சகோதரி பிங் | |
---|---|
பிறப்பு | செங்க்மெய், பூச்சௌ, சீனா | சனவரி 9, 1949
இறப்பு | ஏப்ரல் 24, 2014 டெக்சஸ், அமெரிக்கா | (அகவை 65)
தண்டனை | 35 ஆண்டுகள் சிறைவாசம் |
தற்போதைய நிலை | குற்றவாளி |
தொழில் | சிவப்புக் காவலர்கள் அணியின் தலைவர், கடை உரிமையாளர், மனிதக் கடத்தல்காரர் |
துணைவர் | Cheung Yick |
பிள்ளைகள் | 4 |
செங் சூய் பிங் ( Cheng Chui Ping ; ஜனவரி 9, 1949 – ஏப்ரல் 24, 2014), சகோதரி பிங் என்றும் அழைக்கப்படும் இவர், 1984 முதல் 2000 வரை சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு மக்களைக் சட்டவிரோதமாக கொண்டு சென்ற ஓர் சீனப் பெண் ஆவார். சைனாடவுன், மன்ஹாட்டனிலிருந்து செயல்பட்ட பிங், 3,000 சீனர்களை அமெரிக்காவிற்குள் கொண்டு சென்று $40 மில்லியனுக்கும் அதிகமாக சம்பாதித்த “பாம்பு தலை” என்ற பெயருடைய கடத்தல் கும்பலை மேற்பார்வையிட்டார். அமெரிக்காவின் நீதித்துறை இவரை "எல்லா காலத்திலும் மிகவும் வெற்றிகரமாக இருந்த மனிதக் கடத்தல்காரர்களில் ஒருவர்" என்று அழைத்தது.[1]
புஜியான் மாகாணத்தில் பிறந்து வளர்ந்த பிங் 1974 இல் ஆங்காங்கிற்கும், பின்னர் 1981 இல் நியூயார்க் நகரத்திற்கும் குடிபெயர்ந்தார். இவர் 2000 ஆம் ஆண்டில் ஆங்காங்கில் கைது செய்யப்பட்டு 2003 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்.[2] 2006 ஆம் ஆண்டில், இவருக்கு 35 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தான் இறக்கும் வரை அங்கேயே இருந்தார்.
பிங் ஜனவரி 9, 1949 இல், சீனாவின் வடக்கு புஜியானில் உள்ள ஒரு ஏழை விவசாய கிராமமான பூச்சௌவின், மாவேயில் உள்ள செங்மே என்ற ஊரில் செங் சாய் லியுங் என்பவருக்கு ஐந்து குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தார்.[3] சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டபோது பிங்கிற்கு 10 மாதம் நிரம்பியிருந்தது.[3] தனது ஆரம்பக்கல்வியை கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் பயின்றார். ஓய்வு நேரங்களில் குடும்பப் பண்ணையில் வேலை செய்தார். பன்றிகள் மற்றும் முயல்களை வளர்க்க உதவினார். மரம் வெட்டுதல் மற்றும் காய்கறி தோட்டம் பராமரித்தலில் தனது தந்தைக்கு உதவியாக இருந்தார். தனது பன்னிரெண்டு வயதில் எரியூட்டுவதற்காக விறகு சேகரிக்க வேறொரு கிராமத்திற்குச் சென்று கொண்டிருக்கும்போது ஏற்பட்ட ஒரு படகு விபத்தில் உயிர் தப்பினார்.[3] சீனப் பண்பாட்டுப்புரட்சியின் போது, இவர் தனது கிராமத்தில் “சிவப்புக் காவலர்கள் அணி”யின் தலைவராக ஆனார்.[3]
இவரது பதினைந்தாவது வயதில் இவருடைய தந்தை குடும்பத்தை விட்டு வெளியேறி ஒரு வணிகக் கப்பலில் பயணம் செய்து அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறினார். அங்கு அவர் பதின்மூன்று ஆண்டுகள் தங்கியிருந்து பல்வேறு பணிகளை செய்தார். பின்னர் அமெரிக்க குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு 1977 இல் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டார். சீனாவுக்குத் திரும்பிய பிங்கின் தந்தை சட்ட விரோத மனிதக் கடத்தல் தொழிலில் இறங்கினார்.[3]
