சக்தி சௌந்தர்ராஜன்

சக்தி சௌந்தர்ராஜன்
பிறப்பு10 மார்ச்சு 1982 (1982-03-10) (அகவை 42)
இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, கரூர்
தேசியம்இந்தியர்
பணிஇயக்குநர்
திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2010–தற்போது வரை

சக்தி சௌந்தர் ராஜன் (Shakti Soundar Rajan) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் முதன்மையாக தமிழகத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார்.[1]

தொழில்

[தொகு]

2010 இல் வெளியான நாணயம் திரைப்படத்தின் வழியாக இவர் இயக்கநராக அறிமுகமானார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 2014இல் நாய்கள் ஜாக்கிரதை என்ற திரைப்படத்தை இயக்கினார். இது விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் நல்ல வர்வேற்பைப் பெற்றது.[2] இந்த படத்திற்கு பிறகு, சக்தி தொழில் வாழ்கையில் ஒரு உயர்வைப் பெற்றார். மிருதன் (2016) படத்தில் நடைபிண படத்தையும், டிக் டிக் டிக் (2018) இல் ஒரு விண்வெளிப் படத்தையும் தொடர்ந்து, சக்தி சௌந்தர் ராஜன் நாட்டின் முதல் நேரடி-அசைவூட்ட படத்தோடு வந்தார். இவரது டெடி (2021) இந்திய அசைவூட்ட நிறுவனத்தைப் பயன்படுத்தி ஒரு சிறப்பு அசைவூட்ட கதாபாத்திரத்தை வடிவமைத்த முதல் தமிழ் திரைப்படம் ஆகும். மேலும் ரஜினிகாந்தின் கோச்சடையானுக்குப் பிறகு, மோஷன்-கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய இரண்டாவது தமிழ் படம். என்ற பெருமையைப் பெற்றது.[3]

இயக்கும் பாணி

[தொகு]

சக்தி சௌந்தர் ராஜன் ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ் திரைப்படங்களில் புதிய கருத்துருக்களை அறிமுகப்படுத்தியவர். இவரது இரண்டாவது படமான நாய்கள் ஜாகிரதை படமானது நாயை முக்கிய கதாநாயகனாகக் கொண்ட முதல் தமிழ் திரைப்படமாகும்.[4] இவரது மூன்றாவது படமான, மிருதன் தமிழ் மொழியில் நடைபிணங்களை அடிப்படையாக கொண்ட முதல் இந்தியப் படம்.[5] இவரது நான்காவது படமான, டிக் டிக் டிக், இந்தியாவின் முதல் தமிழ் விண்வெளி படம் ஆகும்.[6] ராஜனின் அண்மைய படமான டெடி, இந்திய அசைவூட்ட நிறுவனத்தைப் பயன்படுத்தி ஒரு சிறப்பு அசைவூட்ட கதாபாத்திரத்தை வடிவமைத்த முதல் தமிழ் திரைப்படம் மற்றும் ரஜினிகாந்தின் கோச்சடையானுக்குப் பிறகு, மோஷன்-கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய இரண்டாவது தமிழ் படம் ஆகும்.[7]

தனது முதல் இரண்டு படங்களுக்கு, ராஜன் இசையமைப்பாளர்கள் ஜேம்ஸ் வசந்தன் மற்றும் தரண் குமார் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். அதன் பிறகு இவர் தனது அடுத்தடுத்த படங்களுக்கு இசையமைப்பாளர் இமானுடன் பணிபுரிந்தார்.

திரைப்படவியல்

[தொகு]
ஆண்டு திரைப்படம் பங்களிப்புகள் குறிப்புகள்
இயக்குநர் எழுத்தாளர்
2010 நாணயம் ஆம் ஆம்
2014 நாய்கள் ஜாக்கிரதை ஆம் ஆம்
2016 மிருதன் ஆம் ஆம்
2018 டிக் டிக் டிக் ஆம் ஆம்
2021 டெடி ஆம் ஆம்

குறிப்புகள்

[தொகு]
  1. "Shakti Soundar Rajan movies, filmography, biography and songs - Cinestaan.com". Cinestaan. Archived from the original on 19 January 2021. பார்க்கப்பட்ட நாள் 2022-10-19.
  2. https://nettv4u.com/celebrity/tamil/director/shakti-soundar-rajan
  3. https://www.cinemaexpress.com/stories/interviews/2021/mar/13/shakti-soundar-rajan-on-aryas-teddy-23311.html
  4. Raghavan, Nikhil (27 July 2013). "Etcetera: Pet subject". The Hindu. https://www.thehindu.com/features/cinema/cinema-columns/etcetera-pet-subject/article4959764.ece. 
  5. https://gulfnews.com/entertainment/indias-first-zombie-film-is-in-tamil-1.1674415
  6. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/photo-features/five-reasons-to-watch-jayam-ravi-starrer-tik-tik-tik/indias-first-space-thriller/photostory/64694161.cms
  7. "Shakti Soundar Rajan: All the VFX work for Teddy was done not in LA or Mumbai, but in Saligramam". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-19.

வெளி இணைப்புகள்

[தொகு]