சஜன் பிரகாசு

சஜன் பிரகாசு
தனிநபர் தகவல்
முழு பெயர்சஜன் பிரகாசு
பிறப்புசெப்டம்பர் 14, 1993 (1993-09-14) (அகவை 31)
இடுக்கி மாவட்டம், கேரளம், இந்தியா
உயரம்5 அடி 10 அங் (1.78 மீ)
எடை154.324 pounds (70.000 kg)
விளையாட்டு
விளையாட்டுநீச்சல்
நீச்சல்பாணிகள்கட்டற்ற பாணி, வண்ணாத்திப் பாணி
பதக்க சாதனைகள்
நாடு  இந்தியா
நீச்சல்
இந்தியத் தேசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2014 இந்தியா 100மீ வண்ணாத்தி

சஜன் பிரகாசு (Sajan Prakash, பிறப்பு:செப்டம்பர் 14, 1993) இந்திய நீச்சல்காரர். 2015இல் கேரளத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் கட்டற்ற பாணி, வண்ணாத்திப் பாணி, தொடர்நீச்சற் போட்டிகளில் பங்கேற்றார். பெப்ரவரி 8, 2015இல் 6 தங்கப் பதக்கங்களையும் 3 வெள்ளி பதக்கங்களையும் வென்று சாதனை படைத்து அந்தப் போட்டிகளின் சிறந்த மெய்வல்லுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரியோ ஒலிம்பிக்கில் இவர் இந்தியா சார்பாக 200மீ வண்ணாத்திப் பாணி நீச்சற்போட்டியில் பங்கேற்றார்.[1][2]

வாழ்க்கை வரலாறு

[தொகு]

செப்டம்பர் 14, 1993 அன்று கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் வாழத்தோப்பு சிற்றூரில் பிறந்தார்.[3] பன்னாட்டு தடகள வீரர் சாஜிமோள் இவரது தாய் ஆவார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் அன்னை பணி புரிந்து வந்ததால் அங்கு நீச்சல் பயின்றார். நெய்வேலி சவகர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வி பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் திறந்த பல்கலைக்கழகத் திட்டத்தில் கணினி பயன்பாட்டில் இளங்கலைப் பட்டம் பெற்று முதுகலைப் பட்டப்படிப்பை தொடர்கிறார். இந்திய இரயில்வேயில் பணி புரிகின்றார்.[4]

பணிவரலாறு

[தொகு]

200 மீ வண்ணாத்திப் பாணியிலும் 1500 மீ கட்டற்றப்பாணியிலும் தேசிய சாதனைக்கு உரிமையாளராக உள்ளார்.

35வது இந்திய தேசிய விளையாட்டுக்கள், கேரளா 2015

[தொகு]
  • 100 மீட்டர் வண்ணாத்திப் பாணி - தங்கம்
  • 200 மீட்டர் வண்ணாத்திப் பாணி - தங்கம்
  • 200 மீட்டர் கட்டற்றப் பாணி - வெள்ளி
  • 400 மீட்டர் கட்டற்றப் பாணி - தங்கம்
  • 800 மீட்டர் கட்டற்றப் பாணி - தங்கம்
  • 1500 மீட்டர் கட்டற்றப் பாணி - தங்கம்
  • 4x100 மீட்டர் தொடர் கட்டற்றப் பாணி - தங்கம்
  • 4x100 மீட்டர் தொடர் கலவை - வெள்ளி

68வது இந்தியா தேசிய நீச்சற் போட்டிகள், கொல்கத்தா 2014

[தொகு]
  • 1500 மீட்டர் கட்டற்றப் பாணி - தங்கம்

பொதுநலவாய விளையாட்டுக்கள், 2014 கிளாசுக்கோ, இசுக்காட்லாந்து

[தொகு]
  • 100 மீட்டர் வாண்ணாத்தி - அரையிறுதிக்கு முன்னேறவில்லை

மேற்சான்றுகள்

[தொகு]
  1. Amitabha Das Sharma (2014-11-13). "Sajan Prakash creates new national record". Thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2015-06-01.
  2. "21-year-old Sajan Prakash sets new record at 5 swimming events, bags 5 medals at National Games:IBNLive Videos". Ibnlive.in.com. Archived from the original on 2015-02-22. பார்க்கப்பட்ட நாள் 2015-06-01. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-08-07. பார்க்கப்பட்ட நாள் 2016-08-25.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-12. பார்க்கப்பட்ட நாள் 2016-08-25.