சங்கரி சந்திரன் | |
---|---|
பிறப்பு | 1974/1975 (அகவை 49–50) இலண்டன், இங்கிலாந்து |
தொழில் | புதின எழுத்தாளர் |
கல்வி நிலையம் | நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | Miles Franklin Award 2023 Chai Time at Cinnamon Gardens – winner |
சங்கரி சந்திரன் (Shankari Chandran, பிறப்பு 1974/75) [1] என்பவர் ஒரு ஆத்திரேலிய தமிழர், ஆத்திரேலிய புதின ஆசிரியர் ஆவார். [2] இவர் தனது மூன்றாவது புதினமான சாய் டைம் அட் சின்னமன் கார்டன்ஸ் மூலம் 2023 ஆண்டுக்கான மைல்ஸ் பிராங்க்ளின் இலக்கிய விருதைப் பெற்றார்.
சங்கரி சந்திரன் 1974/75 இல் இலண்டனில் பிறந்து, கான்பெராவில் வளர்ந்தார். இவரது பெற்றோர் இலங்கை, யாழ்ப்பாணத்தின், அளவெட்டியை பூர்வீகமாக கொண்ட ஏதிலிகளாவர். [1] இவர் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார், பின்னர் இலண்டனில் மனித உரிமைகள் வழக்கறிஞராக பணியாற்றினார். [3] [4] பின்னர் குடும்பத்துடன் ஆத்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்தார்.[5]
இவரது முதல் புதினமான சாங் ஆஃப் தி சன் காட், 2017 சனவரியில் இலங்கையில் வெளியிடப்பட்டது. அது 2019 இன் சர்வதேச டப்ளின் இலக்கிய விருதுக்காக நீண்ட பட்டியலில் இருந்தது. பின்னர் இது ஆத்திரேலியாவில் 2022 நவம்பரில் அல்டிமோ பிரஸ் மூலம் வெளியிடப்பட்டது. [6]
இவரது இரண்டாவது புதினமான, தி பேரியர், ஆஸ்திரேலியாவில் 2017 சூனில் வெளியிடப்பட்டது. [7] இது ஒரு நீண்ட அறிவியல் புனைகதைக்கான நார்மா கே. ஹெமிங் விருதுக்கான இறுதிப் போட்டியில் கலந்து கொண்டது. [7] [8]
இவர் 2022 இல் சாய் டைம் அட் சின்னமன் கார்டன்ஸ் புதினத்தை எழுதினார். இது 2023 மைல்ஸ் ஃபிராங்க்ளின் விருதைப் பெற்றது. [9] மேலும் 2023 ஆஸ்திரேலிய வெளியீட்டாளர் சங்கத்தின் புத்தக வடிவமைப்பு விருதுகளில் ஜெசிகா கிரூசசாங்கின் வடிவமைப்பிற்கான சிறந்த வடிவமைக்கப்பட்ட வணிக புனைகதை அட்டை விருதுக்காக பட்டியலிடப்பட்டது. [10]
இவரது நான்காவது புதினமான சேஃப் ஹேவன், மே 2024 இல் அல்டிமோ பிரஸ் மூலம் வெளியிடப்படவுள்ளது. [11]