கோலா லங்காட் (P112) மலேசிய மக்களவை தொகுதி ![]() | |
---|---|
Shah Alam (112) Federal Constituency in Selangor | |
![]() | |
மாவட்டம் | கோலா லங்காட் மாவட்டம்![]() |
வாக்காளர் தொகுதி | கோலா லங்காட் தொகுதி |
முக்கிய நகரங்கள் | பந்திங்; ஜுக்ரா தெலுக் டத்தோ, மோரிப், கேரி தீவு |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1958 |
நீக்கப்பட்ட காலம் | கோலா லங்காட் (1958) |
கட்சி | ![]() |
இதற்கு முன்னர் நடப்பில் இருந்த தொகுதி | (2022) |
மக்களவை உறுப்பினர் | அகமத் யூனுஸ் அயிரி (Ahmad Yunus Hairi) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 151,707 (2023)[1] |
தொகுதி பரப்பளவு | 582 ச.கி.மீ[2] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022[3] |
கோலா லங்காட் மக்களவை தொகுதி[4] (மலாய்: Kawasan Persekutuan Kuala Langat; ஆங்கிலம்: Kuala Langat Federal Constituency; சீனம்: 瓜拉冷岳国会议席) என்பது மலேசியா, சிலாங்கூர், கோலா லங்காட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P112) ஆகும்.
கோலா லங்காட் மக்களவை தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் 1959-ஆம் ஆண்டில், அதன் முதலாவது மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பின்னர், இறுதியாக 2022-ஆம் ஆண்டில், பொதுத் தேர்தல் நடைபெற்றது.
அத்துடன் 1959-ஆம் ஆண்டில் இருந்து கோலா லங்காட் மக்களவை தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
பந்திங் நகரம், சிலாங்கூர், கோலா லங்காட் மாவட்டத்தின் தலைப்பட்டணம் ஆகும். சிலாங்கூரின் முன்னாள் அரச நகரமான ஜுக்ரா, பந்திங் நகரத்திற்கு அருகில் அமைந்து உள்ளது. இந்த நகருக்கு மிக அருகில் மோரிப் கடற்கரைகள் உள்ளன.[5]
1950-ஆம் ஆண்டுகளில் பந்திங் சுற்று வட்டாரங்களில் நிறைய ரப்பர் தோட்டங்கள்; தென்னை தோட்டங்கள்; காபி தோட்டங்கள் இருந்தன. அவற்றுள் தமிழர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள். 1882-ஆம் ஆண்டில் பந்திங், ஜுக்ரா பகுதிகளில் பெர்மாத்தாங் தோட்டம் உருவாக்கப் பட்டது. முதலில் இது ஒரு வாழைத் தோட்டம் ஆகும். பின்னர் ஆமணக்கு தோட்டம்; அதன் பின்னர் காபி பயிர்த் தோட்டம். அதற்கு அடுத்து தென்னைத் தோட்டமாக மாறியது. இந்தத் தோட்டத்திற்குத் தமிழர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாகக் கொண்டு வரப் பட்டார்கள்.[6]
கோலா லங்காட் மாவட்டம் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு வடக்கில் பெட்டாலிங் மாவட்டம், கிள்ளான் மாவட்டம்; தெற்கில் சிப்பாங் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன..[7] கோலா லங்காட் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்: பந்திங்; ஜுக்ரா; தெலுக் டத்தோ; மோரிப் மற்றும் கேரி தீவு. கோலா லங்காட் மாவட்டம் எண்ணெய் பனை வேளாண்மைக்கு முக்கியத்துவம் வழங்கும் மாவட்டமாகும்.