சகோதரி பிங் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த சியுங் யிக் என்பவரை 1969 இல் மணந்தார்.[3] இவர்களுக்கு 1973 இல் சியுங் உய் என்ற மகள் இருந்தாள்.[3] பின்னர் மூன்று மகன்கள் பிறந்தனர்.[4] குடும்பம் 1974 இல் ஆங்காங்கிற்கு குடிபெயர்ந்தது. அங்கு பிங் சீனாவின் சென்சேன் நகரில் ஒரு தொழிற்சாலையைத் திறந்தார்.[3] நியூயார்க்கில் வசிக்கும் ஒரு வயதான தம்பதியருக்கு உதவி புரிவதற்காக ஜூன் 1981 இல், விண்ணப்பித்தார்.[5] அனுமதி கிடைத்தவுடன் குடும்பம் கனடா வழியாகச் சென்று,[6] 17 நவம்பர் 1981 அன்று, அமெரிக்காவில் உள்ள சைனாடவுன், மன்ஹாட்டனில் குடியேறியது. அங்கு இவர்கள் ஒரு உணவு விடுதியைத் திறந்து நடத்தி வந்தனர்.[3]
சகோதரி பிங் 1980 களின் முற்பகுதியில் தனியாளாகவே மனிதக் கடத்தல் தொழிலைத் தொடங்கினார். போலி அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வணிக விமானம் மூலம் ஒரு சில நேரங்களில் சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஒரு சில சக கிராமவாசிகளை கொண்டு சென்றார்.[7] $35,000 அல்லது அதற்கு மேல் பெற்றுக் கொண்டு அவர்களை அமெரிக்காவிற்கு கொண்டு சென்றார்.
1989 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில், தொராண்டோ பன்னாட்டு விமான நிலையத்தில் காவல்துறையினரால் நடத்தப்பட்ட சோதனையில் சகோதரி பிங்கிற்கு எதிரான ஆதாரங்கள் கிடைத்தன. பல மாதங்களுக்குப் பிறகு, பிங் கைது செய்யப்பட்டார். பிடிபட்ட பின்னர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இவருக்கு சிறுதளவு ஆங்கிலம் தெரிந்ததால் மற்ற கைதிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டார். சீன மொழி பேசும் புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகத்தின் ஒரு முகவருக்கு சைனாடவுனின் நிழல் உலகத்தைப் பற்றிய தகவல்களை வழங்க உடனடியாக ஒப்புக்கொண்டாள். [8]
1989 ஆம் ஆண்டு தியனன்மென் சதுக்கத்தில் நடந்த போராட்டங்களுக்குப் பிறகு, அந்த நேரத்தில் அமெரிக்காவில் இருந்த சீன மாணவர்களுக்கு அமெரிக்க அரசாங்கம் தங்குவதற்கான வாய்ப்பை வழங்கியது. புதிய விதியின் கீழ் வசிப்பிட உரிமை கோருவதற்காக பொய்யான ஆவணங்களைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழைந்தனர். [6]
ஜூன் 6, 1993 அன்று, கோல்டன் வென்ச்சர் என்ற கப்பல் 286 சட்டவிரோத குடியேறிகளுடன் நியூயார்க்கில் உள்ள குயின்சு துறைமுகத்தில் கரை ஒதுங்கியது. பிங் 1984 முதல் அமெரிக்க-சீன கும்பல் தலைவன் புக் சிங் உதவியுடன் அமெரிக்காவிற்கு சுமார் 3,000 புஜியான்களை கடத்தியதாகத் தெரிகிறது.[9] சில நேரங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் சரக்குக் கப்பல் வழியாக ஒரே நேரத்தில் கடத்தப்பட்டனர். மேலும், அவர்களுக்கு ஒரு வேளை உணவும் சிறிதளவு குடிநீரும் மட்டுமே வழங்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டில், ஒரு பெரிய கப்பலில் இருந்து கடத்தி வந்தவர்களை ஏற்றிச் செல்ல சகோதரி பிங் பயன்படுத்திய சிறிய படகுகளில் ஒன்று குவாத்தமாலா கடற்கரையில் கவிழ்ந்து, பதினான்கு பேர் நீரில் மூழ்கினர்.[10] [8]
சகோதரி பிங் தான் கடத்தும் கொண்டு செல்ல பல்வேறு நாடுகளில் பல நபர்களை பணியமர்த்தினார்.[11]
தனது வாடிக்கையாளர்கள் தங்கள் கடத்தல் கட்டணத்தை செலுத்துவதை உறுதிசெய்ய, சைனாடவுனின் மிகவும் கொடூரமான மற்றும் பயமுறுத்தும் புக் சிங் [12] என்ற ஆயுதமேந்திய குண்டர்களை, அமெரிக்காவில் உள்ள தனது வாடிக்கையாளர்களைக் கொண்டு செல்வதற்கும் பாதுகாப்பதற்கும் சகோதரி பிங் பணியமர்த்தினார்.[11]
