கோலாலம்பூர் மாநகர மையம்

கோலாலம்பூர் மாநகர மையம்
Kuala Lumpur City Centre
Pusat Bandar Kuala Lumpur
KLCC
கோலாலம்பூர் மாநகர மையம் (2020)
Map
மாற்றுப் பெயர்கள்KL City Centre
பொதுவான தகவல்கள்
வகைமைய வணிகப் பகுதி
இடம்கோலாலம்பூர், மலேசியா
ஆள்கூற்று3°09′25″N 101°42′53″E / 3.15687°N 101.71473°E / 3.15687; 101.71473
அடிக்கல் நாட்டுதல்மார்ச் 1993
கட்டுமான ஆரம்பம்1 சனவரி 1987
நிறைவுற்றது1 சனவரி 1990
துவக்கம்31 ஆகத்து 1999; 25 ஆண்டுகள் முன்னர் (1999-08-31)
புதுப்பித்தல்13 சனவரி 1991
உரிமையாளர்கேஎல்சிசி சொத்து நிறுவனம் (KLCCP)
வலைதளம்
klcciconic.com.my

கோலாலம்பூர் மாநகர மையம் அல்லது கேஎல்சிசி (மலாய்: Pusat Bandar Kuala Lumpur; ஆங்கிலம்: Kuala Lumpur City Centre; (KLCC) சீனம்:吉隆坡城中城) என்பது மலேசியா, கோலாலம்பூரில் உள்ள கேஎல்சிசி வணிகப் பூங்காவைச் சுற்றியுள்ள பல்நோக்கு வளர்ச்சிப் பகுதி ஆகும்.[1]

கேஎல்சிசி பல்நோக்கு வளர்ச்சிப் பகுதிக்கு அருகிலுள்ள கட்டமைப்புகளிலும் கேஎல்சிசி எனும் சொல் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. 100 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு நகரத்திற்குள் ஒரு நகரமாக இந்தப் பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொது

[தொகு]

உலகின் மிக உயரமான பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள்; உலகின் நான்காவது உயரமான தங்கும் விடுதி; ஒரு வணிக வளாகம்; பல்வேறான அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் பல தங்கும் விடுதிகள் இந்த மையத்தில் உள்ளன.[2]

இப்பகுதியில் ஒரு பொது பூங்கா மற்றும் ஒரு பெரிய பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது; மற்றும் இவை பொதுமக்கள் அனைவருக்கும் திறக்கப்பட்டுள்ளது.

கேஎல்சிசி குளிர்ச்சியகம்

[தொகு]

கேஎல்சிசி மையப் பகுதிக்குள் உள்ள அனைத்துப் பகுதிகளும் போது குளிரூட்டல் சாதனங்கள் மூலம் குளிர்விக்கப்படுகின்றன. குளிரூட்டல் சாதனங்கள் கொண்ட மையத்திற்கு கேஎல்சிசி குளிர்ச்சியகம் (District Cooling) என பெயர் வழங்கப்பட்டு உள்ளது. குளிர்ச்சியகம் லாட் 40 (Lot 40) எனும் வணிக மைத்தில் அமைந்துள்ளது. இது எரிவாயு மூலம் இயங்கும் 30,000 டன் விசையாழியால் குளிர்ந்த நீர்க்காற்றை வழங்குகிறது.

பெட்ரோனாஸ் சொத்து முதலீட்டுப் பிரிவான கேஎல்சிசி குழும நிறுவனங்களின் கேஎல்சிசி சொத்து நிறுவனத்தின் (KLCC Property Holdings Berhad ) மூலம் முழு வளாகமும் உருவாக்கப்பட்டது.[3]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Žaknić, Ivan; Smith, Matthew; Rice, Doleres B. (1998). 100 of the World's Tallest Buildings. Mulgrave, Victoria: Images Publishing. p. 208. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781875498321.
  2. "KLCC Master Plan". KLCC Properties. KLCC Properties. Archived from the original on 2013-02-21.
  3. "The neighborhood known as Kuala Lumpur City Centre (KLCC is quite literally the heart of the Malaysian capital and home to some of the country's most recognizable landmarks, including the Petronas Twin Towers". www.viator.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 3 November 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]