கோவா ஆளுநர் | |
---|---|
ராஜ் பவன், கோவா | |
வாழுமிடம் | ராஜ்பவன், பனஜி (கோவா) |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | கோபால் சிங் |
உருவாக்கம் | 30 மே 1987 |
இணையதளம் | www.goa.gov.in |
கோவா ஆளுநர்களின் பட்டியல், கோவா ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் பனஜியில் உள்ள ராஜ்பவன் (கோவா) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது கோவாவின் ஆளுநராக பி. எஸ். சிறீதரன் பிள்ளை உள்ளார்.
கோவா 30 ஜூலை, 1987-க்கு முன்புவரை இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப்பகுதியாக இருந்து வந்தது. அதன் பின் மாநிலமாக மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுநரின் அதிகாரங்கள் பல வகைகளில் மாநிலங்களில் செயல்படுத்தப்படுகின்றன.
முதல் போர்ச்சுகீசியத் தலைமை ஆளுநராக (கவர்னர் ஜெனரல்) 1505 ஆம் ஆண்டு பிரான்சிஸ்கோ டி அல்மீதா வும் கடைசித் தலைமை ஆளுநராக மனுவல் அன்டோனியோ ஒசலோ இ சில்வா 1961 வரை பொறுப்ப வகித்தனர். கோவாவில் மொத்தம் 163 தலைமை ஆளுநர்கள் பொறுப்பு வகித்துள்ளனர். மொத்தப்பட்டியலைக் காண இத்தளத்தை தொடர்பு கொள்ளவும்; ராஜ்பவன் கோவா அரசு இணையம் பரணிடப்பட்டது 2005-02-09 at the வந்தவழி இயந்திரம்.
கோவா, தாமன் டையூவுடன் இணைந்து இந்தியாவின் ஆட்சிப்பகுதியாக 30 மே, 1987 வரை செயல்பட்டது. அதுவரை அப்பகுதியை துணைநிலை ஆளுநர்களே கோவாவின் அட்சி பொறுப்பை ஏற்றிருந்தனர்.[1]
வ.எண் | துணைநிலை ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
---|---|---|---|
1 | கே. பி. கேன்டித் (இராணுவ ஆளுநர்) | 19 டிசம்பர் 1961 | 6 சூன் 1962 |
2 | டி. சிவசங்கர் | 7 சூன் 1962 | 1 செப்டம்பர் 1963 |
3 | எம். ஆர். சச்தேவ் | 2 செப்டம்பர் 1963 | 8 டிசம்பர் 1964 |
4 | ஹரி சர்மா | 12 டிசம்பர் 1964 | 23 பெப்ரவரி 1965 |
5 | கே. ஆர். டம்லே | 24 பெப்ரவரி 1965 | 17 ஏப்ரல் 1967 |
6 | நகுல் சென் | 18 ஏப்ரல் 1967 | 15 நவம்பர் 1972 |
7 | எஸ். கே. பானர்ஜி | 16 நவம்பர் 1972 | 15 நவம்பர் 1977 |
8 | பி. எஸ். கில் | 16 நவம்பர் 1977 | 30 மார்ச் 1981 |
9 | ஜக்மோகன் | 31 மார்ச் 1981 | 29 ஆகத்து 1982 |
10 | ஐ. எச். லத்திப் | 30 ஆகத்து 1982 | 23 பெப்ரவரி 1983 |
11 | கே. டி. சத்தரவாலா | 24 பெப்ரவரி 1983 | 3 சூலை 1984 |
12 | ஐ. எச். லத்திப் | 4 சூலை 1984 | 23 செப்டம்பர் 1984 |
13 | கோபால் சிங் | 24 செப்டம்பர் 1984 | 29 மே 1987 |
கோவா 1987 முதல் ஆட்சிப்பகுதியிலுருந்து மாநிலமாக அறிவிக்கப்பட்டது அதுமுதல் பொறுப்பேற்ற மாநில ஆளுநர்கள்;
வ.எண் | ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
---|---|---|---|
1 | கோபால் சிங் | 30 மே 1987 | 17 சூலை 1989 |
2 | குர்ஷத் ஆலம் கான் | 18 சூலை 1989 | 17 மார்ச் 1991 |
3 | பானு பிரக்காஷ் சிங் | 18 மார்ச் 1991 | 3 ஏப்ரல் 1994 |
4 | பி. ராச்சையா | 4 ஏப்ரல் 1994 | 3 ஆகத்து 1994 |
5 | கோபால ராமானுஜம் | 4 ஆகத்து 1994 | 15 சூன் 1995 |
6 | ரோமேஷ் பண்டாரி | 16 சூன் 1995 | 18 சூலை1996 |
7 | பி. சி. அலெக்சாண்டர் | 19 சூலை 1996 | 15 சனவரி 1998 |
8 | டி. ஆர். சத்தீஷ் சந்திரன் | 16 சனவரி 1998 | 18 ஏப்ரல் 1998 |
9 | ஜே. எப். ஆர். ஜேக்கப் | 19 ஏப்ரல் 1998 | 26 நவம்பர் 1999 |
10 | முகம்மது பசூல் | 26 நவம்பர் 1999 | 25 அக்டோபர் 2002 |
11 | கிதார் நாத் சகானி | 26 அக்டோபர் 2002 | 2 சூலை 2004 |
12 | முகம்மது பசூல் | 3 சூலை 2004 | 16 சூலை 2004 |
13 | எஸ். சி. ஜமீர் | 17 சூலை 2004 | 21 சூலை 2008 |
14 | சிவிந்தர் சிங் சித்து | 21 சூலை 2008 | 29 ஏப்ரல் 2012 |
15 | பி. வி. வாஞ்சூ | 29 ஏப்ரல் 2012 | 12 சூலை 2014 |
16 | மார்கரட் ஆல்வா | 12 சூலை 2014 | 7 ஆகத்து 2014 |
17 | ஓம்.பிரகாஷ் கோலி | 7 ஆகத்து 2014 | 26 ஆகத்து 2014 |
18 | மிருதுளா சின்கா[2] | 26 ஆகத்து 2014 | 25 அக்டோபர் 2019 |
19 | சத்யபால் மாலிக் | 25 அக்டோபர் 2019 | 18 ஆகத்து 2020 |
20 | பகத்சிங் கோசியாரி | 18 ஆகத்து 2020 | 6 சூலை 2021 |
21 | பி. எஸ். சிறீதரன் பிள்ளை | 7 சூலை 2021 | தற்பொழுது கடமையாற்றுபவர் |
{{cite web}}
: Italic or bold markup not allowed in: |publisher=
(help)