கௌளை

கௌளை இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப்படும் 3வது சக்கரத்தின் 3 வது மேளமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும். இது ஔடவ- வக்ர ஷாடவ இராகம் ஆகும். இது உபாங்க இராகம் ஆகும்.

இலக்கணம்

[தொகு]
ஆரோகணம்: ஸ ரி11 ப நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி3 ப ம1 ரி131 ரி1
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இதர அம்சங்கள்

[தொகு]
  • ஆரோகணத்தில் க, த வர்ஜம். அவரோகணத்தில் த மட்டும் வர்ஜம்.
  • ஏகசுருதி ரிஷபம், இந்த இராகத்தின் தனித்தன்மையைக் காட்டுகின்றது. இதற்கு கௌளை ரிஷபம் என்றே பெயர்.
  • கன பஞ்சக இராகங்களாகிய நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, சிறீ ஆகியவற்றில் இது 2 ஆவதாக வருகின்றது.
  • தானம் அல்லது மத்திமகால ஆலாபனை இசைக்கும் பொழுது இவ்விராகத்தின் சாயை நன்கு வெளிப்படுகின்றது.
  • பல இசை நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பழமையான இராகம் இது ஆகும். (கௌடை என்று முன்பு அழைக்கப்பட்டுள்ளது).

உருப்படிகள்[1]

[தொகு]
வகை உருப்படி தாளம் கலைஞர்
வர்ணம் செலிமி கோரி ஆதி வீணை குப்பையர்
வர்ணம் பலுமாருநாடோ அட வீணை குப்பையர்
பஞ்சரத்தின கீர்த்தனை துடுகுகல ஆதி தியாகராஜர்
கீதம் பூரணியே ஆதி அருணாச்சல அண்ணாவியார்
கிருதி ப்ரணமாம்யகம் ஆதி மைசூர் வாசுதேவச்சாரியார்
கிருதி ஆண்டருள்வாய் ஆதி தண்டபாணி தேசிகர்
கிருதி சரணாகதம் என்று ஆதி கோபாலகிருஷ்ண பாரதியார்
கிருதி ஸ்ரீமஹா கணபதி திரிபுடை முத்துசுவாமி தீட்சிதர்
கிருதி பவக்கடல் தாண்டிட ஆதி பெரியசாமித் தூரன்

திரையிசையில்

[தொகு]
  • வேதம் நீ புதிய நாதம் நீ ... - கோயில் புறா

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.