2020 பன்னாட்டு 20/20 துடுப்பாட்டப் போட்டியில் உலகக்கோப்பையில், 6 ஓட்டங்கள் அடிக்கும் வர்மா | |||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | சஃபாலி வர்மா | ||||||||||||||
பிறப்பு | 28 சனவரி 2004 ரோத்தக், அரியானா, India[1] | ||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை ஆட்டம் | ||||||||||||||
பங்கு | மட்டைப்பந்தாட்ட வீராங்கனை | ||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||||||||
2019 முதல் | ஐபிஎல் வெலாசிட்டி | ||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||
| |||||||||||||||
மூலம்: Cricinfo, 30 January 2021 |
சஃபாலி வர்மா (Shafali Verma) இந்தியாவைச் சேர்ந்த ஒரு துடுப்பாட்ட வீராங்கனையாவார். 2004 ஆம் ஆண்டு சனவரி மாதம் 28 ஆம் தேதி இவர் பிறந்தார். இந்திய தேசியப் பெண்கள் அணியில் சஃபாலி விளையாடி வருகிறார்.[2][3][4] 2019 ஆம் ஆண்டு தனது 15 ஆவது வயதில் இந்தியப் பெண்கள் 20/20 அணியில் இடம்பிடித்து இந்தியாவுக்காக இவர் பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.[5]
அரியானா மாநிலத்திலுள்ள ரோத்தக் நகரில் சஃபாலி வர்மா பிறந்தார். 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சஃபாலிக்கு 9 வயதாக இருக்கும்போது சச்சின் டெண்டுல்கரின் ரஞ்சிக் கோப்பை இறுதி ஆட்டத்தைப் பார்க்க நேரிட்டதால் இவருக்கு துடுப்பாட்டத்தின் மீது ஆர்வம் உண்டானது. இவரது தந்தையும் சகோதரரும் இந்த ஆர்வத்தை மேலும் தூண்டி ஆதரவளித்துள்ளனர். ஓர் உள்ளூர் போட்டியில் உடல்நிலை சரியிலாமலிருந்த தனது சகோதரனுக்குப் பதிலாக அப்போட்டியில் விளையாட சஃபாலிக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போட்டியில் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகள் இவருக்கு கிடைத்தன.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)