சக் வைல்டு | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிற பெயர்கள் | லிக்விட் மைன்ட் |
பிறப்பு | செப்டம்பர் 22, 1946[1] கான்சசு, மிசூரி, அமெரிக்கா |
இசை வடிவங்கள் |
|
தொழில்(கள்) | இசையமைப்பாளர், இசையாக்கம் செய்பவர், பாடலாசிரியர் |
இசைத்துறையில் | 1972-தற்போது வரை |
வெளியீட்டு நிறுவனங்கள் | ரியல் மியூசிக், சக் வைல்டு ரெக்கார்ட்சு |
இணைந்த செயற்பாடுகள் | லிக்விட் மைன்ட், மிஸ்ஸிங் பெர்சன்ஸ் |
இணையதளம் | www |
சக் வைல்டு என்பவர் லிக்விட் மைன்ட் என்ற பெயரில் இயங்கி வரும் ஒரு இசையமைப்பாளர். இவரது ஆக்கங்கள் மந்த தாளகதி இசை[2], இளைப்பாறல் இசை, சூழலிசை உள்ளிட்ட மின்னணுவியல் இசை வடிவங்களாக உள்ளன. தனியிசை வெளியீட்டிற்கு முன்னர் இவர் சில குழுக்களுக்கு இசை அமைப்பதிலும் பாடல்களை எழுதுவதிலும் உதவியுள்ளார்[3].
1980களில் ஓயாத வேலைப்பளுவினாலும் தூக்கமின்மையாலும் பேரச்சத் தாக்கிற்கு உள்ளானார் சக். மன அமைதியைத் தேடி ஒரு கடற்கரையில் அமர்ந்திருந்தபோது, கடலலையின் ஓயாத ஓசை அவருக்கு அமைதியைத் தந்ததை உணர்ந்து, கடல் (Liquid) மனதை (Mind) அமைதிப்படுத்துவதைப் போன்ற இசையை உருவாக்க வேண்டும் என்று எண்ணி லிக்விட் மைன்ட் என்ற பெயரை இட்டு, அப்பெயரிலேயே அமைதி தரும் இசையை வெளியடத் தொடங்கினார்[4].
லிக்விட் மைன்ட் என்ற பெயரில் இதுவரை 15 இசைத்தொகுப்புகளையும் மூன்று இசைத்திரட்டுகளையும் சக் வெளியிட்டுள்ளார்[5]. அவற்றுள் சில:
ஆண்டு | இசைத்தொகுப்பின் தலைப்பு | வெளியிட்ட நிறுவனம் |
---|---|---|
1994 | ஆம்பியன்ஸ் மினிமஸ் | ரியல் மியூசிக் |
1996 | ஸ்லோ வேல்டு | சக் வைல்டு ரெக்கார்ட்சு |
1999 | லிக்விட் மைன்ட் III: பேலன்ஸ் | ரியல் மியூசிக் |
2020 | XIII மைன்ட்ஃபுல்னஸ் | கோல்டு மாஸ்க் மியூசிக் |
2021 | மியூசிகல் ஹெல்த்கேர் | ரியல் மியூசிக் |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)