கோலாலம்பூர் மோனோரெயில் KL Monorail Line ![]() | |
---|---|
![]() கோலாலம்பூர் மோனோரெயில் | |
கண்ணோட்டம் | |
நிலை | சேவையில் |
உரிமையாளர் | ![]() |
வழித்தட எண் | ![]() |
வட்டாரம் | கோலாலம்பூர் |
முனையங்கள் |
|
நிலையங்கள் | 11 |
இணையதளம் | myrapid |
சேவை | |
வகை | ஒற்றைத் தண்டூர்தி |
அமைப்பு | ![]() |
சேவைகள் | கோலாலம்பூர் சென்ட்ரல் மோனோரெயில்-தித்திவங்சா |
செய்குநர்(கள்) | ![]() |
பணிமனை(கள்) | பிரிக்பீல்ட்ஸ் |
சுழலிருப்பு | Scomi SUTRA (4-தொடருந்துகள்) |
தினசரி பயணிப்போர் | 52,448 (Q2 2024)[1] 71,623 (Q4 2014; Highest)[2] |
பயணிப்போர் | 18.1 மில்லியன் (2023) 25.437 மில்லியன் (2013; மிக யர்வு)[3][2] |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 31 ஆகத்து 2003 |
தொழில்நுட்பம் | |
வழித்தட நீளம் | 8.6 km (5.3 mi) |
குணம் | உயர்த்தப்பட்ட தடம் |
மின்மயமாக்கல் | 750 V DC |
இயக்க வேகம் | 60 km/h (37 mph) |
கோலாலம்பூர் மோனோரெயில் அல்லது கோலாலம்பூர் ஒற்றைத் தண்டூர்தி (ஆங்கிலம்: KL Monorail Line; மலாய்: Monorel KL; சீனம்: 吉隆坡單軌列車) என்பது மலேசியா கோலாலம்பூர் மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஓர் ஒற்றைத் தண்டூர்திச் சேவை ஆகும்.
இதுவே மலேசியாவின் ஒரே ஒற்றைத் தண்டூர்திச் செயல்பாட்டு அமைப்பு முறை என அறியப்படுகிறது. மேலும் இந்த அமைப்பு முறைமை, முழுத் தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும்.
பிரசரானா மலேசியாவின் துணை நிறுவனமான ரேபிட் ரெயில் நிறுவனத்தின் ரேபிட் கேஎல் அமைப்பின் ஒரு பகுதியாக கோலாலம்பூர் மோனோரெயில் இயக்கப்படுகிறது.
கோலாலம்பூர் மோனோரெயில் அமைப்பு, மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகச் செயல்படுகிறது.
பன்னாட்டுப் போக்குவரத்து வரைபடங்களில் இந்த வழித்தடத்திற்கு எனும் குறியீடு வெளிர் பச்சை நிறத்தில் வழங்கப்பட்டு உள்ளது.
பரபரப்பான நெரிசல் வேளைகளில் அதிக எண்ணிக்கையிலான பயணிகளைக் கோலாலம்பூர் மாநகர் மையப் பகுதிகளுக்குள் கொண்டு செல்வதிலும்; மற்றும் வெளியேற்றுவதிலும் இடர்பாடுகள் ஏற்படுவதாக அறியப்படுகிறது.
முறையான உள்கட்டமைப்புத் திட்டமிடல் இல்லாததாலும்; போதுமான அளவிற்கு தண்டூர்தி வண்டிகள் இல்லாததாலும்; அந்த இடர்பாடுகள் ஏற்படுவதாகவும் அறியப்படுகிறது. இந்தப் பிரச்சினை குறித்து மலேசிய அமைச்சரவையில் கருத்துப் பரிமாற்றங்கள் செய்யப்பட்டு சீரமைப்புச் செய்யப்பட்டு வருவதாகவும் அறியப்படுகிறது.
கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் கீழ் உள்ள இயக்கங்களில் இந்த கோலாலம்பூர் மோனோரெயில் மிகவும் திருப்தியற்ற தொடருந்துப் பாதையாகக் குறிப்பிடப்படுகிறது.[4][5]
இந்த நகர்ப்புற மோனோரயில் வழித்தடம் 31 ஆகஸ்டு 2003 அன்று திறக்கப்பட்டது. 8.6 கிமீ (5.3 மைல்) நீளம் கொண்ட இந்த வழித்தடத்தில் 11 நிலையங்கள் உள்ளன; மேலும் இரண்டு உயரமான மேம்பாலத் தடங்களில் இயங்குகின்றன.[6]
இந்த வழித்தடம் தெற்கில் உள்ள கோலாலம்பூர் சென்ட்ரல் போக்குவரத்து மையத்தையும்; வடக்கில் உள்ள தித்திவங்சா நிலையத்தையும்; கோலாலம்பூர் தங்க முக்கோணத்தையும் ஒன்றாக இணைக்கின்றது. கோலாலம்பூர் தங்க முக்கோணம் (KL Golden Triangle) என்று அறியப்படும் கோலாலம்பூர் மாநகர் மையப்பகுதி; புக்கிட் பிந்தாங், இம்பி சாலை, புக்கிட் பிந்தாங் சாலை, சுல்தான் இசுமாயில் சாலை, ராஜா சூலான் சாலை ஆகிய வணிகப் பகுதிகளால் சூழப்பட்டுள்ளது.[7]
சூன் 1989-இல் நடந்த மலேசிய அமைச்சரவைக் கூட்டத்தில் மலேசிய அரசாங்கம் இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கியது. அதன் பிறகு சனவரி 1990-இல் கோலாலம்பூர் மாநகராட்சியால் மோனோரெயில் திட்டம் பற்றி அறிவிக்கப்பட்டது. அதன் அப்போதைய கட்டுமானச் செலவு RM 143 ரிங்கிட் மில்லியனாக மதிப்பிடப்பட்டது.
இந்த வழித்தட அமைப்பு கோலாலம்பூரின் பரபரப்பான வணிக மையத்தின் வழியாக, 20 நிமிட சுழற்சியில், ஒரு நாளைக்கு 34,000 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இரண்டு கட்டங்களில் கட்டுவதாகத் திட்டமிடப்பட்டது: முதலில், 16 நிலையங்களை உள்ளடக்கிய 7.7 கிமீ (4.8 மைல்) நீளம் கொண்ட முதல் கட்டம்; அடுத்த இரண்டாவது கட்டத்தில், 6.5 கிமீ (4.0 மைல்) சுற்றுப் பாதை சேர்க்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.
சூன் 1990-இல் கட்டுமானப் பணிகளைத் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் தொடக்கப் பணிகளுக்காக வழங்கப்பட்ட ஒப்பந்த அறிவிப்புகளில், கட்டுமானச் செலவு மிக அதிகமாக இருப்பதாக கோலாலம்பூர் மாநகராட்சி மேயர் கண்டனம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து தொடக்கப் பணிகள் மே 1991 வரையில் ஒத்திவைக்கப்பட்டன.[8][9]
சப்பானிய இத்தாச்சி (Hitachi, Ltd) நிறுவனத்தின் மூலம் கட்டுமானம் மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால் 1997 ஆசிய நிதி நெருக்கடியினால் திசம்பர் 1997-இல் கட்டுமானம் நிறுத்தப்பட்டது. சூலை 1998-இல் பணி மீண்டும் தொடங்கப்பட்டது. உள்ளூர் நிறுவனமான எம் திடான்ஸ் ஓல்டிங்ஸ் (MTrans Holdings) எனும் நிறுவனம் பொறுப்பேற்றது. இறுதியில் இந்த வழித்தடம் RM 1.18 பில்லியன் ரிங்கிட் செலவில் கட்டி முடிக்கப்பட்டு 2003-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.
