கோலா கெடா (P010) மலேசிய மக்களவைத் தொகுதி ![]() | |
---|---|
Kuala Kedah (P010) Federal Constituency in Kedah | |
![]() கெடா மாநிலத்தில் கோலா கெடா மக்களவைத் தொகுதி | |
மாவட்டம் | கோத்தா ஸ்டார் மாவட்டம் கெடா |
வாக்காளர் தொகுதி | கோலா கெடா தொகுதி |
முக்கிய நகரங்கள் | அலோர் ஸ்டார் |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1958 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | அகமத் பக்ருதீன் பக்ருராசி (Ahmad Fakhruddin Fakhrurazi) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 132,500[1][2] |
தொகுதி பரப்பளவு | 233 ச.கி.மீ[3] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022 |
கோலா கெடா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kuala Kedah; ஆங்கிலம்: Kuala Kedah Federal Constituency; சீனம்: 瓜拉吉打联邦选区) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், கோத்தா ஸ்டார் மாவட்டம் (Kota Setar District) மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P010) ஆகும்.[4]
கோலா கெடா மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டில் இருந்து மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. 31 அக்டோபர் 2022-இல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), கோலா கெடா தொகுதி 52 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.[5]
கோத்தா ஸ்டார் மாவட்டம் (Kota Setar District) கெடா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். கெடா மாநிலத்தின் தலைநகரமான அலோர் ஸ்டார் இந்த மாவட்டத்தில் தான் அமைந்துள்ளது. கெடா மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில், பினாங்கின் தலைநகரான ஜார்ஜ் டவுன் நகருக்கு வடமேற்கே 116 கி.மீ. தொலைவில், தாய்லாந்து எல்லைக்கு அருகில் அலோர் ஸ்டார் உள்ளது.[6]
கோத்தா ஸ்டார் மாவட்டத்தின் வடக்கில் குபாங் பாசு மாவட்டம்; கிழக்கில் பொக்கோ சேனா மாவட்டம்; தென்கிழக்கில் பெண்டாங் மாவட்டம்; தெற்கில் யான் மாவட்டம்; மேற்கில் மலாக்கா நீரிணை ஆகியவை எல்லைகளாக உள்ளன.[7]
கோத்தா ஸ்டார் மாவட்டம் 28 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.[8]
கோலா கெடா நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1959 - 2022) | |||
---|---|---|---|
நாடாளுமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
அலோர் ஸ்டார் தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது | |||
மலாயா கூட்டமைப்பின் சட்டமன்றம் | |||
1-ஆவது | 1959–1963 | துங்கு அப்துல் ரகுமான் (Tunku Abdul Rahman) | கூட்டணி (அம்னோ) |
மலேசிய நாடாளுமன்றம் | |||
1-ஆவது | 1963–1964 | துங்கு அப்துல் ரகுமான் (Tunku Abdul Rahman) | கூட்டணி (அம்னோ) |
2-ஆவது | 1964–1969 | ||
1969–1971 | நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது | ||
3-ஆவது | 1971–1973 | துங்கு அப்துல் ரகுமான் (Tunku Abdul Rahman) | கூட்டணி (அம்னோ) |
1973 | செனு அப்துல் ரகுமான் (Senu Abdul Rahman) | ||
1973–1974 | பாரிசான் (அம்னோ) | ||
4-ஆவது | 1974–1978 | ||
5-ஆவது | 1978–1982 | ||
6-ஆவது | 1982–1986 | முகமது அபுபக்கர் ரவுதீன் இப்ராகிம் (Mohammad Abu Bakar Rautin Ibrahim) | |
7-ஆவது | 1986–1990 | ||
8-ஆவது | 1990–1995 | ||
9-ஆவது | 1995–1999 | சக்காரியா முகமது சாயிட் (Zakaria Mohd Said) | |
10-ஆவது | 1999–2004 | முகமது சாபு (Mohamad Sabu | பாஸ் |
11-ஆவது | 2004–2008 | அசிம் சகாயா (Hashim Jahaya) | பாரிசான் (அம்னோ) |
12-ஆவது | 2008–2013 | அகமத் காசிம் (Ahmad Kassim) | பிகேஆர் |
13-ஆவது | 2013–2018 | அசுமான் இசுமாயில் (Azman Ismail) | |
14-ஆவது | 2018–2022 | பாக்காத்தான் அரப்பான் (பிகேஆர்) | |
15-ஆவது | 2022–தற்போது | அகமத் பக்ருதீன் பக்ருராசி (Ahmad Fakhruddin Fakhrurazi) | பெரிக்காத்தான் (பாஸ்) |
பொது | வாக்குகள் | % |
---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
132,500 | - |
வாக்களித்தவர்கள் (Turnout) |
101,510 | 76.6% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
100,475 | 100.00% |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
224 | - |
செல்லாத வாக்குகள் (Rejected Ballots) |
811 | - |
பெரும்பான்மை (Majority) |
28,061 | 27.93% |
வெற்றி பெற்ற கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
% | |
---|---|---|---|---|
அகமத் பக்ருதீன் பக்ருராசி (Ahmad Fakhruddin Fakhrurazi) |
பெரிக்காத்தான் | 56,298 | 56.03% | |
அசுமான் இசுமாயில் (Azman Ismail) |
பாக்காத்தான் | 28,237 | 28.10% | |
மசிதா இப்ராகிம் (Mashitah Ibrahim) |
பாரிசான் | 13,879 | 13.81% | |
உல்யா அகமா இசாமுதீன் (Ulya Aqamah Husamudin) |
உள்நாட்டு போராளிகள் கட்சி | 1,805 | 1.80% | |
சையத் அரனிரி சையத் அகமது (Syed Araniri Syed Ahmad) |
சபா பாரம்பரிய கட்சி | 256 | 0.25% |
எண். | தொகுதி | உறுப்பினர் | கூட்டணி (கட்சி) |
---|---|---|---|
N15 | அனாக் புக்கிட் (Anak Bukit) |
அமிருதீன் அம்சா (Amiruddin Hamzah) |
தாயக போராளிகள் (பெஜுவாங்) |
N16 | குபாங் ரோத்தான் (Kubang Rotan) |
முகமட் அசுமிருல் அனுவார் அரிசு (Mohd Asmirul Anuar Aris) |
பாக்காத்தான் (அமாணா) |
N17 | பெங்காலான் குண்டோர் (Pengkalan Kundor) |
இசுமாயில் சாலே (Ismail Salleh) |
பாக்காத்தான் (அமாணா) |
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)