கோலா கெலாவாங்
Kolo Klawang | |
---|---|
Kuala Klawang | |
![]() | |
![]() கோலா கெலாவாங் நகரம் - மலேசிய கூட்டரசு சாலை 86 சந்திப்பு முனை | |
![]() | |
ஆள்கூறுகள்: 2°56′N 102°05′E / 2.933°N 102.083°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | ![]() |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 71600 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +60 613 0000 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | N |
கோலா கெலாவாங் (மலாய்; ஆங்கிலம்: Kuala Klawang; சீனம்: 瓜拉旺) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் செலுபு மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்; ஆகும். செலுபு மாவட்டத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. மற்றும் இந்த நகரம் ஒரு முக்கிம் தகுதியைப் பெற்றது. நெகிரி செம்பிலான் மாநிலத்தில் முக்கிம் என்பதை லுவாக் (Luak) என்று அழைக்கிறார்கள்.[1]
நெகிரி செம்பிலான் மாநிலத் தலைநகரான சிரம்பான் நகரத்தில் இருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ள இந்த நகரம், மலேசிய கூட்டரசு சாலை 86 வழியாக சிரம்பான் நகரத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் சிலாங்கூர் மாநிலத்தின் உலு லங்காட் மாவட்டமும் அதே கூட்டரசு சாலை வழியாகவும் இணைக்கப்பட்டுள்ளது.[2]
இந்த நகரம் ஒரு பன்மை சமூகங்கள் கொண்ட ஒரு நகரமாக அறியப்படுகிறது. இங்கு வாழும் மக்களில் பெரும்பாலோர் மலாய்க்காரர்கள். இவர்களைத் தொடர்ந்து சீனர்கள் மற்றும் இந்தியர்கள் அடுத்த நிலையில் உள்ளனர்.
மலாய்க்காரர்கள் பெரும்பாலும் கிராமங்களில் வசிக்கிறார்கள். சீனர்கள் நகர்ப்புறங்களில் வணிகத் தொழிலில் ஈடுபட்டு உள்ளார்கள். இந்தியர்கள் பெரும்பாலும் தோட்டப் புறங்களிலும் கிராமப் புறங்களிலும் வசிக்கிறார்கள்.
கோலா கெலாவாங்கில் இரண்டு குறிப்பிடத்தக்க இடங்கள் உள்ளன. முதலாவது விக்டோரியா மகாராணியின் நினைவாக 19-ஆம் நூற்றாண்டில் உள்ளூர் மக்களால் கட்டப்பட்ட கோலா கெலாவாங் நினைவகம்; இந்த நினைவுச் சின்னம் ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது.
செலுபு மாவட்டம் ஒரு வேளாண் மாவட்டமாக இருப்பதால், கோலா கெலாவாங்கின் பொருளாதாரமும் பெரும்பாலும் வேளாண்மை சார்ந்த தொழில்துறையுடன் தொடர்புடையது. இங்குள்ள முக்கியப் பயிர்கள் எண்ணெய் பனை; ரப்பர்; முள்நாறி மற்றும் டிராகன் பழம் போன்ற பழங்கள் ஆகும்.
கோலா கெலாவாங்கில் இரண்டாவது முக்கியமான இடம் கோலா கெலாவாங் தோய் நீர்வீழ்ச்சி. கோலா கெலாவாங் மலைப்பகுதியில் உள்ளூர்வாசிகளின் சுற்றுலாவிற்கு மையமாக இந்த நீர்வீழ்ச்சி விளங்குகிறது. முன்பு தோய் நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் வளைந்த சாலைகள், தற்போது நேராக்கப்பட்டு அகலப்படுத்தப்பட்டு உள்ளன.[3]