கோல்ஹாப்பூர் இராச்சியம் கோல்ஹாப்பூர் அரசு | ||||||
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | ||||||
| ||||||
| ||||||
![]() | ||||||
வரலாறு | ||||||
• | நிறுவப்பட்டது | 1710 | ||||
• | கலைக்கப்பட்டது | 1948 | ||||
பரப்பு | ||||||
• | 1901 | 8,332 km2 (3,217 sq mi) | ||||
Population | ||||||
• | 1901 | 9,10,011 | ||||
மக்கள்தொகை அடர்த்தி | 109.2 /km2 (282.9 /sq mi) | |||||
தற்காலத்தில் அங்கம் | கோல்ஹாப்பூர் மாவட்டம், மகாராட்டிரா, இந்தியா | |||||
![]() |
கோல்ஹாப்பூர் இராச்சியம் (Kolhapur State or Kolhapur Maratha Kingdom) (1710–1948) சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றல்களான போன்சலே வம்சத்தினர் 1710 முதல் 1948 முடிய ஆண்ட நாடாகும். தற்கால கோலாப்பூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்ட இந்நாட்டின் தலைநகரம் கோலாப்பூர் நகரம் ஆகும்.
1901ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, 8,200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கோலாப்பூர் இராச்சியத்தின் மொத்த மக்கள தொகை 9,10,011 ஆகும். மொத்த மக்கள் தொகையில், கோலாப்பூர் நகரத்தில் மட்டும் 54,373 மக்கள் வாழ்ந்தனர். இந்த இராச்சியத்தின் ஆண்டு மொத்த வருவாய் 300,000 பிரித்தானிய பவுண்டு ஆகும். [1]
கோல்ஹாப்பூர் இராச்சியத்தின் மராத்திய போன்சலே வம்சத்தவர்கள் சதாரா அரசு மற்றும் தஞ்சாவூர் மராத்திய அரசுகளை ஆண்டனர். சத்ரபதி சிவாஜியின் ஒன்பது வயது பேரனும் சத்திரபதி சம்பாஜியின் ஒன்பது வயது மகனுமான சாகுஜி தில்லி முகலாயர்களின் சிறையில் இருந்தார். மராத்தியப் பேரரசர் சத்திரபதி இராஜாராம் மறைவிற்குப் பின்னர் மராத்தியப் பேரரசிற்கான வாரிசுரிமைப் போட்டி ஏற்பட்டது. சத்திரபதி இராஜராமின் குழந்தை இரண்டாம் சிவாஜியை மராத்தியப் பேரரசராக அறிவித்து, இராஜாராமின் மனைவி தாராபாய் மறைமுகமாக அரசை ஆண்டார்.
1707ல் தில்லி சிறையிலிருந்து விடுதலையான சாகுஜி, மராத்தியப் பேரரசை ஆளும் உரிமை கோரி சதாராவைக் கைப்பற்றி, இராணி தாராபாயையும், குழந்தை இரண்டாம் சிவாஜியையும் கோலாப்பூருக்கு வெளியேற்றினார். இந்நிலையில் ராணி தாராபாயின் சக்களத்தியான (இராஜாராமின் இரண்டாம் மனைவி) இராஜேஸ்பாய், தன் மகன் இரண்டாம் சம்பாஜியை கோல்ஹாப்பூரின் மன்னராக்கினார்.
1818-ஆம் வரை தன்னாட்சியுடன் முடியாட்சியாக கோல்ஹாப்பூர் இராச்சியம் செயல்பட்டது. பின்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டு வந்த இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் இந்த இராச்சியம் 1818-ஆம் ஆண்டு முதல், பிரித்தானிய இந்தியா அரசுக்கு கட்டுப்பட்டு, ஆண்டுதோறும் திறை செலுத்தும் சமஸ்தானமானது. [2][3][4]
15 ஆகஸ்டு 1947 அன்று இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்த இராச்சியம், 1948-இல் மும்பை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று இந்த சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[5] 1956-ஆண்டின் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ், இந்த சமஸ்தானம், தற்கால மகாராட்டிரா மாநிலத்தின் கோல்ஹாப்பூர் மாவட்டமாக உள்ளது.
16°41′N 74°14′E / 16.683°N 74.233°E