சங்கவி (நடிகை)

சங்கவி
இயற் பெயர் காவ்யா
பிறப்பு அக்டோபர் 4, 1975 (1975-10-04) (அகவை 49)
மைசூர், கர்நாடகம், இந்தியா
வேறு பெயர் காவ்யா ரமேஷ், சங்கவி
தொழில் நடிகை
நடிப்புக் காலம் 1993-தற்போது

சங்கவி (பிறப்பு: அக்டோபர் 4, 1975) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் காவ்யா ரமேஷ். திரையுலகிற்காக தன் பெயரை சங்கவி என மாற்றிக் கொண்டார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் இந்தியாவின் கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தவர். இவருடைய தந்தை மைசூர் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் மட்டும் அல்லாமல் காது, மூக்கு, தொண்டை மருத்துவரும் ஆவார். சங்கவி தன்னுடைய பள்ளி படிப்பை மைசூரில் உள்ள மரியப்பா பள்ளியில் பயின்றார்.[1][2][3]

திரைப்பட வாழ்க்கை

[தொகு]

இவர் 1993ம் ஆண்டு அஜித்தின் முதல் படமான அமராவதியில்தான் அறிமுகமானார்.இதனை தொடர்ந்து விஜயுடன் மட்டும் ரசிகன், கோமுத்தூர் மாப்ளே உள்பட 4 படங்களில் நடித்தார். இவர் கவர்ச்சி கலந்த கதாநாயகியாக வெற்றிகரமாக வலம் வந்தார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் மொத்தம் 90 படங்களுக்கு மேல் நடித்தார்.இவர் அந்த கால கட்டத்தில் சிறந்து விளங்கிய சரத்குமார்,கார்த்திக், பிரபு, விஜய் , அஜித், ராம்கி, பிரசாந்த் , விஜயகாந்த், சிரஞ்சீவி, விஷ்ணுவர்தன், கமலஹாசன், ரஜினிகாந்த், தனுஷ், சத்தியராஜ், ஜூனியர் என்டிஆர் போன்ற கதாநாயகர்களுடன் நடித்தார்.

சின்னத்திரை தொடர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "I still have a lot to learn about acting, says Sangavi". The Hindu. 6 December 2006. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/i-still-have-a-lot-to-learn-about-acting-says-sangavi/article3030709.ece. 
  2. Balachandran, Logesh. "Sanghavi makes a comeback in Kani's film". The Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Sanghavi-makes-a-comeback-in-Kanis-film/articleshow/46944952.cms. 
  3. "Actress Sangavi - N. Venkatesh Wedding- Telugu cinema news".

வெளி இணைப்புகள்

[தொகு]