கௌதம் கார்த்திக் (நடிகர்)

கௌதம் கார்த்திக்
பிறப்புசெப்டம்பர் 12, 1989 (1989-09-12) (அகவை 35)
சென்னை, தமிழ்நாடு,இந்தியா இந்தியா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்ஹெப்ரோன் பள்ளி, ஊட்டி,
கிறிஸ்து பல்கலைக்கழகம், பெங்களூர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2012–தற்போது வரை
உறவினர்கள்கார்த்திக் (அப்பா )
முத்துராமன் (தாத்தா)

கௌதம் கார்த்திக் (பிறப்பு: 12 செப்டம்பர் 1989)[1] தமிழ்த் திரைப்பட நடிகராவார். கௌதம் கார்த்திக், மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக், இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு மீனவனாகத் தோன்றினார்.[2]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

இவர் பிரபலத் தமிழ் நடிகர் கார்த்திக்கின் மகனும் மறைந்த நடிகர் முத்துராமனின் பேரனுமாவார். இவர் தனது பள்ளிப் படிப்பை ஹெப்ரோன் பள்ளி, ஊட்டி, கிறிஸ்து பல்கலைக்கழகம் பெங்களூரில் முடித்தார். முக்குலத்தோர் இனத்தை சேர்ந்தவர். இவர் மஞ்சிமா மோகனை திருமணம் செய்துள்ளார்.

தொழில்

[தொகு]

2013ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். இவருக்கு ஜோடியாக நடிகை ராதாவின் இளைய மகள் துளசி நாயர் நாயகியாகவும், அர்ஜூன், அரவிந்த் சாமி, லெக்ஷ்மி மஞ்சு, தம்பி ராமையா போன்றோர் முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2013 பிப்ரவரி 1 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.

இவர் தற்பொழுது சிப்பாய், என்னமோ ஏதோ, வை ராஜா வை, இந்திரஜித் போன்ற திரைப்படங்களில் நடித்துகொண்டு இருக்கின்றார். சிப்பாய் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை லட்சுமி மேனன் நடிக்கின்றார்.

நடித்த திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்பு
2013 கடல் தாமஸ்
2014 சிப்பாய் ஜீவா படப்பிடிப்பில்
2014 என்னமோ ஏதோ படப்பிடிப்பில்
2015 வை ராஜா வை திரைப்படம்
2014 இந்திரஜித்

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. https://m.timesofindia.com/topic/Gautham-Karthik
  2. https://cinema.vikatan.com/tamil-cinema/interview/92206-actor-gautham-karthik-interview.html