சகோதரி பிங் தனது சைனாடவுன் வகை கடையிலிருந்து பணத்தை அனுப்பும் வணிகத்தையும் நடத்தி வந்தார்.[11] இவ்வாறாக பிங் சுமார் $40 மில்லியன் குவித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.[13]
அமெரிக்காவின் புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் மற்றும் குடிவரவுத் துறாஇ ஐந்து வருடங்களாக இவரைத் தேடி வந்தன. இவர் சீனாவில் வசிப்பதாக நம்பப்பட்டது. அப்போது அமெரிக்காவுடன் ஒப்படைப்பு ஒப்பந்தம் ஏதுமில்லை. ஏப்ரல் 17, 2000 அன்று ஆங்காங்கிலிருந்து நியூயார்க்கிற்குச் செல்லும் விமானத்தில் இவர் பயணம் செய்தபோது பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் ஆங்காங் போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த 40க்கும் காவலர்களால் இவர் கைது செய்யப்பட்டார். [14][8][13] [15] [14] [16]
நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்திற்கான மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு நடுவர் மன்ற விசாரணைக்குப் பிறகு, ஜூன் 2005 இல் மூன்று தனித்தனி வழக்குகளில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட இவருக்கு 2006 இல் 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.[17][18]
2013 இல், பிங்கிற்கு கணையப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, புற்றுநோய் சிகிச்சையைப் பெறுவதற்காக டெக்சாஸில் உள்ள கார்ஸ்வெல்லில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.[4]
அங்கு பிங்கின் உடல்நிலை மோசமடைந்தது. ஏப்ரல் 24, 2014 அன்று தனது 65 வயதில் இறந்தார்.[4] இவரது இறுதிச் சடங்கு மே 23, 2014 அன்று மன்ஹாட்டனில் உள்ள கால்வாய் தெருவில் உள்ள போ ஃபூக் இல்லத்தில் நடைபெற்றது.[19]
CHENG CHUI PING, a/k/a "Sister Ping", was sentenced today to 35 years in prison for her role in leading an international alien smuggling ring. Sister Ping is one of the first, and ultimately most successful, alien smugglers of all time.
CHENG CHUI PING, a/k/a "Sister Ping", was sentenced today to 35 years in prison for her role in leading an international alien smuggling ring. Sister Ping is one of the first, and ultimately most successful, alien smugglers of all time.
CHENG CHUI PING, a/k/a "Sister Ping", was sentenced today to 35 years in prison for her role in leading an international alien smuggling ring. Sister Ping is one of the first, and ultimately most successful, alien smugglers of all time.
CHENG CHUI PING, a/k/a "Sister Ping", was sentenced today to 35 years in prison for her role in leading an international alien smuggling ring. Sister Ping is one of the first, and ultimately most successful, alien smugglers of all time.
CHENG CHUI PING, a/k/a "Sister Ping", was sentenced today to 35 years in prison for her role in leading an international alien smuggling ring. Sister Ping is one of the first, and ultimately most successful, alien smugglers of all time.