கோலா நெருஸ் (P035) மலேசிய மக்களவைத் தொகுதி திராங்கானு | |
---|---|
Kuala Nerus (P035) Federal Constituency in Terengganu | |
கோலா நெருஸ் மக்களவைத் தொகுதி (P035 Kuala Nerus) | |
மாவட்டம் | கோலா நெருஸ் மாவட்டம் திராங்கானு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 107,081 (2023)[1][2] |
வாக்காளர் தொகுதி | கோலா நெருஸ் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோலா நெருஸ் மாவட்டம், பத்து ராகிட், ரெடாங் தீவு, கோலா திராங்கானு மாநகராட்சி |
பரப்பளவு | 331 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | அலியாஸ் ரசாக் (Alias Razak) |
மக்கள் தொகை | 144,220 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
கோலா நெருஸ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kuala Nerus; ஆங்கிலம்: Kuala Nerus Federal Constituency; சீனம்: 瓜拉尼鲁斯国会议席) என்பது மலேசியா, திராங்கானு, கோலா நெருஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P035) ஆகும்.[8]
கோலா நெருஸ் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து கோலா நெருஸ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9]
கோலா நெருஸ் மாவட்டம், திராங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். திராங்கானு மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் இந்த மாவட்டம் மிகப் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட மாவட்டமாகும். 2014-ஆம் ஆண்டில் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
முன்பு கோலா திராங்கானு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கோலா நெருசு மாவட்டத்தின் தலைநகரம் கோலா நெருஸ் நகரம். கோங் படாக், செபெராங் தாகிர், பத்து ராகிட் மற்றும் பத்து என்னாம் ஆகியவை மற்ற முக்கிய நகரங்கள் ஆகும்.
கோலா நெருஸ் மாவட்டத்தில் ரெடாங் தீவுக்கூட்டம (Redang archipelago) உள்ளது. ரெடாங் தீவு மற்றும் பினாங்கு தீவு (Pinang Island) ஆகியவை இரண்டும் முக்கிய தீவுகள். மக்கள் வசிக்கும் தீவுகள். ரெடாங் தீவுக்கூட்டம் தென் சீனக் கடலில் உள்ள கோலா திராங்கானுவில் இருந்து 45 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.
1994-ஆம் ஆண்டு ரெடாங் தீவுக்கூட்டம் ஒரு கடல் பூங்காவாக நியமிக்கப்பட்டது. மலேசியாவில், கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்கவும் மற்றும் நீருக்கடியிலான இயற்கைத் தன்மையை அனுபவிக்க மக்களுக்கு வாய்ப்புகள் வழங்குவதற்காக அந்தக் கடல் பூங்கா நிறுவப்பட்டது.[10]
கோலா நெருஸ் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1974-ஆம் ஆண்டில் கோலா நெருஸ் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
4-ஆவது மக்களவை | P031 | 1974–1978 | நிக் அசன் அப்துல் ரகுமான் (Nik Hassan Abdul Rahman) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | |||
6-ஆவது மக்களவை | 1982–1986 | இப்ராகிம் அசுமி அசன் (Ibrahim Azmi Hassan) | ||
7-ஆவது மக்களவை | P032 | 1986–1990 | ||
8-ஆவது மக்களவை | 1990–1995 | அப்துல் ரசீட் முகமது (Abdul Rashid Muhammad) | ||
9-ஆவது மக்களவை | P035 | 1995–1999 | அப்துல் ரகீன் முகமது சைது (Abdul Rahin Mohd Said) | |
10-ஆவது மக்களவை | 1999–2004 | சுக்ரிமான் சம்சுதீன் (Shukrimum Shamsudin) |
மாற்று முன்னணி (மலேசிய இசுலாமிய கட்சி) | |
11-ஆவது மக்களவை | 2004–2008 | செ அசுமி அப்துல் ரகுமான் (Che Azmi Abdul Rahman) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | |
12-ஆவது மக்களவை | 2008–2013 | முகமது நசீர் இப்ராகிம் பிக்ரி (Mohd Nasir Ibrahim Fikri) | ||
13-ஆவது மக்களவை | 2013–2018 | கைருதீன் ரசாலி (Khairuddin Razali) |
பாக்காத்தான் ராக்யாட் (மலேசிய இசுலாமிய கட்சி) | |
14-ஆவது மக்களவை | 2018–2020 | மலேசிய இசுலாமிய கட்சி | ||
2020–2022 | பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) | |||
2022 | சுயேச்சை | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | அலியாஸ் ரசாக் (Alias Razak) |
பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ∆% | |
---|---|---|---|---|---|
மலேசிய இசுலாமிய கட்சி | அலியாஸ் ரசாக் (Alias Razak) |
56,697 | 64.70% | + 10.04% | |
பாரிசான் நேசனல் | முகமது கைருதீன் அமன் ரசாலி (Mohd Khairuddin Aman Razali) |
26,932 | 30.73% | - 10.22% ▼ | |
பாக்காத்தான் அரப்பான் | சுகைமி அசிம் (Suhaimi Hashim) |
3,708 | 4.23% | - 2.16% ▼ | |
தாயக இயக்கம் | அசகார் வாகீத் (Azahar Wahid) |
291 | 0.33% | + 0.33% | |
செல்லுபடி வாக்குகள் (Valid) | 87,628 | 100% | |||
செல்லாத வாக்குகள் (Rejected) | 736 | ||||
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) | 229 | ||||
வாக்களித்தவர்கள் (Turnout) | 88,593 | 82.71% | - 4.80% ▼ | ||
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) | 105,952 | ||||
பெரும்பான்மை (Majority) | 29,765 | 33.97% | + 22.26% | ||
மலேசிய இசுலாமிய கட்சி | வெற்றி பெற்ற கட்சி (Hold) | ||||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[11] |