சாகரிகா முகர்ஜி | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 4 செப்டம்பர் 1970 |
இசை வடிவங்கள் | பாலிவுட் பின்னணிப் பாடுதல் |
தொழில்(கள்) | பாடுதல் நடிகை |
இசைக்கருவி(கள்) | குரலிசை |
இசைத்துறையில் | 1979–தற்போது வரை |
சாகரிகா (Sagarika) (செப்டம்பர் 4, 1970) சாகரிகா முகர்ஜியாகப் பிறந்த இவர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பாடகியும், நடிகையும் ஆவார். தனியாகப் பாட ஆரம்பிப்பதற்கு முன்பு, இவர் தனது தம்பி ஷானுடன் சேர்ந்து பாடி வந்தார். அவருடன் சேர்ந்து கியூ-பங்க்,ரூப் இன்கா மஸ்தானா,நௌஜவான் போன்ற இசைத் தொகுப்புகளை வெளியிட்டார்.
சாகரிகா முகர்ஜி 4 செப்டம்பர் 1970 இல் பிறந்தார். 1979ஆம் ஆண்டில் "ஷயாத்" படத்தில் தனது தந்தை மானஸ் முகர்ஜியின் இசையமைப்பில் குழந்தை பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். இவர் தனியாக பாட அரம்பித்த பிறகு மா இசைத் தொகுப்பை வெளியிட்டார். இவரது இட்ஸ் ஆல் எபௌட் லவ் என்ற இசைத் தொகுப்பு 2006இல் யுனிவர்சல் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனம் வெளியிட்டது.
இவர் "பால்" பாடலில் பாக்கித்தான் இசைக்குழுவான ஸ்ட்ரிங்ஸுடன் இணைந்து பணியாற்றினார். இது குழுவின் நான்காவது இசைத் தொகுப்பான தானியில் இடம்பெற்றுள்ளது .
இவர் போர்த்துகீசிய உணவக உரிமையாளரான மார்ட்டின் டா கோஸ்டா என்பவரை மணந்தார். [1]