கோலாலம்பூர் காராக் விரைவுச்சாலை Kuala Lumpur–Karak Expressway Lebuhraya Kuala Lumpur–Karak | |
---|---|
வழித்தடத் தகவல்கள் | |
பராமரிப்பு அனே பெர்காட் ANIH Berhad | |
நீளம்: | 60 km (37 mi) |
பயன்பாட்டு காலம்: | 1974 (இன்று வரையில்) – |
வரலாறு: | 1979-இல் கட்டி முடிக்கப்பட்டது |
முக்கிய சந்திப்புகள் | |
தென்மேற்கு முடிவு: | கோலாலம்பூர் மத்திய சுற்றுச்சாலை 2 >>> கோம்பாக், சிலாங்கூர் |
ஜாலான் கோம்பாக்-பெந்தோங் மலேசிய கூட்டரசு சாலை 8 ஜாலான் குவாந்தான்-கோலாலம்பூர் | |
வடகிழக்கு முடிவு: | கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை >>> காராக், பகாங் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | கோம்பாக், கெந்திங் மலை, புக்கிட் திங்கி, பெந்தோங், காராக் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
கோலாலம்பூர் காராக் விரைவுச்சாலை அல்லது காராக் விரைவுச்சாலை
(ஆங்கிலம்: Kuala Lumpur–Karak Expressway; மலாய்: Lebuhraya Kuala Lumpur–Karak) என்பது மலேசியாவில் கோலாலம்பூர்; காராக் மாநகரங்களை இணைக்கும் விரைவுச்சாலையாகும். மலேசியாவின் பழைமையான நெடுஞ்சாலைகளில் இந்தச் சாலையும் ஒன்றாகும். மலேசியாவில் உள்ள இந்தியர்கள் இந்தச் சாலையை, காராக் நெடுஞ்சாலை என்று அழைப்பது வழக்கம். அண்மையில் இந்தச் சாலைக்கு விரைவுச்சாலை என தரம் உயர்த்தப்பட்டது.
இந்த நெடுஞ்சாலை, தென்மேற்கில் இருக்கும் சிலாங்கூர் மாநிலத்தின் கோம்பாக் நகருக்கும்; வட மேற்கில் இருக்கும் பகாங் மாநிலத்தின் காராக் நகருக்கும் இடையே செல்கிறது.
முன்பு இந்தச் சாலை காராக் நகரத்திற்கும் குவாந்தான் நகரத்திற்கும் செல்வதற்கான ஒருவழி தலைநெடுஞ்சாலையாக (trunk road) இருந்தது. அதே வேளையில் மலேசிய கூட்டரசு சாலை 2-இன் ஒரு பகுதியாகவும் இருந்தது.
1997-ஆம் ஆண்டில், அந்தக் மலேசிய கூட்டரசு சாலை 2, மேம்படுத்தப் பட்டதும் கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலை என பெயர் மாற்றம் கண்டது.
விரைவுச்சாலை (ஆங்கிலம்: Expressway; மலாய்: Lebuhraya).
மலேசிய விரைவுச்சாலை (ஆங்கிலம்: Malaysian Expressway; மலாய்: Lebuhraya Malaysia).
நெடுஞ்சாலை (ஆங்கிலம்: Highway; மலாய்: Laluan).
மலேசியக் கூட்டரசு சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route; மலாய்: Laluan Persekutuan Malaysia).
இந்த நெடுஞ்சாலையைப் பற்றி சில பிரபலமான புராணக் கதைகளும்; நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. இந்தச் சாலையை "உலகின் பேய்கள் நிறைந்த நெடுஞ்சாலைகளில்" ஒன்றாக அறிவித்து இருக்கிறார்கள்.
இரவில் தாமதமாக வாகனம் ஓட்டும் பலர் இந்த சாலையில் விசித்திரமான உயிரினங்கள்; காணாமல் போன ஒரு பள்ளி மாணவன் மற்றும் பொந்தியானாக் பேய் (Pontianak) போன்றவற்றைப் பார்த்து இருப்பதாகவும் சொல்லப் படுகிறது. ஓட்டுநர் இல்லாத மஞ்சள் நிறக் காரையும் சிலர் பார்த்ததாகவும் சொல்லப் படுகிறது.[1]
1970-ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் கோலாலம்பூரில் உள்ள கோம்பாக் பகுதியில் இருந்து, பகாங், பெந்தோங் நகருக்குச் செல்ல எனும் குறுகலான மலேசியச் கூட்ட்ரசு சாலை 68 இருந்தது.
அதற்கு மாற்றாக மலேசிய அரசாங்கத்தால் கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலை உருவாக்கப்பட்டது. இந்த நெடுஞ்சாலை கட்டப்படும் போது கெந்திங் செம்பா (Genting Sempah) எனும் இடத்தில் 900 மீட்டர் சுரங்கப் பாதையும் உருவாக்கப்பட்டது.
