நெகாரா அரங்கத்தின் வெளிப்புறக் காட்சி (2024) | |
முகவரி | ஆங் ஜெபாட் சாலை 50150 கோலாலம்பூர் மலேசியா |
---|---|
பொது போக்குவரத்து |
|
உரிமையாளர் | பிஎன்பி மெர்டேக்கா வென்ச்சர்ஸ் நிறுவனம் |
இருக்கை எண்ணிக்கை | 10,000 |
கட்டுமானம் | |
திறக்கப்பட்டது | ஏப்ரல் 19, 1962 |
சீரமைக்கப்பட்டது |
|
கட்டுமான செலவு | RM 34 மில்லியன் |
திட்ட மேலாளர் | இஸ்டான்லி எட்வர்ட் யூக்ஸ் |
Structural engineer |
|
General contractor |
|
கோலாலம்பூர் நெகாரா அரங்கம் (மலாய்; ஆங்கிலம்: Stadium Negara Kuala Lumpur) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரில் உள்ள ஓர் உள்விளையாட்டரங்கம் ஆகும்.
இந்த அரங்கம் கோலாலம்பூர் மாநகர மையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில், மெர்டேக்கா அரங்கம் (Stadium Merdeka) மற்றும் மெர்டேக்கா 118 கட்டிடம் (Merdeka 118); ஆகிய கட்டிடங்களுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது.
ஏப்ரல் 19, 1962 அன்று, இந்த கோலாலம்பூர் நெகாரா அரங்கம் மலேசிய அரசர் துவாங்கு சையத் புத்ரா ஜமாலுல்லைல் (Yang di-Pertuan Agong Tuanku Syed Putra Jamalullail) அவர்களால்அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. மூடிய அரங்கமாக விளங்கும் இந்த விளையாட்டரங்கம், மலேசிய நாட்டில் விளையாட்டு மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளை அடையாளப்படுத்தும் சின்னமாகத் திகழ்கின்றது.
இந்த அரங்கத்தின் கட்டுமானச் செலவு ரிங்கிட் RM 34 மில்லியன்; மேலும் இந்த அரங்கம் தென்கிழக்கு ஆசியாவில் சிறந்த உள்ளரங்கங்களில் ஒன்றாகக கருதப்படுகிறது.
அத்துடன், பொறியியல் துறையின் இணையற்ற எடுத்துக்காட்டாக அமைவதோடு அல்லாமல், மலேசிய நாட்டின் நவீன கட்டிடக்கலை வடிவமைப்பிற்கும் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.[1]
இந்த அரங்கம் 10,000 நிரந்தர இருக்கைகளைக் கொண்டது; மற்றும் முழுவதுமாக குளிரூட்டப்பட்டு உள்ளது. அத்துடன், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் கச்சேரிகள் போன்ற பல்வேறு வகையான நிகழ்வுகளை நடத்தும் திறனையும் கொண்டது.[2]
இந்த அரங்கம் 1982, 1985, 2015-ஆம் ஆண்டுகளில் மூன்று முறை புதுப்பிக்கப்பட்டது.
பிப்ரவரி 2003-இல், இந்த கோலாலம்பூர் தேசிய அரங்கம் தேசியப் பாரம்பரியக் கட்டிடமாக அறிவிக்கப்பட்டது.
கோலாலம்பூர் நெகாரா அரங்கத்தின் 2014-ஆம் ஆண்டு காட்சிப் படங்கள்: