கோலா சிலாங்கூர் (P096) மலேசிய மக்களவைத் தொகுதி சிலாங்கூர் | |
---|---|
Kuala Selangor (P096) Federal Constituency in Selangor | |
மாவட்டம் | கோலா சிலாங்கூர் மாவட்டம் சிலாங்கூர் |
வாக்காளர் தொகுதி | கோலா சிலாங்கூர் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோலா சிலாங்கூர்; தஞ்சோங் காராங்; செகிஞ்சான் |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1955 |
கட்சி | பாக்காத்தான் |
இதற்கு முன்னர் நடப்பில் இருந்த தொகுதி | உலு சிலாங்கூர் (2022) |
மக்களவை உறுப்பினர் | சுல்கிப்லி அகமட் (Dzulkefly Ahmad) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 105,325 (2023)[1] |
தொகுதி பரப்பளவு | 434 ச.கி.மீ[2] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022[3] |
கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kuala Selangor; ஆங்கிலம்: Kuala Selangor Federal Constituency; சீனம்: 大河联邦选区) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P096) ஆகும்.
கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதி 1955-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1955-ஆம் ஆண்டில் மலாயா கூட்டரசின் முதலாவது மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
அத்துடன் 1955-ஆம் ஆண்டில் இருந்து கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
கோலா சிலாங்கூர் மாவட்டத்திற்கு வடக்கில் சபாக் பெர்ணம் மாவட்டம்; மேற்கில் உலு சிலாங்கூர் மாவட்டம்; கோம்பாக் மாவட்டம்; தென் மேற்கில் பெட்டாலிங் மாவட்டம்; தெற்கில் கிள்ளான் மாவட்டம்; ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
கோலா சிலாங்கூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்: தஞ்சோங் காராங்; கோலா சிலாங்கூர். இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம் கோலா சிலாங்கூர் ஆகும்.[4]
கோலா சிலாங்கூர் நகரம், கோலா சிலாங்கூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நகரம் மற்றும் நிர்வாக மையம். கிள்ளான் நகரில் இருந்து 50 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 70 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.
18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கோலா சிலாங்கூர் நகரம், சிலாங்கூர் சுல்தானகத்தின் தலைநகரமாக இருந்தது.[5] பின்னர் 1827-ஆம் ஆண்டில் கோலா லங்காட் பகுதியில் உள்ள ஜுக்ரா நகரத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர், 1870-களில் சிலாங்கூர் சுல்தானகடததினால், கிள்ளான் நகரத்திற்கு மாற்றப்பட்டது.
கோலா சிலாங்கூரின் வரலாறு 16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்குகிறது. ஜொகூர் சுல்தானகத்தின் ஆட்சியில் கோலா சிலாங்கூர் இருந்தது. ஜொகூரில் இருந்து துன் முகமட் எனும் அரசப் பிரதிநிதி, கோலா சிலாங்கூர் நிலப் பகுதிகளை ஆட்சி செய்து வந்தார்.
கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1955 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதி 1955-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
மலாயா கூட்டரசின் மக்களவை | ||||
1-ஆவது | P065 | 1955–1959 | ராஜா ரசுதாம் ராஜா சாயிட் (Raja Rastam Shahrome Raja Said Tauphy) |
கூட்டணி (அம்னோ) |
மலாயா கூட்டரசின் மக்களவை | ||||
1-ஆவது | P065 | 1959–1963 | முகமது தகாரி முகமது அலி (Mohamed Dahari Mohd Ali) |
கூட்டணி (அம்னோ) |
மலேசிய மக்களவை | ||||
1-ஆவது | P065 | 1963–1964 | முகமது தகாரி முகமது அலி (Mohamed Dahari Mohd Ali) |
கூட்டணி (அம்னோ) |
2-ஆவது | 1964–1969 | ராஜா ரோம் ராஜா மாமோர் (Raja Rome Raja Ma'amor) | ||
1969–1971 | நாடாளுமன்றம் முடக்கப்பட்டது[6] | |||
