கோலத்திரி அல்லது கோலாத்திரி ராஜா (Kolathiri or Kolathiri Rājā) என்பது புலி நாடு அல்லது கோலாத்து நாட்டு அரச குடும்பத்தின் திருமண வரிசையில் மிகவும் மூத்த ஆண்களின் பட்டமாகும். [1] [2]
இந்த அரச குடும்பம் கோலாசொரூபம் என்றும் அழைக்கப்பட்டது. சிறைக்கல் கோவிலகத்தின் மன்னர்கள் கோலாத்திரிகள் என்று அழைக்கப்பட்டனர். உதய வர்மன் கோலாத்திரியின் அரசவைக் கவிஞராக செருசேரி என்பவர் இருந்தார். செருசேரி கோலாத்திரியின் நண்பராக இருந்தார். கோலத்திரியின் தோற்றம் கேரளபதி மற்றும் கேரள மகாத்யம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புலி நாட்டுக் குடும்பம் பல நூற்றாண்டுகளாக கோலாத்திரி என்று அறியப்பட்டனர். மேலும் அவர்கள் நேரடியாக சேரர், பாண்டியர்கள், சோழர்கள், ஆய் ஆகியோருடைய வழித்தோன்றல்கள் ஆவர். பின்னர் வேணாடு என்றும் பிற்காலத்தில் திருவிதாங்கூர் அரச குடும்பம் என்றும் அழைக்கப்பட்டன. இவை திருவனந்தபுரம் பகுதியில் தோன்றியது புலி நாடு என்று அழைக்கப்பட்ட காலகட்டத்தில் கோலாத்திரி சேரர், ஆய் வம்சத்தினரின் ஒரு கிளையாகத் இருந்திருக்கலாம். கி.பி பன்னிரண்டாம் நூற்றாண்டில் குலசேகரப் பேரரசு அல்லது மகோதயபுரத்தின் பெருமாள் ஆட்சியாளர்கள் காணாமல் போன பின்னர், இந்தியாவின் கேரளாவில் உள்ள எழிமலாவில் இவர்கள் தோன்றியுள்ளனர். மேலும், இவர்களது அரண்மனை கேரளாவில் முற்றிலும் சுதந்திரமானதும் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆன முக்கிய அரசியல் இல்லங்களில் ஒன்றாகும். [3] கோலாத்திரி குடும்பமும் திருவிதாங்கூர் குடும்பமும் 1990களில் ஒருவருக்கொருவர் பெண் குழந்தைகளை ஒருவருக்கொருவர் தத்தெடுத்தன.
உருமி என்ற மலையாளத் திரைப்படத்தில் "கோலாத்திரி" ஒரு கதாபாத்திரமாக தோன்றுகின்றனர். இந்தப் படம் வட கேரளாவில் போர்த்துகீசிய தலையீடு, மேற்கில் ஒரு நாயகனாகப் புகழப்பட்ட வாஸ்கோடகாமா செய்த தவறான செயல்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த படம் 2011 மார்ச் 31 அன்று வெளியிடப்பட்டது.