கோலாலம்பூர் மோனோரெயில் திட்டத்தை நடத்த கேஎல் மோனோரெயில் நிறுவனம் (KL Monorail System Sdn Bhd) (KLMS) முதலில் பொறுப்பேற்றது. மலேசிய அரசாங்கம் அந்த நிறுவனத்திற்கு 40 ஆண்டுகாலச் சலுகையை வழங்கியது. எனினும், நிதி நெருக்கடியினால் அந்த நிறுவனத்தால் கோலாலம்பூர் மோனோரெயில் திட்டத்தை முறையாக நடத்த இயலவிவில்லை.[10]
பற்பல நிதி நெருக்கடிகள்; மற்றும் கடன் கொடுத்த வங்கிகளின் நெருக்குதல்கள் போன்றவற்றினால் கேஎல் மோனோரெயில் நிறுவனம் செயல்பட முடியாமல் தவித்தது. இந்தக் கட்டத்தில் மலேசிய அரசாங்கம் தலையிட்டது. அதன் பின்னர் கோலாலம்பூர் மோனோரெயில் இயக்கத்தைச் செயல்படுத்த அரசு சார்ந்த நிறுவனமான பிரசரானா மலேசியா நிறுவனம் பொறுப்பேற்றது.[11][12]
கோலாலம்பூர் மோனோரெயில் (KL Monorail Line) வழித்தடத்தில் 11 நிலையங்கள் உள்ளன. அந்த நிலையங்களின் விவரங்கள்:
குறியீடு | தோற்றம் | பெயர் | இணைப்புகள் |
MR1 | ![]() |
![]() |
KA01 KS01 பத்துமலை-புலாவ் செபாங்; தஞ்சோங் மாலிம்–கிள்ளான்; கேஎல் சென்ட்ரல்-இஸ்கைபார்க்; KTM ETS KJ15 கிளானா ஜெயா; KE1 KT1 கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து; கேஎல்ஐஏ போக்குவரத்து; KG15 மியூசியம் நெகாரா எம்ஆர்டி நிலையம் |
MR2 | ![]() |
![]() |
பிரிக்பீல்ட்ஸ் |
MR3 | ![]() |
![]() |
மெர்டேக்கா 118 |
MR4 | ![]() |
![]() |
AG9 SP9 அம்பாங் செரி பெட்டாலிங் |
MR5 | ![]() |
![]() |
- |
MR6 | ![]() |
![]() |
AG9 SP9 அம்பாங் செரி பெட்டாலிங்; KJ10 கேஎல்சிசி எல்ஆர்டி கிளானா ஜெயா |
MR7 | ![]() |
![]() |
KJ10 கேஎல்சிசி எல்ஆர்டி கிளானா ஜெயா |
MR8 | ![]() |
![]() |
KJ12 டாங் வாங்கி எல்ஆர்டி கிளானா ஜெயா |
MR9 | ![]() |
![]() |
AG5 SP5 சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி அம்பாங் செரி பெட்டாலிங் |
MR10 | ![]() |
![]() |
கோலாலம்பூர் மருத்துவமனை |
MR11 | ![]() |
![]() |
AG3 SP3 PY17 அம்பாங் செரி பெட்டாலிங் புத்ராஜெயா; CC08 எம்ஆர்டி சுற்று வழித்தடம் |
29 சூலை 2009 அன்று, மோனோரெயில் 100 மில்லியன் பயணிகளை எட்டியதாக அறியப்படுகிறது.[13]
கோலாலம்பூர் மோனோரெயில் பயணிகள்[14] | ||||
---|---|---|---|---|
ஆண்டு | காலாண்டுப் புள்ளி | பயணிகள் | ஆண்டுப் புள்ளி | குறிப்பு |
2024 | Q1 | 4,890,264 | 14,675,762 | |
Q2 | 4,772,775 | |||
Q3 | 5,012,723 | |||
Q4 | 5,356,630 | |||
2023 | Q1 | 4,099,687 | 18,107,573 | |
Q2 | 4,271,287 | |||
Q3 | 4,628,078 | |||
Q4 | 5,108,521 | |||
2022 | Q1 | 2,431,760 | 11,496,524 | |
Q2 | 2,434,132 | |||
Q3 | 3,125,274 | |||
Q4 | 3,505,358 | |||
2021 | Q1 | 1,167,491 | 4,226,329 | |
Q2 | 968,990 | |||
Q3 | 591,448 | |||
Q4 | 1,498,400 | |||
2020 | Q1 | 2,928,823 | 7,143,534 | |
Q2 | 774,603 | |||
Q3 | 2,021,544 | |||
Q4 | 1,418,564 | |||
2019 | 12,573,738 | |||
2018 | 12,594,377 | |||
2017 | 16,841,630 | |||
2016 | 24,200,299 | |||
2015 | 25,067,866 | |||
2014 | 24,303,465 | |||
2013 | 25,437,621 | |||
2012 | 24,435,931 | |||
2011 | 24,200,299 | |||
2010 | 22,108,308 | |||
2009 | 21,021,390 | |||
2008 | 21,765,233 | |||
2007 | 20,142,772 | |||
2006 | 17,370,337 | |||
2005 | 14,482,575 | |||
2004 | 10,956,675 | |||
2003 | 2,917,065 | செப்டம்பர்-திசம்பர் 2003 |