கோலாகங்சார் (P067) மலேசிய மக்களவைத் தொகுதி பேராக் | |
---|---|
Kuala Kangsar (P067) Federal Constituency in Perak | |
மாவட்டம் | கோலாகங்சார் மாவட்டம் பேராக் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 46,985 (2022)[1] |
வாக்காளர் தொகுதி | கோலாகங்சார் தொகுதி[2] |
முக்கிய நகரங்கள் | கோலாகங்சார், தைப்பிங், சுங்கை சிப்புட், சிம்மோர் |
பரப்பளவு | 576 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1958 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | இசுகந்தர் சுல்கர்னாயின் (Iskandar Dzulkarnain Abdul Khalid) |
மக்கள் தொகை | 51,789 (2020) [4] |
முதல் தேர்தல் | மலாயா பொதுத் தேர்தல், 1959 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
கோலாகங்சார் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kuala Kangsar; ஆங்கிலம்: Kuala Kangsar Federal Constituency; சீனம்: 瓜拉江沙 联邦选) என்பது மலேசியா, பேராக், கோலாகங்சார் மாவட்டத்தில் (Kuala Kangsar District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P067) ஆகும்.[7]
கோலாகங்சார் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1959-ஆம் ஆண்டில் இருந்து கோலாகங்சார் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
கோலாகங்சார் நகரம் என்பது பேராக் மாநிலத்தின் அரச நகரம் ஆகும். முதன்முதலில் இந்த நகரம் கங்சார் ஆற்றுக் கரையோரம் உருவாக்கப் பட்டது. கங்சார் ஆறு பேராக் ஆற்றுடன் கலக்கிறது.
கோலாகங்சார் நகரத்தில் ஆண்டு முழுவதும்ம் மழை பெய்யும். பருவமழைக் காலங்களில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். 1926-ஆம் ஆண்டு கடும் வெள்ளம் ஏற்பட்டது. அதனால் கோலாகங்சார் நகரமே வெள்ளத்தில் மூழ்கியது.
18-ஆம் நூற்றாண்டில் இருந்து பேராக் சுல்தான்கள் இந்த நகரில் தங்கி தான் ஆட்சி செய்து வந்தனர். பிரித்தானியர் பேராக் மாநிலத்தை நிர்வாகம் செய்யும் போது கூட கோலாகங்சார் நகரம் தான் அவர்களின் நிர்வாகத் தளமாக விளங்கியது.
கோலாகங்சார் நகரத்தில் தான் மலேசியாவின் முதல் ரப்பர் மரக் கன்று நடப்பட்டது. பிரித்தானிய தாவரவியலாளர் எச். என். ரிட்லி என்பவர் முதல் ரப்பர் கன்றை நட்டார்.
கோலாகங்சார் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1959-ஆம் ஆண்டில் சுங்கை ஈலிர் பேராக்; சுங்கை பேராக் உலு தொகுதிகளில் இருந்து கோலாகங்சார் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
மலாயா கூட்டரசின் மக்களவை | ||||
1-ஆவது மலாயா மக்களவை | P047 | 1959–1963 | அப்துல்லா அப்துல் ரவுப் (Abdullah Abdul Raof) |
மலேசிய கூட்டணி (அம்னோ) |
மலேசிய மக்களவை | ||||
1-ஆவது மக்களவை | P047 | 1963–1964 | அப்துல்லா அப்துல் ரவுப் (Abdullah Abdul Raof) |
மலேசிய கூட்டணி (அம்னோ) |
2-ஆவது மக்களவை | 1964–1969 | மெகாட் ஒமார் (Megat Khas Omar) | ||
1969–1971 | நாடாளுமன்ற இடைநிறுத்தம்[8] | |||
3-ஆவது மக்களவை | P047 | 1971–1973 | கசாலி சாபி (Mohamed Ghazali Jawi) |
மலேசிய கூட்டணி (அம்னோ) |
1973–1974 | பாரிசான் நேசனல் (அம்னோ) | |||
4-ஆவது மக்களவை | P052 | 1974–1978 | ஓன் சாரியா அபு பக்கர் (Oon Zariah Abu Bakar)) | |
5-ஆவது மக்களவை | 1978–1982 | யோங் பத்திமா ரசாலி (Yong Fatimah Razali) | ||
6-ஆவது மக்களவை | 1982–1986 | ரபிடா அசிஸ் (Rafidah Aziz) | ||
7-ஆவது மக்களவை | P061 | 1986–1990 | ||
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P064 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | |||
11-ஆவது மக்களவை | P067 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2016 | வான் முகமது காயிர் (Wan Mohammad Khair) | ||
2016–2018 | மசுதுரா யாசிட் (Mastura Mohd Yazid) | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | |||
15-ஆவது மக்களவை | 2022–2024 | இசுகந்தர் சுல்கர்னாயின் (Iskandar Dzulkarnain) |
பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து) | |
2024–தற்போது | சுயேச்சை |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
46,985 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
36,232 | 77.11% | ▼ - 7.97% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
35,754 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
35 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
443 | ||
பெரும்பான்மை (Majority) |
3,566 | 9.97% | + 7.54 |
வெற்றி பெற்ற கட்சி | பெரிக்காத்தான் நேசனல் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம் [9] |
வேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
இசுகந்தர் சுல்கர்னாயின் (Iskandar Dzulkarnain) |
பெரிக்காத்தான் | 35,754 | 14,380 | 40.22% | + 40.22% | |
மசுலின் சாம் ரசுமான் (Maslin Sham Razman) |
பாரிசான் | - | 10,814 | 30.25% | - 10.01 % ▼ | |
அகமது தர்மிசி ரம்லி (Ahmad Termizi Ramli) |
பாக்காத்தான் | - | 10,356 | 28.96% | - 8.87% ▼ | |
யுசுமாலியா முகமது யூசோப் (Yusmalia Mohamad Yusof) |
தாயக இயக்கம் | - | 204 | 0.57% | + 0.57% |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)