அந்த கெந்திங் செம்பா சுரங்கப் பாதைதான் மலேசியாவின் முதலாவது நெடுஞ்சாலை சுரங்கப் பாதையாகும். கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலை, 1979-ஆம் ஆண்டில், அப்போதைய பொதுப்பணிகள் மற்றும் தொடர்பு அமைச்சர் டத்தோ அப்துல் கானி கிலோங் (Dato Abdul Ghani Gilong) என்பவரால் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இருப்பினும், அந்த நேரத்தில் ஒரு விவசாய நாடாக இருந்த மலேசியாவிற்கு, இந்த நெடுஞ்சாலையின் கட்டுமானச் செலவுகள் மிகவும் அதிகமானதாக இருந்தது.
எனவே, அனைத்துக் கட்டுமானப் பணிகளின் செல்வுகளை ஈடுகட்ட கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடிகளை அமைக்க அரசாங்கம் முடிவு செய்தது.
இதன் விளைவாக, கோம்பாக் மற்றும் பெந்தோங் ஆகிய இரண்டு இடங்களில் சுங்கச் சாவடிகள் கட்டப்பட்டன. அந்தச் சுங்கச்சாவடிகள், மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (Malaysian Highway Authority) கீழ் நிர்வகிக்கப் பட்டன.
28 ஜனவரி 1990 - கோம்பாக்கில் உள்ள கெந்திங் செம்பா சுரங்கப் பாதைக்கு அருகில் கிலோமீட்டர் 32.5-இல்; கூட்டரசு கலகப் பிரிவு காவல்துறை வாகனங்கள், ஒரு எண்ணெய் லாரி, ஒரு பயணிகள் பேருந்து மற்றும் 10 கார்கள் மோதிக் கொண்டதில் 11 கலகத் தடுப்புக் காவலர்கள் உட்பட 17 பேர் கொல்லப் பட்டனர்.
11 நவம்பர் 2015 - கனமழை காரணமாக, லெந்தாங் மற்றும் புக்கிட் திங்கி, இடையே விரைவுச்சாலையின் கிமீ 52.4-இல் நிலச்சரிவு ஏற்பட்டது. அதனால் அந்தப் பாதை போக்குவரத்துக்கு மூடப்பட்டது.
(15 அக்டோபர் 2015 முதல்)
வகுப்பு | வாகனங்களின் வகை | விகிதம் ரிங்கிட் (RM) |
---|---|---|
0 | மோட்டார் சைக்கிள்கள், மிதிவண்டிகள் அல்லது 2 அல்லது அதற்கும் குறைவான சக்கரங்களைக் கொண்ட வாகனங்கள் | இலவசம் |
1 | வாடகை வாகனங்கள் தவிர்த்து 2 அச்சுகள் மற்றும் 3 அல்லது 4 சக்கரங்கள் கொண்ட வாகனங்கள் | RM6.00 |
2 | பேருந்துகள் தவிர்த்து 2 அச்சுகள் மற்றும் 5 அல்லது 6 சக்கரங்கள் கொண்ட வாகனங்கள் | RM12.00 |
3 | 3 அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுகள் கொண்ட வாகனங்கள் | RM18.00 |
4 | வாடகை வாகனங்கள் | RM3.00 |
5 | பேருந்துகள் | RM5.00 |
வகுப்பு | வாகனங்களின் வகை | விகிதம் ரிங்கிட் (RM) |
---|---|---|
0 | மோட்டார் சைக்கிள்கள், மிதிவண்டிகள் அல்லது 2 அல்லது அதற்கும் குறைவான சக்கரங்களைக் கொண்ட வாகனங்கள் | இலவசம் |
1 | வாடகை வாகனங்கள் தவிர்த்து 2 அச்சுகள் மற்றும் 3 அல்லது 4 சக்கரங்கள் கொண்ட வாகனங்கள் | RM3.50 |
2 | பேருந்துகள் தவிர்த்து 2 அச்சுகள் மற்றும் 5 அல்லது 6 சக்கரங்கள் கொண்ட வாகனங்கள் | RM7.00 |
3 | 3 அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுகள் கொண்ட வாகனங்கள் | RM10.50 |
4 | வாடகை வாகனங்கள் | RM1.80 |
5 | பேருந்துகள் | RM3.00 |
மாநிலம் | மாவட்டம் | கி.மீ | வெளியேற்றம் | பெயர் | இலக்குகள் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
சிலாங்கூர் | கோம்பாக் மாவட்டம் | 18.0 | 801 | கோம்பாக் வடக்கு | கோலாலம்பூர் மத்திய ரிங் ரோடு 2 – பத்துமலை, கோலாலம்பூர், ஈப்போ, கெப்போங், உலு கிள்ளான், அம்பாங், செராஸ், சிரம்பான், ஜொகூர் பாரு, சா ஆலாம், கிள்ளான் | |
