கோலா பென்யூ நகரம் | |
---|---|
Kuala Penyu Town | |
சபா | |
![]() கோலா பென்யூ நகரின் மையப் பகுதி | |
![]() | |
சபாவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 5°34′12.72″N 115°35′38.39″E / 5.5702000°N 115.5939972°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
பிரிவு | உட்பகுதி பிரிவு |
மாவட்டம் | கோலா பென்யூ மாவட்டம் |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை |
மலேசிய அஞ்சல் குறியீடு | 89740 |
மலேசியத் தொலைபேசி | +60(87) |
மலேசிய வாகனப் பதிவெண்கள் | SL |
கோலா பென்யூ என்பது (மலாய்: Pekan Kuala Penyu; ஆங்கிலம்: Kuala Penyu Town) மலேசியா, சபா மாநிலம், உட்பகுதி பிரிவு, கோலா பென்யூ மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். கடசான்; டூசுன் தத்தானா (Dusun Tatana) எனும் இனக் குழுவினரை அதிகமாகக் கொண்ட நகரம்.[1]
சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து 105 கி.மீ. தொலைவில், கலியாஸ் தீபகற்பத்தில் (Klias Peninsula) அமைந்து உள்ளது. ஒரு காலத்தில் இந்த நகரம் சதுப்பு நிலக் காடுகளால் மூடப்பட்டு இருந்தது.[2]
தெற்கு பிலிப்பீன்சு; சூலு தீவுக் கூட்டம்; மிண்டனாவோ தீவு போன்ற இடங்களில் இருந்து கணிசமான எண்ணிக்கையில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் பலர் உள்ளனர்.
கோலா பென்யூ அதன் கடற்கரைகளுக்குப் பிரபலமானது. குறிப்பாக தெம்புரோங் (Tempurung) கடற்கரை, சவாங்கான் (Sawangan) கடற்கரை மற்றும் சுங்கை லாபுவான் (Sungai Labuan) கடற்கரைகள்.
பெரும்பாலான கோலா பென்யூ மக்கள் விவசாயிகள் ஆகும். இளைய தலைமுறையினர் நகரங்களுக்கு குடிபெயர்கின்றனர். பெரும்பான்மை மக்கள் கிறிஸ்தவம் அல்லது இஸ்லாத்தை தழுவுகிறார்கள் அல்லது பின்பற்றுகிறார்கள். சிலர் இன்னும் ஆன்ம வாதத்தைப் கடைபிடித்து வருகின்றனர்.
லபுவான் தீவின் முக்கிய நுழைவாயில் பட்டினமாகக் கோலா பென்யூ அமைந்து உள்ளது.
Kuala Penyu District Council கோலா பென்யூ நகராண்மைக் கழகம் பரணிடப்பட்டது 2019-12-14 at the வந்தவழி இயந்திரம்