மலேசிய கூட்டரசு சாலை 28 Malaysia Federal Route 28 Laluan Persekutuan Malaysia 28 | |
---|---|
கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2 Kuala Lumpur Middle Ring Road 2 Jalan Lingkaran Tengah 2 Kuala Lumpur (MRR2) | |
வழித்தடத் தகவல்கள் | |
AH141 (கிரீன்வூட்–வடக்கு கோம்பாக் மாற்றுச் சாலை) இன் பகுதி | |
நீளம்: | 65.0 km (40.4 mi) |
பயன்பாட்டு காலம்: | 1992 – |
வரலாறு: | கட்டுமானம் 2002 |
முக்கிய சந்திப்புகள் | |
வடமேற்கு முடிவு: | பண்டார் செரி டாமன்சாரா |
சுங்கை பூலோ நெடுஞ்சாலை B22 பத்துமலை சாலை B125 பத்துமலை பிங்கிரான் B31 அம்பாங் சாலை | |
தென்கிழக்கு முடிவு: | செரி பெட்டாலிங் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | கெப்போங்; பத்துமலை; கோம்பாக்; கிள்ளான் கேட்ஸ்; தாமான் மெலவாத்தி; உலு கிள்ளான்; அம்பாங் ஜெயா; பாண்டான் இண்டா; செராஸ்; பண்டார் துன் ரசாக்; பண்டார் தாசேக் செலாத்தான்; சுங்கை பீசி |
நெடுஞ்சாலை அமைப்பு | |
கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2 அல்லது மலேசிய கூட்டரசு சாலை 28 (ஆங்கிலம்: Malaysia Federal Route 28; அல்லது Kuala Lumpur Middle Ring Road 2 (MRR2); மலாய்: Laluan Persekutuan Malaysia 28 அல்லது Jalan Lingkaran Tengah 2 Kuala Lumpur) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலம்; மற்றும் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசம் ஆகிய இரு மாநிலப் பகுதிகளின் எல்லைகளுக்கு அருகில் உள்ள சுற்றுப்புறங்களை இணைக்க மலேசிய பொதுப்பணித் துறை (ஜேகேஆர் - JKR) கட்டிய ஒரு வட்டச் சாலை ஆகும்.[1]
65.0 கிமீ (40.4 மைல்) நீளம் கொண்ட இந்த வட்டச்சாலையை, மலேசிய கூட்டரசு சாலை 28; டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை; சா ஆலாம் விரைவுச்சாலை ஆகிய மூன்று சாலைகள் ஒன்று சேர்ந்து உருவாக்குகின்றன.
அந்த மூன்று சாலைகளில் மிக முக்கியப் பங்கு வகிப்பது மலேசிய கூட்டரசு சாலை 28 ஆகும். ஏனென்னில், கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2-இன் மூன்றில் இரண்டு பாகம் மலேசிய கூட்டரசு சாலை 28-இன் பகுதியாகும்.
கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2-இன் 0 கிலோமீட்டர் என்பது செரி டாமன்சாரா மாற்றுச் சாலையில் அமைந்துள்ளது. கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2-இன் முதல் கிலோமீட்டர், மலேசிய கூட்டரசு சாலை 54, டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை (Damansara–Puchong Expressway) மற்றும் டூத்தா–உலு கிள்ளான் விரைவுச்சாலை (Duta–Ulu Klang Expressway) ஆகிய விரைவுச் சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
கெப்போங் மேம்பாலம் (Kepong Flyover) கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2-ஐ, மலேசிய கூட்டரசு சாலை 54-இல் இருந்து திசை திருப்புகிறது. கோம்பாக்கில், கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2, மீண்டும் மலேசிய கூட்டரசு சாலை 2-யைச் சந்தித்து, மேல் அடுக்குச் சாலை வழியாகக் கடந்து செல்கிறது.
கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2, மலேசிய கூட்டரசு சாலை 28; ஆகிய இரு சாலைகளும், செரி பெட்டாலிங் மாற்றுச் சாலையில் (Sri Petaling Interchange) முடிவடைகின்றன. அங்கு அவை சா ஆலாம் விரைவுச்சாலையாக (Shah Alam Expressway) மாற்றம் காண்கின்றன.
கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2-இன் கட்டுமானம் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. அந்தக் கட்டங்கள்:
கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2-இன் கட்டுமானம் RM 880 மில்லியன் செலவில், 12 தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டது. இந்தத் திட்டம் மலேசிய பொதுப்பணித் துறை மற்றும் பூமி நெடுஞ்சாலை நிறுவனம் (Bumi Hiway Sdn Bhd) ஆகிய நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டது.
கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2-இன் கட்டுமானமானது; பின்வரும் பல முக்கியச் சாலைகளைக் கையகப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது:[2]
நெடுஞ்சாலை சின்னம் |
சாலைகள் | பிரிவுகள் |
---|---|---|
சுங்கை பூலோ நெடுஞ்சாலை | பண்டார் செரி டாமன்சாரா–கெப்போங் | |
B21 | கெப்போங்–செலாயாங் நெடுஞ்சாலை | கெப்போங்–தாமான் டாயா |
B22 | பத்து மலை சாலை | பத்து மலை–தாமான் கிரீன்வூட் |
கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலை | தாமான் கிரீன்வூட்–வடக்கு கோம்பாக் | |
தாமான் மெலாத்தி சாலை | தாமான் மெலாத்தி–தாமான் மெலாவத்தி | |
B23 | உலு கிள்ளான் சாலை | தாமான் மெலாவத்தி–அம்பாங் ஜெயா |
பாண்டான் உத்தாமா சாலை | பாண்டான் ஜெயா–பாண்டான் இண்டா | |
செராஸ் பாரு சாலை | குவாரி சாலை–செராஸ் வட்டச்சுற்று வழி | |
மீடா உத்தாமா சாலை | செராஸ் வட்டச்சுற்று வழி–தாமான் மீடா | |
பண்டார் தாசேக் செலாத்தான் சாலை | பண்டார் மேவா–பண்டார் தாசேக் செலாத்தான் |