கோலா திராங்கானு (P036) மலேசிய மக்களவைத் தொகுதி திராங்கானு | |
---|---|
Kuala Terengganu (P036) Federal Constituency in Terengganu | |
கோலா திராங்கானு மக்களவைத் தொகுதி (P036 Kuala Terengganu) | |
மாவட்டம் | கோலா திராங்கானு மாவட்டம் திராங்கானு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 107,081 (2023)[1][2] |
வாக்காளர் தொகுதி | கோலா திராங்கானு தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோலா திராங்கானு, கம்போங் சீனா, கோலா திராங்கானு மாவட்டம், சுல்தான் மாமுட் வானூர்தி நிலையம் |
பரப்பளவு | 331 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | அகமது அம்சாத் அசிம் (Ahmad Amzad Hashim) |
மக்கள் தொகை | 129,031 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
கோலா திராங்கானு மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kuala Terengganu; ஆங்கிலம்: Kuala Terengganu Federal Constituency; சீனம்: 瓜拉登嘉楼国会议席) என்பது மலேசியா, திராங்கானு, கோலா திராங்கானு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P036) ஆகும்.[8]
கோலா திராங்கானு மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து கோலா திராங்கானு மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9]
கோலா திராங்கானு மாவட்டம், திராங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். திராங்கானு மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் ஒன்றாகும்.
இந்த மாவட்டத்தின் வடக்கிலும் மேற்கிலும் கோலா நெருசு மாவட்டம், தெற்கில் மாராங் மாவட்டம்; மற்றும் கிழக்கில் தென்சீனக் கடல், திராங்கானு ஆறு ஆகியவை எல்லைகளாக உள்ளன. இந்த மாவட்டத்தின் தலைநகரம் கோலா திராங்கானு ஆகும்.
திராங்கானு மாநிலத்தின் நிர்வாகத் தலைநகரமாகவும்; அரசத் தலைநகரமாகவும் கோலா திராங்கானு விளங்குகிறது. இந்த நகரத்திற்கு 2008 சனவரி 1-ஆம் தேதி கரையோர மரபுரிமை நகரம் எனும் மாநகரத் தகுதி வழங்கப்பட்டது.
இந்த நகரம், திராங்கானு மாநிலத்தின் முக்கியமான அரசியல், பொருளாதார மையமாக இருப்பதுடன், மாநிலத்தின் பல சுற்றுலா மையங்களுக்கான நுழைவாயிலாகவும் உள்ளது. இந்த நகரத்தில் உள்ள கம்போங் சீனா, பசார் பெசார் கெடாய் பாயாங் (Pasar Besar Kedai Payang), திராங்கானு மாநில அருங்காட்சியகம், பத்து பூரோக் கடற்கரை (Batu Buruk Beach) போன்றவை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்களாக உள்ளன.
கோலா திராங்கானு மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1974-ஆம் ஆண்டில் கோலா திராங்கானு தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
கோலா திராங்கானு | ||||
4-ஆவது மக்களவை | P032 | 1974–1978 | முசுதபா அலி (Mustafa Ali) |
பாரிசான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | அப்துல் மனான் உத்மான் (Abdul Manan Othman) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | |
6-ஆவது மக்களவை | 1982–1986 | |||
கோலா திராங்கானு | ||||
7-ஆவது மக்களவை | P033 | 1986–1990 | சுபிர் எம்போங் (Zubir Embong) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
8-ஆவது மக்களவை | 1990–1995 | அப்துல் மனான் உத்மான் (Abdul Manan Othman) |
செமாங்காட் 46 | |
9-ஆவது மக்களவை | P036 | 1995–1999 | அபுபக்கர் தாவூத் (Abu Bakar Daud) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
10-ஆவது மக்களவை | 1999–2004 | சையத் அசுமான் சையத் அகமத் நவாவி (Syed Azman Syed Ahmad Nawawi) |
மாற்று முன்னணி (மலேசிய இசுலாமிய கட்சி) | |
11-ஆவது மக்களவை | 2004–2008 | ரசாலி இசுமாயில் (Razali Ismail) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | |
12-ஆவது மக்களவை | 2008 | |||
2008–2013 | முகமது அப்துல் வாகித் எண்டுட் (Mohd Abdul Wahid Endut) |
பாக்காத்தான் ராக்யாட் (மலேசிய இசுலாமிய கட்சி) | ||
13-ஆவது மக்களவை | 2013–2015 | ராஜா கமருல் பகரின் சா ராஜா அகமது (Raja Kamarul Bahrin Shah Raja Ahmad) | ||
2015–2018 | அமாணா | |||
14-ஆவது மக்களவை | 2018–2020 | அகமது அம்சாத் அசிம் (Ahmad Amzad Hashim) |
மலேசிய இசுலாமிய கட்சி | |
2020–2022 | பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ∆% | |
---|---|---|---|---|---|
மலேசிய இசுலாமிய கட்சி | அகமது அம்சாத் அசிம் (Ahmad Amzad Hashim) |
68,369 | 76.41% | + 11.14% | |
பாக்காத்தான் அரப்பான் | அசான் இசுமாயில் (Azan Ismail) |
21,103 | 23.59% | + 12.25% | |
செல்லுபடி வாக்குகள் (Valid) | 89,472 | 100% | |||
செல்லாத வாக்குகள் (Rejected) | 1,049 | ||||
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) | 111 | ||||
வாக்களித்தவர்கள் (Turnout) | 90,632 | 73.34% | - 4.96% ▼ | ||
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) | 123,397 | ||||
பெரும்பான்மை (Majority) | 47,266 | 52.82% | + 10.45% | ||
மலேசிய இசுலாமிய கட்சி | வெற்றி பெற்ற கட்சி (Hold) | ||||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[10] |