தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | கோலின் கௌட்ரி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 379) | நவம்பர் 26 1954 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | பிப்ரவரி 13 1975 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்இன்ஃபோ, டிசம்பர் 4 2000 |
மைக்கேல் காலின் கௌட்ரி (Michael Colin Cowdrey )பிறப்பு: திசம்பர் 24, 1932, இறப்பு: திசம்பர் 4, 2000) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 114 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 692 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 87 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1954 - 1975 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
1957 ஆம் ஆண்டில் எட்க்பாஸ்டனில் நடந்த முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக பீட்டர் மேவுடன் இணைந்து 511 நிமிடங்களில் 411 ஓட்டங்கள் சேர்த்தார். அந்த நேரத்தில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இது மூன்றாவது அதிக பட்ச இணை ஓட்டமாகக் கருதப்பட்டது.இதன்மூலம் இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் நான்காவது இணைக்கு எடுத்த அதிகபட்ச ஓட்டம் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக எடுக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டம் ஆகிய சாதனைகளைப் படைத்தனர்.[1] 1962-63ல் ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 307 ஓட்டங்கள் எடுத்தார், இதன்மூலம் அயல்நாடுகளில் மெரிலபோன் துடுப்பாட்ட சங்கத்தினை சேர்ந்த ஒருவரின் அதிகபட்ச ஓட்டம், மேலும் ஆத்திரேலியாவில் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஓட்டம் ஆகிய சாதனைகளைப் படைத்தார்.
இவருக்கு 1972 ல், வீரத்திருத்தகை பட்டமும் , 1997 ஆம் ஆண்டில் மற்றும் இவரின் இறப்பிற்குப் பிறகு ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமாகவும் அறிவிக்கப்பட்டார். 2009 ஆம் ஆண்டில் [2] சர் ஃபிராங்க் வொரெல், லார்ட் கான்ஸ்டன்டைன் மற்றும் பாபி மூர் ஆகியோருக்கு அடுத்ததாக வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தினால் கௌரவிக்கப்பட்ட நான்காவது (இதுவரை கடைசி) விளையாட்டு வீரர் இவர் ஆவார். இவரது நினைவாக மேரிலேபோன் துடுப்பாட்ட சங்கத்தில் (எம்.சி.சி) ஸ்பிரிட் ஆஃப் கவுட்ரி கிரிக்கெட் எனும் இடம் திறக்கப்பட்டது.
கவுட்ரியின் தந்தை, எர்னஸ்ட் ஆர்தர் கவுட்ரி, சர்ரே கவுண்டி துடுப்பாட்ட சங்கத்தில் இரண்டாம் லெவன் மற்றும் மாவட்ட அளவில் பெர்க்ஷயர் கவுண்டி துடுப்பாட்ட சங்கம் ஆகியவற்றிற்காக விளையாடினார். ஆனால் முதல் தர துடுப்பாட்டத்தில் நுழைவதற்கான திறமை இல்லாததால் இவரது தந்தை இவரை ஒரு வங்கியில் சேரச் செய்தார். ஏர்னஸ்ட் கவுட்ரி கல்கத்தாவில் பிறந்தார், ஒரு தேயிலைத் தோட்டத்தை நடத்துவதற்காக இந்தியாவுக்குச் சென்றார். அப்போது 1926-27 எம்.சி.சி அணி சார்பாக மெட்ராஸ் ஐரோப்பியர்கள் லெவன் அணிக்கு எதிரான போட்டியில் இவர் விளையாடினார், அந்தப் போடியில் 48 ஓட்டங்களுடன் அதிக அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பெற்றார்[3] இவரது தாயார், மோலி கவுட்ரி (நீ டெய்லர்), டென்னிஸ் மற்றும் ஹாக்கி போன்றவற்றினை விளையாடினார்.[4]
மைக்கேல் கௌட்ரி, உதகமண்டலம், சென்னை மாகாணத்தில் உள்ள இவரது தந்தையின் தேயிலைத் தோட்டத்தில் பிறந்தார். ஆனால் இவருடைய பிறப்பிடம் 100 மைல் தூரத்தில் உள்ள பெங்களூர் என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.[5] குழந்தையாக இருந்தபோது பாரம்பரியமான மேரிலேபோன் துடுப்பாட்ட சங்கத்தில் சேர இவரது தந்தை விண்ணப்பம் செய்தார். இவரது தந்தையும் ஊழியர்களும் இவர் நடக்கக் கற்றுக் கொண்டதும் துடுப்பாட்ட கற்றுக் கொடுத்தனர்.[6]
கவுட்ரிக்கு ஐந்து வயதாக இருந்தபோது, இவர் இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 1938-45ல் சுட்டனில் உள்ள ஹோம்ஃபீல்ட் தயாரிப்பு பள்ளியில் பயின்றார். கவுட்ரி பள்ளிக்காக விளையாடிய தனது முதல் ஆட்டத்தில் நூறு ஓட்டங்கள் அடித்தார், ஆனால் ஒரு மறுபரிசீலனையால் அதை 93 ஆக மாற்றியது . ஜாக் ஹோப்ஸ் இவருக்கு ஒரு கடிதத்தையும் ஒரு துடுப்பாட்ட மட்டையையும் அனுப்பினார். இவரது பெற்றோர் 1938 ஆம் ஆண்டில் இந்தியாவுக்குத் திரும்பினர், இரண்டாம் உலகப் போரின் காரணமாக இவர்கள் 1945 ஆம் ஆண்டில் மீண்டும் பிரிட்டம் வந்தனர்