கோலா பிலா (P129) மலேசிய மக்களவைத் தொகுதி நெகிரி செம்பிலான் | |
---|---|
Kuala Pilah (P129) Federal Constituency in Negeri Sembilan | |
கோலா பிலா மக்களவைத் தொகுதி (P129 Kuala Pilah) | |
மாவட்டம் | கோலா பிலா மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 63,344 (2023)[1][2] |
வாக்காளர் தொகுதி | கோலா பிலா தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோலா பிலா, தெராச்சி, சுவாசே, செரி மெனாந்தி |
பரப்பளவு | 1,026 ச.கி.மீ[3] |
முன்னாள் நடப்பிலுள்ள தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1958 |
கட்சி | பாரிசான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | அட்னான் அபு அசன் (Adnan Abu Hassan) |
மக்கள் தொகை | 71,004[4] |
முதல் தேர்தல் | மலாயா பொதுத் தேர்தல், 1959 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
கோலா பிலா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kuala Pilah; ஆங்கிலம்: Kuala Pilah Federal Constituency; சீனம்: 瓜拉庇劳国会议席) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், கோலா பிலா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P129) ஆகும்.[5]
கோலா பிலா மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1959-ஆம் ஆண்டில் இருந்து கோலா பிலா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
கோலா பிலா மாவட்டம், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் ஒன்றாகும். கோலா பிலா மாவட்டத்தின் தலைநகரம் கோலா பிலா நகரம் ஆகும். கோலா பிலா நகரம் ஒரு பழைய பள்ளத்தாக்கு நகரமாகும்.
கோலா பிலா மாவட்டம், சிரம்பான் மாநகருக்கு கிழக்கே 30 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. இப்போதைய சிரம்பான் நகரம் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகராக மாறுவதற்கு முன்னர், கோலா பிலா நகரம் தான் தலைநகரமாக இருந்தது.[7]
கோலா பிலா மாவட்டம், கோலா பிலா உள்ளூராட்சி மன்றத்தால் நிர்வாகம் செய்யப் படுகிறது. கோலா பிலா மாவட்டம் 11 முக்கிம்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. கோலா பிலா மாவட்டம், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மிகப் பழைமையான மாவட்டங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.
கோலா பிலா மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1958-ஆம் ஆண்டில் கோலா பிலா தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
மலாயா கூட்டமைப்பின் நாடாளுமன்றம் | ||||
1-ஆவது மலாயா மக்களவை | P079 | 1959–1963 | பகமான் சம்சுடின் (Bahaman Samsudin) |
மலேசிய கூட்டணி (அம்னோ) |
மலேசிய மக்களவை | ||||
1-ஆவது மலேசிய மக்களவை | P079 | 1963–1964 | பகமான் சம்சுடின் (Bahaman Samsudin) |
மலேசிய கூட்டணி (அம்னோ) |
2-ஆவது மக்களவை | 1964–1969 | |||
1969–1971 | நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[9] | |||
3-ஆவது மக்களவை | P079 | 1971–1973 | அப்துல் சமாட் இட்ரிஸ் (Abdul Samad Idris) |
மலேசிய கூட்டணி (அம்னோ) |
1973–1974 | பாரிசான் நேசனல் (அம்னோ) | |||
4-ஆவது மக்களவை | P092 | 1974–1978 | ||
5-ஆவது மக்களவை | 1978–1982 | மன்சூர் ஒசுமான் (Mansor Othman) | ||
6-ஆவது மக்களவை | 1982–1986 | நப்சியா ஒமார் (Napsiah Omar) | ||
7-ஆவது மக்களவை | P106 | 1986–1990 | ||
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P116 | 1995–1999 | அபு சாகார் உஜாங் (Abu Zahar Ujang) | |
10-ஆவது மக்களவை | 1999–2004 | நப்சியா ஒமார் (Napsiah Omar) | ||
11-ஆவது மக்களவை | P129 | 2004–2008 | அசன் மாலிக் (Hasan Malek) | |
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2020 | எடின் சியாசிலி சித் (Eddin Syazlee Shith) |
பாக்காத்தான் அரப்பான் (பெர்சத்து) | |
2020–2022 | பெரிக்காத்தான் நேசனல் ((பெர்சத்து) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | அட்னான் அபு அசன் (Adnan Abu Hassan) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
அட்னான் அபு அசன் (Adnan Abu Hassan) | பாரிசான் நேசனல் | 21,423 | 44.02 | 0.33 ▼ | |
நோர் அசுமான் முகமட் (Nor Azman Mohamad) | பாக்காத்தான் அரப்பான் | 14,940 | 30.70 | 14.15 ▼ | |
எடின் சியாசிலி சித் (Eddin Syazlee Shith) | பெரிக்காத்தான் நேசனல் | 11,560 | 23.76 | 23.76 | |
கமருல்சமான் கம்தியாசு (Kamarulzaman Kamdias) | தாயக இயக்கம் | 406 | 0.83 | 0.83 | |
அசுமான் இட்ரிசு (Azman Idris) | சபா பாரம்பரிய கட்சி | 333 | 0.68 | 0.68 | |
மொத்தம் | 48,662 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 48,662 | 98.56 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 709 | 1.44 | |||
மொத்த வாக்குகள் | 49,371 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 63,247 | 76.94 | 5.70 ▼ | ||
பாரிசான் நேசனல் கைப்பற்றியது | |||||
மூலம்: [10] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)