கோலா லங்காட் தொகுதியின் மக்களவை உறுப்பினர்கள் (1959- 2022) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
சிலாங்கூர் பாராட்; லங்காட் தொகுதிகளில் இருந்து 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
மலாயா கூட்டமைப்பின் நாடாளுமன்றம் | ||||
1-ஆவது மலாயா மக்களவை | P075 | 1959–1963 | அப்துல் அசீஸ் இசாக் (Abdul Aziz Ishak) |
மலேசியக் கூட்டணி (அம்னோ) |
மலேசிய நாடாளுமன்றம் | ||||
1-ஆவது மலேசிய மக்களவை | P075 | 1963–1964 | அப்துல் அசீஸ் இசாக் (Abdul Aziz Ishak) |
தேசிய மாநாட்டுக் கட்சி |
2-ஆவது மலேசிய மக்களவை | 1964–1969 | முகமது தாகிர் அப்துல் மஜித் (Mohd. Tahir Abdul Majid) |
மலேசிய கூட்டணி (அம்னோ) | |
1969–1971 | நாடாளுமன்றம் ஒத்திவைப்பு[8] | |||
3-ஆவது மலேசிய மக்களவை | P075 | 1971–1973 | முகமது தாகிர் அப்துல் மஜித் (Mohd. Tahir Abdul Majid) |
மலேசியக் கூட்டணி (அம்னோ) |
1973–1974 | பாரிசான் நேசனல் (அம்னோ) | |||
4-ஆவது மலேசிய மக்களவை | P082 | 1974–1978 | ஆயிசா கனி (Aishah Ghani) | |
5-ஆவது மலேசிய மக்களவை | ||||
6-ஆவது மலேசிய மக்களவை | ||||
7-ஆவது மலேசிய மக்களவை | P094 | 1986–1990 | பசுரி பசூரி (Basri Bajuri) | |
8-ஆவது மலேசிய மக்களவை | ||||
9-ஆவது மலேசிய மக்களவை | P101 | 1995–1999 | சாபி சாலே (Shafie Salleh) | |
10-ஆவது மலேசிய மக்களவை | ||||
11-ஆவது மலேசிய மக்களவை | P112 | 2004–2008 | ||
12-ஆவது மலேசிய மக்களவை | 2008–2013 | அப்துல்லா சானி அப்துல் அமீத் (Abdullah Sani Abdul Hamid) |
பாக்காத்தான் ராக்யாட் (பி.கே.ஆர்) | |
13-ஆவது மலேசிய மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மலேசிய மக்களவை | 2018–2021 | சேவியர் செயக்குமார் (Xavier Jayakumar Arulanandam) |
பாக்காத்தான் அரப்பான் (பி.கே.ஆர்) | |
2021–2022 | சுயேச்சை | |||
2022 | மலேசிய இனக் கட்சி | |||
15-ஆவது மலேசிய மக்களவை | 2022–தற்போது | அகமத் யூனுஸ் அயிரி (Ahmad Yunus Hairi) |
பெரிக்காத்தான் (மலேசிய இசுலாமிய கட்சி) |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
148,637 | - | - |
வாக்களித்தவர்கள் (Turnout) |
125,449 | 83.33% | ▼ -4.01 |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
123,860 | 100.00% | - |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
153 | - | - |
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
1,436 | - | - |
பெரும்பான்மை (Majority) |
1,833 | 1.48% | ▼ -17.94 |
வெற்றி பெற்ற கட்சி: | ![]() |
பெரிக்காத்தான் | |
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[9] |
சின்னம் | வேட்பாளர் | கட்சி | வாக்குப்பதிவு | % | ∆% |
---|---|---|---|---|---|
![]() |
அகமத் யூனுஸ் அயிரி (Ahmad Yunus Hairi) |
பெரிக்காத்தான் நேசனல் (PN) | 52,867 | 42.68% | +42.68 ![]() |
![]() |
மணிவண்ணன் கோவிந்தசாமி (Manivannan Gowindasamy) |
பாக்காத்தான் அரப்பான் (PH) | 51,034 | 41.20% | -7.88 ▼ |
![]() |
மோகனா முனியாண்டி (Mohana Muniandy Raman) |
பாரிசான் நேசனல் (BN) | 18,685 | 15.09% | -14.57 ▼ |
![]() |
ரிசுவான் அப்துல்லா (Ridzuan Abdullah) |
உள்நாட்டு போராளிகள் கட்சி (GTA / PEJUANG) |
591 | 0.48% | +0.48 ![]() |
![]() |
சனாரியா சுமுரி (Zanariah Jumhuri) |
சுயேச்சை | 512 | 0.41% | 0.41 ![]() |
![]() |
கேவசன் முருகேசன் (Gaveson Murugeson) |
மலேசிய மக்கள் கட்சி (Parti Rakyat Malaysia) |
171 | 0.14% | +0.14 ![]() |