19.9 | T/P | கோம்பாக் சுங்கச் சாவடி | தொட்டு செல், வானலை அடையாள அட்டைகள் சூட்டிகை அட்டைகள் மட்டும் | |||
20.0 | L/B | கோம்பாக் L/B | கோம்பாக் - | கிழக்கு | ||
802 | கிழக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலை – காஜாங், உலு லங்காட், அம்பாங், உலு கிள்ளான் | எதிர்க்காலத் திட்டம் | ||||
L/B | BH எண்ணெய் நிலையம் | BH எண்ணெய் நிலையம் - | கிழக்கு | |||
L/B | கோம்பாக் L/B | மேற்கு | ||||
மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை அமலாக்க நிலையம் | கிழக்கு | |||||
BR | கோம்பாக் ஆற்றுப் பாலம் | |||||
கம்போங் உலு கோம்பாக் | ||||||
கம்போங் உலு கோம்பாக் ஓராங் அஸ்லி குடியிருப்பு | கம்போங் உலு கோம்பாக் ஓராங் அஸ்லி குடியிருப்பு | மேற்கில் இருந்து | ||||
L/B | லெமாங் விற்பனைக் கடைகள் | லெமாங் விற்பனைக் கடைகள் - | கிழக்கு | |||
BR | கெந்திங் செம்பா கடவை | பிரிவு சாலை | ||||
BR | கெந்திங் செம்பா கடவை | |||||
BR | கெந்திங் செம்பா கடவை | |||||
803A | கெந்திங் செம்பா I/C | கெந்திங்மலை நெடுஞ்சாலை – கெந்திங் மலை, கோதோங் ஜெயா, அமினுடின் பாக்கி கல்வியகம் | கோலாலம்பூர் நோக்கி | |||
பகாங் | பெந்தோங் | TN | கெந்திங் செம்பா சுரங்கப்பாதை | நீளம்: 900 மீ உயர்ந்தபட உயரம்: 4.75 மீ 570 மீ | ||
803 | கெந்திங் செம்பா சந்திப்பு (I/C) | ஜாலான் கோம்பாக் - பெந்தோங் – கெந்திங் செம்பா, கெந்திங் மலை, கோதோங் ஜெயா, அமினுடின் பாக்கி கல்வியகம் ஜண்டா பாயிக் | 561 மீ | |||
RSA | கெந்திங் செம்பா ஓய்வு வளாகம் (RSA) | கெந்திங் செம்பா ஓய்வு வளாகம் - பெட்ரோனாஸ் | மேற்கு நோக்கி | |||
803 | கெந்திங் செம்பா (I/C) | ஜாலான் கோம்பாக் - பெந்தோங் – கெந்திங் செம்பா, கெந்திங் மலை, கோதோங் ஜெயா, ஜண்டா பாயிக் | கிழக்கு நோக்கி 559 மீ | |||
BR | சுங்கை தாங்லிர் பாலம் | சாலைப் பிரிவு | ||||
V/P | கெந்திங் செம்பா (V/P) (L/B) | - Vista Point | மேற்கு நோக்கி சாலைப் பிரிவு | |||
BR | சுங்கை தாங்லிர் பாலம் | சாலைப் பிரிவு | ||||
43.0 | கம்போங் புக்கிட் திங்கி | ஜாலான் கோம்பாக் - பெந்தோங் – கம்போங் புக்கிட் திங்கி | ||||
BR | சுங்கை தாங்லிர் பாலம் | |||||
48.0 | 805 | புக்கிட் திங்கி (I/C) | பெர்ஜாயா மலை உல்லாச வாழ்விடம் (புக்கிட் திங்கி உல்லாச வாழ்விடம்), | |||
BR | சுங்கை பெனுஸ் பாலம் | |||||
L/B | லெந்தாங் (L/B) U-வளைவுகள் |
லெந்தாங் (L/B) - லெந்தாங் பொழுதுபோக்கு கானகம் U-வளைவு – கோலாலம்பூர் / குவாந்தான் |
இரு வழிகள் | |||
கம்போங் லெந்தாங் | ||||||
BR | சுங்கை கிசாய் பாலம் | |||||
BR | சுங்கை கெனுய் பாலம் | |||||
டுசுன் இயற்கை உல்லாச வாழ்விடம் | Dusun Eco Resort | கிழக்கு நோக்கி | ||||
L/B | பெட்ரோனாஸ் (L/B) | பெட்ரோனாஸ் (L/B) - பெட்ரோனாஸ் | கிழக்கு நோக்கி | |||
BR | சுங்கை பெர்திங் பண்டாக் பாலம் | |||||
BR | சுங்கை பெனுஸ் பாலம் | |||||
T/P | பெந்தோங் சுங்கைச் சாவடி | MyRFID Tag | Touch 'n Go, RFID, SmartTAG மட்டும் | |||
L/B | பெந்தோங் (L/B) | பெந்தோங் L/B - | மேற்கு நோக்கி | |||
808 | பெந்தோங் மேற்கு (I/C) | பெந்தோங், கெடாரி, ரவுப், கோலா லிப்பிஸ் | கிழக்கு நோக்கி |