சக்காரான் டன்டாய் Sakaran Dandai ساکران محمد هاشم دانداي | |
---|---|
8-ஆவது சபா ஆளுநர் | |
பதவியில் 1 சனவரி1995 – 31 திசம்பர் 2002 | |
8-ஆவது சபா முதலமைச்சர் | |
பதவியில் 17 மார்ச் 1994 – 27 திசம்பர் 1994 | |
ஆளுநர் | சபா முதலமைச்சர் |
முன்னையவர் | ஜோசப் பைரின் கித்திங்கான் |
பின்னவர் | சாலே சாயிட் கெருவாக் |
செம்பூர்ணா மக்களவைத் தொகுதி | |
பதவியில் 3 ஆகஸ்டு 1986 – 25 ஏப்ரல் 1995 | |
முன்னையவர் | புதிய தொகுதி |
பின்னவர் | சாபி அப்டால் |
சுலாபாயான் சட்டமன்றத் தொகுதி | |
பதவியில் 1985–1994 | |
செம்பூர்ணா சட்டமன்றத் தொகுதி | |
பதவியில் 1967–1985 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | Sakaran Mohd Hashim bin Dandai 15 ஏப்ரல் 1930 கம்போங் ஆயர், செம்பூர்ணா, பிரித்தானிய வடக்கு போர்னியோ |
இறப்பு | 30 ஆகத்து 2021 கோத்தா கினபாலு, சபா, மலேசியா | (அகவை 91)
இளைப்பாறுமிடம் | சபா மாநிலக் கல்லறை, கோத்தா கினபாலு, |
அரசியல் கட்சி | ஐக்கிய சபா தேசிய அமைப்பு (USNO) அம்னோ (UMNO) |
பிற அரசியல் தொடர்புகள் | ஐக்கிய சபா தேசிய அமைப்பு (BN) பெரிக்காத்தான் நேசனல் (PN) முவாகாட் நேசனல் (MN) |
துணைவர்(கள்) | அலிமா சித்தி ருக்காயா அப்துல்லா |
பெற்றோர் |
|
உறவினர் | சாபி அப்டால் |
துன் சக்காரான் டன்டாய் (ஆங்கிலம்; Sakaran Dandai; மலாய்: Tun Datuk Seri Panglima Haji Sakaran bin Dandai) (பிறப்பு: 15 ஏப்ரல் 1930; இறப்பு: 30 ஆகஸ்டு 2021) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; மார்ச் 1994 முதல் 26 திசம்பர் 1994 வரை, மலேசியா, சபா மாநிலத்தின் 8-ஆவது முதலமைச்சராகவும்; 1995 முதல் 2002 வரை சபாவின் 8-ஆவது ஆளுநராகவும்; ஆகஸ்டு 1986 முதல் ஏப்ரல் 1995 வரை மலேசியா, சபா, செம்பூர்ணா மக்களவைத் தொகுதியின் உறுப்பினராகவும் பணியாற்றியவர் ஆவார்.[1]
1990-இல், இவர் மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது அவர்களால் சபாவின் நிலங்கள் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
சக்காரான் டன்டாய், 1937-1941-ஆம் ஆண்டுகளில் செம்பூர்ணா தொடக்கப் பள்ளியில் பயின்றார். பிரித்தானிய போர்னியோவில் சப்பானிய ஆக்கிரமிப்பின் போது, அவர் சில முறை சப்பானுக்கு பயணம் செய்தார். அவர் செம்பூர்ணா நகருக்குத் திரும்பியதும், சபா அரசுப் பள்ளியில் பயின்றார். மேலும், அவர் 1945-1948 வரை சமயக் கல்வி படித்தார்.
1949-1967 வரை, அவர் செம்பூர்ணா மற்றும் லகாட் டத்துவில் சபா மாநில அரசாங்கத் துறையில் சேவை செய்தார்.
சக்காரான் டன்டாய் 1980-களில் நிறுவப்பட்ட சபா அம்னோவின் தலைவரானார். 1990-இல் ஜோசப் பைரின் கித்திங்கான் தலைமையிலான ஐக்கிய சபா கட்சியின் (PBS) (1976–1984) சபா மாநில அரசாங்கம் தோல்வியடைந்த பிறகு அம்னோ உருவாக்கப்பட்டது.
1994-ஆம் ஆண்டு சபா மாநிலத் தேர்தலில், ஜோசப் பைரின் கித்திங்கான் தோற்கடிக்கப்பட்டதும், சக்காரான் டன்டாய் மார்ச் 1994-இல் சபாவின் 8-ஆவது முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.
1994 திசம்பர் 26-இல், முதலமைச்சர் பதவி சாலே சாயிட் கெருவாக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போதைய மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது, தம்முடைய சபா மாநிலத் தேர்தல் பரப்புரையை வெற்றியடையச் செய்வதற்காகவும்; சபா மாநில அரசியல் கொந்தளிப்பைத் தீர்ப்பதற்காகவும்; சபா முதலமைச்சர் பதவியை சுழற்சி முறையில் கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டார்.
அதன் விளைவாக முசுலிம் பூமிபுத்ரா, சீனர் மற்றும் முசுலிம் அல்லாத பூமிபுத்ரா; ஆகிய மூன்று முக்கிய இனங்களின் தலைவர்கள் ஒவ்வொருவரும், இரண்டு ஆண்டு காலத்திற்கு சபா முதலமைச்சர் பதவிக்குத் தலைமை தாங்கினர்.
சக்காரான் டன்டாய், சாலே சாயிட் கெருவாக், யோங் தெக் லீ, பெர்னார்ட் கிலுக் தும்போக், ஒசு சுக்காம், சோங் கா கியாட் மற்றும் மூசா அமான் என ஏழு பேர் மாறி மாறி முதல்வர் பதவியை வகித்தனர்.
2021 ஆகஸ்டு மாதம், சக்காரான் டன்டாய் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு, கோத்தா கினபாலுவில் உள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.[2] ஆகஸ்டு 30 அன்று காலை 5:30 மணிக்கு, 91 வயதான சக்காரான் டன்டாய், கோவிட்-19 காரணமாக இறந்தார்.[3] அவர் கோத்தா கினபாலு, சபா மாநில பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள வீரர்கள் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.[4]
ஆண்டு | அரசு | வாக்குகள் | % | எதிரணி | வாக்குகள் | % | ||
---|---|---|---|---|---|---|---|---|
மலேசியப் பொதுத் தேர்தல், 1986 | சக்காரான் டன்டாய் (அசுனோ) | 6,063 | 51.26% | அப்டில்லா அப்துல் அமீட் (பெர்ஜாயா) | 4,116 | 34.80% | ||
மலேசியப் பொதுத் தேர்தல், 1990 | சக்காரான் டன்டாய் (அம்னோ) | 10,832 | 58.85% | அப்டில்லா அப்துல் அமீட் (சுயேச்சை) | 7,574 | 41.15% |