சக்குன் மொழி | |
---|---|
Jakun Language Bahasa Jakun | |
Orang Hulu | |
நாடு(கள்) | மலேசியா |
பிராந்தியம் | ஜொகூர், பகாங் |
இனம் | 32,000 (2022) |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | ? (2022)[1] |
ஆஸ்திரோனீசிய
| |
எழுதப்படாதது | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | jak |
மொழிக் குறிப்பு | jaku1244[2] |
சக்குன் மொழி, (மலாய்: Bahasa Jakun; ஆங்கிலம்: JakunLanguage); என்பது மலேசியாவில் சக்குன் மக்கள் பேசும் மொழிகளில் ஒன்றாகும்.
ஆஸ்திரோனீசிய மொழிகள் குடும்பத்தின் மலாய-பொலினீசிய மொழிகள் பிரிவில் ஒரு துணைப் பிரிவான மலாய மொழிகள் பிரிவில் உள்ள சக்குன் மொழி, தீபகற்ப மலேசியாவில் சக்குன் மக்களின் முதன்மை மொழியாக உள்ளது.
இந்த மொழி சாகுன் (Djakun), சகூன் (Jakoon), சக்குட் (Jaku’d), சகுட்ன் (Jakud’n) அல்லது ஒராங் உலு (Orang Hulu) என்றும் அழைக்கப்படுகிறது.[3]
தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகள்; தீபகற்ப மலேசியாவின் உள்நாட்டுப் புறங்கள்; பகாங், பெக்கான், பைராங் ஆற்றின் சுற்றுப்புறங்கள்; ஜொகூர், செரி காடிங் பகுதிகள்; ஜொகூர், சிகாமட் மாவட்டம், மூவார் மாவட்டம், தங்காக் மாவட்டம் ஆகிய மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகள் வரை சக்குன் மொழி பேசப்படுகிறது.[4]
சக்குன் பழங்குடியினர் முன்பு ஒராங் உலு; அதாவது, "உட்புற மக்கள்" என்று அழைக்கப்பட்டனர். இன்றைய உள்ளூர் மலாய் பேச்சுவழக்கில், "சகுன்" என்ற பெயர் "அடிமை" என்ற பொருளைக் கொண்டுள்ளது. இவர்களில் பெரும்பாலோர் கடந்த 7000 ஆண்டுகளாக, மலேசியாவின் தெற்குப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.[5]