கோல் அணை | |
---|---|
அதிகாரபூர்வ பெயர் | கோலணை நீர்மின் உற்பத்தித் திட்டம் |
நாடு | இந்தியா |
அமைவிடம் | பிலாஸ்பூர் மாவட்டம் (இமாசலப் பிரதேசம்) மற்றும் மண்டி மாவட்டம் |
புவியியல் ஆள்கூற்று | 31°22′59″N 76°52′16″E / 31.38306°N 76.87111°E |
நிலை | செயல்பாட்டில் உள்ளது |
கட்டத் தொடங்கியது | 2000 |
திறந்தது | 2015 |
உரிமையாளர்(கள்) | தேசிய அனல் மின் நிறுவனம் |
அணையும் வழிகாலும் | |
வகை | கட்டுக்கரை, பாறைகள் கொண்டது |
உயரம் (அடித்தளம்) | 167 m (548 அடி) |
உயரம் (தல்வேக்) | 153 m (502 அடி) |
நீளம் | 474 m (1,555 அடி) |
உயரம் (உச்சி) | 648 m (2,126 அடி) |
அகலம் (உச்சி) | 14 m (46 அடி) |
கொள் அளவு | 12,000,000 m3 (15,695,407 cu yd) |
வழிகால் வகை | ஆறு மதகுகள் |
வழிகால் அளவு | 16,500 m3/s (582,692 cu ft/s) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 560,000,000 m3 (453,999 acre⋅ft)[1] |
அதிகபட்சம் நீளம் | 40 km (25 mi) |
இயல்பான ஏற்றம் | 642 m (2,106 அடி)[2] |
மின் நிலையம் | |
பணியமர்த்தம் | 2015[3] |
ஹைட்ராலிக் ஹெட் | 144 m (472 அடி) (static) |
சுழலிகள் | 4 x 200 வாட்டு (அலகு) Francis-type |
நிறுவப்பட்ட திறன் | 800 மெகாவாட் |
கோல் அணை அல்லது கோலணை நீர்மின் உற்பத்தித் திட்டம் (ஆங்கில மொழி: KolDam) என்பது சத்லஜ் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கட்டுக்கரை அணையாகும். இது இமாச்சல் பிரதேச பிலாஸ்பூர் சண்டிகார்-மணாலி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து (என்எச்-1) 18 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. நீர்மின் உற்பத்திக்காக தேசிய அனல் மின் நிறுவனத்தால் கட்டப்பட்டது.[4]
2000 ஜூன் 5 ஆம் நாள் அப்போதைய இந்திய பிரதமர் அடல் பிகாரி வாச்பாய் அடிக்கல் நாட்டினார். 2004 ஜனவரி நான்காம் நாள் கட்டுமானங்கள் தொடங்கின. தேசிய அனல் மின் நிறுவனத்தால் (என்.டி.பி.சி.) கட்டப்பட்ட முதல் அணை இதுவாகும்.[2][5] காடு இழப்பு மற்றும் மறுகுடிபெயர்வு காரணங்களால் இத்திட்டம் தாமதமாகியது. மாற்று கால்வாய்களின் சிக்கல்களால் 2013 டிசம்பரில் இதன் நீர் தேக்கு முயற்சிகள் தோல்வியடைந்தன. தொடர்ந்து நான்காவது முயற்சியில் 2014 மார்ச் 18 இல் வெற்றிகரமாகக் கால்வாய்களைத் தடுத்து நீர் தேக்கப்பட்டது.[6] 2014 ஏப்ரலில் ஏற்பட்ட நீர்க்கசிவால் மீண்டும் நீரைத் தேக்கமுடியாமல் போனது.[7] பின்னர் 2014 நவம்பர் 3 தொடங்கி, 2015 ஜனவரி 3 வரை சீரமைப்புப் பணி நடைபெற்று, சரி செய்யப்பட்டது. கால்வாய்களில் சிறிய கசிவு இருந்தாலும் அதிகாரிகளின் உத்திரவாதத்தில் ஏப்ரலில் நீர்மின் நிலையம் செயல்படத் தொடங்கியது.[8] 2009 இல் மின்னாக்கி இயங்கும் வகையில் திட்டமிட்டிருந்தாலும் 2015 இல் தான் செயல்படத் தொடங்கியது.[3][9][10] இதன் நீர்த் தேக்கம் உயரம் 642 அடி ஆகும்.
அலகுக்கு 200 மெகாவாட் வீதம் நான்கு அலகுகளில் மொத்தம் 800 மெகாவாட் கொள்ளளவு கொண்டது. முதல் 200 மெகாவாட் பிரான்சிஸ் டர்பின் மின்னாக்கி 2015 மார்ச் 30 ஆம் நாள் செயல்படத் தொடங்கியது.[11][12] இந்த அணையினால் டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர் மற்றும் சண்டிகார் பகுதிகள் பலனடைகின்றன. ஹிமாச்சல் பிரதேசத்தின் 28% மின்சாரப் பயன்பாடு இதன் மூலமே கிடைக்கிறது.[5] 2019 ஜனவரியில் இவ்வணையில் கூடுதலாகப் பதினைந்து மேகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் விதத்தில் மிதக்கும் சூரிய மின்தகடுகள் பதிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன.[13]
அலகு எண் | கொள்ளளவு (வாட்டு (அலகு)) | திறக்கப்பட்ட ஆண்டு | நிலை |
---|---|---|---|
1 | 200 | 31 மார்ச் 2015 | செயல்படுகிறது[14] |
2 | 200 | 30 மார்ச் 2015 | செயல்படுகிறது |
3 | 200 | 10 ஏப்ரல் 2015 | செயல்படுகிறது |
4 | 200 | 12 ஜூன் 2015 | செயல்படுகிறது |
மொத்தம் | 800 |
பாறைகள் மற்றும் பசுமை சூழ்ந்த அணையாக இருப்பதால் இது சுற்றுலாத் தலமாக உள்ளது. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக, மாநில சுற்றுலாத் துறையினர் தட்டபணி முதல் கோல் அணை வரை நீர்வழிப் போக்குவரத்தை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.[15] மேலும் ஏரியையும், ஆற்றையும் சுத்தமாக வைத்துக் கொள்ள முயல்கின்றனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 2005 இன் படி குறைந்தது 15% நீர் நீர்வாழ் உயிரினங்களின் நலனுக்காக வெளியேற்றப்பட வேண்டும். இதை மீறியதாக 2018 ஆண்டுவாக்கில் இதனை நிர்வகிக்கும் என்.டி.பி.சி.க்கு சுற்றறிக்கையினை ஹிமாச்சல் பிரதேச மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பியது.[16] வறட்சி காரணமாக வெளியேற்றும் நீர் குறைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை அணையின் தரப்பினர் மறுத்துள்ளனர். அடுத்த ஆண்டே கனமழை பொழிந்தது அதன் காரணமாக 2019 ஆகஸ்ட் மாதத்தில் அணை நிறைந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது.[17]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)