைய உள்ளன. பெரும்பாலும் உள்ளூர் மக்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள். மேலும் அவை அந்தக் காலக் கட்டத்தின் கலாசாரம் மற்றும் கட்டிடக்கலை வடிவ அமைப்புகளைக் காட்சிப் படுத்துகின்றன.[2]
முன்பு சிலாங்கூர் ஆற்றின் இரண்டு துணை ஆறுகளுக்கு இடையில் அமைந்து இருந்தது. 18-ஆம் நூற்றாண்டில் ஒரு சுரங்க நகரமாகத் தன் வரலாற்றைத் தொடங்கியது. அதன் செழிப்பான காலத்தில் சிலாங்கூர் மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்கியது.[4]
இந்த நகரின் வழியாகச் சிலாங்கூர் ஆறு செல்கிறது. முன்பு அதில் ஓர் அணை கட்டி இருந்தார்கள். 1883-ஆம் ஆண்டில், அந்த அணை உடைந்து பெரும் வெள்ளத்தை உண்டாக்கி, அந்த நகரத்தையே மூழ்கடித்தது. கோலா குபு பாருவின் அப்போதைய மாவட்ட அதிகாரி, சர் சிசில் ரேங்கிங் (Sir Cecil Ranking) என்பவரும் கொல்லப்பட்டார்.[4]
1926-இல் இரண்டாவது முறையாக உடைந்த போது முழு நகரத்தையும் வெள்ளம் அடித்துச் சென்றது. குவான் யின் கு சி சீனர் கோயில் (Guan Yin Gu Si Temple) மற்றும் அல் இடாயா பள்ளிவாசல் (Al-Hidayah Mosque) மட்டுமே வெள்ளத்தில் இருந்து தப்பித்தன.
வெள்ளத்தைத் தொடர்ந்து, நகரத்தை உயரமான இடத்திற்கு மாற்றி மீண்டும் கட்டத் தொடங்கினார்கள். முதலில் இந்த நகரம் கோலா குபு (Kuala Kubu) என்று அழைக்கப்பட்டது. வெள்ளம் ஏற்பட்ட பிறகு, இந்த நகரத்திற்குக் கோலா குபு பாரு (Kuala Kubu Bharu) அல்லது புதிய கோலா குபு (New Kuala Kubu) என மறுபெயரிடப் பட்டது.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)