3-ஆவது | P065 | 1971–1973 | ராஜா நோங் சிக் ராஜா இசாக் (Raja Nong Chik Raja Ishak) |
கூட்டணி (அம்னோ) |
1973–1974 | கூட்டணி (அம்னோ) | |||
4-ஆவது | P076 | 1974–1978 | ராஜா நோங் சிக் ராஜா இசாக் (Raja Nong Chik Raja Ishak) | |
5-ஆவது | 1978–1982 | அபு அசன் ஒமார் (Abu Hassan Omar) | ||
6-ஆவது | 1982–1986 | |||
7-ஆவது | P085 | 1986–1990 | ||
8-ஆவது | 1990–1995 | |||
9-ஆவது | P089 | 1995–1997 | ||
1997–1999 | ஜமாலுதீன் அட்னான் (Jamaluddin Adnan) | |||
10-ஆவது | 1999–2004 | மொகமட் சயூதி சாயிட் (Mohamed Sayuti Said) | ||
11-ஆவது | P096 | 2004–2008 | முகமட் தாவுத் தாரிகெப் (Mohd Daud Tarihep) | |
12-ஆவது | 2008–2013 | சுல்கிப்லி அகமது (Dzulkefly Ahmad) |
பி.கே.ஆர் (பாஸ்) | |
13-ஆவது | 2013–2018 | இர்மோகிசாம் இப்ராகிம் (Irmohizam Ibrahim) |
பாரிசான் (அம்னோ) | |
14-ஆவது | 2018–2022 | சுல்கிப்லி அகமது (Dzulkefly Ahmad) |
பாக்காத்தான் (அமாணா) | |
15-ஆவது | 2022–தற்போது |
நாடாளுமன்ற தொகுதி | சட்டமன்ற தொகுதிகள் | ||||||
---|---|---|---|---|---|---|---|
1955–59* | 1959–1974 | 1974–1986 | 1986–1995 | 1995–2004 | 2004–2018 | 2018–தற்போது | |
கோலா சிலாங்கூர் | அசாம் ஜாவா | ||||||
புக்கிட் மெலாவத்தி | |||||||
ஈஜோக் | |||||||
ஜெராம் | ஜெராம் | ||||||
கோலா சிலாங்கூர் | |||||||
பெக்கான் கோலா சிலாங்கூர் | |||||||
bஎர்மாத்தாங் | |||||||
செரி சகாயா | |||||||
சுங்கை திங்கி | |||||||
தஞ்சோங் காராங் |
|
சட்டமன்ற தொகுதி | உறுப்பினர் | கூட்டணி (கட்சி) |
---|---|---|---|
N10 | புக்கிட் மெலாவத்தி | நூராசிலே யகாயா (Noorazley Yahya) |
பெரிக்காத்தான் (பெர்சத்து) |
N11 | ஈஜோக் | ஜெப்ரி மேசன் (Jefri Mejan) |
பெரிக்காத்தான் (பாஸ்) |
N12 | ஜெராம் | அரிசன் அசான் (Harrison Hassan ) |
பெரிக்காத்தான் (பெர்சத்து) |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
102,951 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
87,685 | 84.00% | ▼ 3.67 |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
86,481 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
132 | ||
செல்லாத வாக்குகள் (Rejected Ballots) |
1,072 | ||
பெரும்பான்மை (Majority) |
1,002 | 1.15% | ▼ 12.85 |
வெற்றி பெற்ற கட்சி | பாக்காத்தான் | ||
[7] |
சின்னம் | வேட்பாளர் | கட்சி | வாக்குப்பதிவு | % | ∆% |
---|---|---|---|---|---|
சுல்கிப்லி அகமட் (Dzulkefly Ahmad) |
பாக்காத்தான் | 31,033 | 35.88% | -14.09 ▼ | |
துங்கு ஜப்ருல் அசீஸ் (Tengku Zafrul Aziz) |
பாரிசான் | 30,031 | 34.73% | -1.01 ▼ | |
முகமது நூர் முகமது சகார் (Mohd Noor Mohd Sahar) |
பெரிக்காத்தான் | 23,639 | 27.33% | +27.33 | |
முகமது சைத் ரோசுலி (Mohd Shaid Rosli) |
உள்நாட்டு போராளிகள் கட்சி | 1,778 | 2.06% | +2.06 |
எண் | சட்டமன்ற தொகுதி | உள்ளாட்சி மன்றம் |
---|---|---|
N10 | புக்கிட் மெலாவத்தி (Bukit Melawati) |
கோலா சிலாங்கூர் மாவட்ட ஊராட்சி |
N11 | ஈஜோக் (Ijok) | |
N12 | ஜெராம் (Jeram) |
இடம் | உள்ளாட்சி | மலாய் | ஆங்கிலம் | எடுத்துக்காட்டு |
---|---|---|---|---|
மாநகரம் | மாநகராட்சி | Dewan Bandaraya | City Hall or City Council | கோலாலம்பூர் மாநகராட்சி |
நகரம் | நகராட்சி | Majlis Perbandaran | Municipal Council | செலாயாங் நகராட்சி |
கிராமப்புறம் | மாவட்ட ஊராட்சி | Majlis Daerah | District Council | கோலா சிலாங்கூர் மாவட்ட ஊராட்சி |
சிறப்பு உள்ளாட்சி | நகராண்மைக் கழகம்; மேம்பாட்டுக் கழகம் |
Pihak Berkuasa Tempatan | Corporation; Development Board; Development Authority | புத்ராஜெயா மேம்பாட்டுக் கழகம் |